தக்கலை அருகே அரசு பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

மூதாட்டி சத்தம் போடவே அழகிய மண்டபம் சந்திப்பில் பஸ் நிறுத்தப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை அருகே அரசு பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
Published on

கன்னியாகுமரி :

திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியை சேர்ந்தவர் அல்போன்சாள். (வயது 60). இவர் தனது உறவினரை பார்க்க ஆலங்கோடு வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்ல குலசேகரம் அரசு பஸ்ஸில் ஏறியுள்ளார்.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது, இதனை பயன்படுத்தி மர்ம நபர் அல்போன்சாளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை நைசாக பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டான். அழகியமண்டபம் பகுதி யில் வரும் போது இதை கண்ட மூதாட்டி சத்தம் போடவே அழகிய மண்டபம் சந்திப்பில் பஸ் நிறுத்தப்பட்டது.

இது சம்மந்தமாக தக்கலை போலீஸ் நிலையத்தில் அல்போன்சாள் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com