search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க சங்கிலி"

    • சிறுமியின் கழுத்தில் கிடந்த சுமார் ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான 1½ பவுன் எடையுள்ள தங்க சங்கிலி
    • செயின் பறிப்பின் போது சிறுமியின் பின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் கிளைசன் (வயது 39). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இளைய மகள் ஹெர்பின் கிளைசின் (10) என்பவர் வீட்டருகில் உள்ள சாலையில் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த யூஜின் (39) என்பவர் சிறுமியின் கழுத்தில் கிடந்த சுமார் ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான 1½ பவுன் எடையுள்ள தங்க சங்கிலியை பறித்து விட்டு, பைக்கில் தப்பி சென்றுள்ளார். செயின் பறிப்பின் போது சிறுமியின் பின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து யூஜினை கைது செய்தனர்.

    • மூதாட்டி சத்தம் போடவே அழகிய மண்டபம் சந்திப்பில் பஸ் நிறுத்தப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்தவர் அல்போன்சாள். (வயது 60). இவர் தனது உறவினரை பார்க்க ஆலங்கோடு வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்ல குலசேகரம் அரசு பஸ்ஸில் ஏறியுள்ளார்.

    பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது, இதனை பயன்படுத்தி மர்ம நபர் அல்போன்சாளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை நைசாக பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டான். அழகியமண்டபம் பகுதி யில் வரும் போது இதை கண்ட மூதாட்டி சத்தம் போடவே அழகிய மண்டபம் சந்திப்பில் பஸ் நிறுத்தப்பட்டது.

    இது சம்மந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் அல்போன்சாள் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லுக்கூட்டம் சந்திப்பில் உள்ள கடைக்கு சென்றார்.திரும்பி வீட்டிற்கு வரும்போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை
    • கண்டெடுத்த தங்க சங்கிலியை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த அமலோற்பவத்தை குளச்சல் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரது மனைவி லெனின் மேரி (வயது 60). ஓய்வுபெற்ற ஆசிரியர்.

    சம்பவத்தன்று இவர் தனது பேரக்குழந்தையுடன் கல்லுக்கூட்டம் சந்திப்பில் உள்ள கடைக்கு சென்றார்.திரும்பி வீட்டிற்கு வரும்போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.

    உடனே அவர் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர் திரும்பி வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அமலோற்பவமேரி (55) என்பவர் பஸ்சில் நாகர்கோவில் சென்று விட்டு மாலை கல்லுக்கூட்டம் சந்திப்பு நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி சென்றார்.

    அப்போது அவர் சாலையோரம் கிடந்த தங்க சங்கிலியை கண்டெடுத்து, அதனை குளச்சல் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து அறிந்த லெனின் மேரி குளச்சல் போலீசில் முறையிட்டார். விசாரணைக்கு பின்பு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி குழந்தையின் தங்க சங்கிலியை லெனின் மேரியிடம் ஒப்படைத்தார்.

    சாலையோரம் கண்டெடுத்த தங்க சங்கிலியை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த அமலோற்பவத்தை குளச்சல் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.
    • கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமி.

    இவரது மனைவி வசந்தா (வயது 68) . இவர் பாலையூரில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.

    அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார். பலரிடம் கேட்டு பார்த்தும் பயனில்லை.

    இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது62). இவரது மனைவி ஜானகி(56) . கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டர் சைக்கிளில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்ற தம்பதியினர் பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்து தங்கச் சங்கிலி பறித்து சென்ற வாலிபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதன் மூலம் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வீட்டை பூட்டிவிட்டு அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார்
    • வீட்டின் பூட்டை உடைத்து தங்க சங்கிலியை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஷீலாராணி (வயது 42). கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    ஷீலாராணி சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஷீலாராணி அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."


    • பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தனர்
    • வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்கு டி ஊராட்சியை சேர்ந்தவர் துரை மனைவி சுதா (வயது 35) இவர் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதில், சம்பவத்தன்று வீட்டின் கதவை திறந்து வைத்து எனது கணவருடன் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது சில மர்ம நபர்கள் என் கழுதில் அணிந்திருந்த 4.5 பவுன் சங்கிலியை பறிதுது சென்றனர் என்று தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×