search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை தவறவிட்ட தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
    X

    குழந்தை தவறவிட்ட தங்க சங்கிலியை போலீசில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

    • கல்லுக்கூட்டம் சந்திப்பில் உள்ள கடைக்கு சென்றார்.திரும்பி வீட்டிற்கு வரும்போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை
    • கண்டெடுத்த தங்க சங்கிலியை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த அமலோற்பவத்தை குளச்சல் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கல்லுக்கூட்டத்தை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரது மனைவி லெனின் மேரி (வயது 60). ஓய்வுபெற்ற ஆசிரியர்.

    சம்பவத்தன்று இவர் தனது பேரக்குழந்தையுடன் கல்லுக்கூட்டம் சந்திப்பில் உள்ள கடைக்கு சென்றார்.திரும்பி வீட்டிற்கு வரும்போது குழந்தையின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.

    உடனே அவர் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர் திரும்பி வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அமலோற்பவமேரி (55) என்பவர் பஸ்சில் நாகர்கோவில் சென்று விட்டு மாலை கல்லுக்கூட்டம் சந்திப்பு நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி சென்றார்.

    அப்போது அவர் சாலையோரம் கிடந்த தங்க சங்கிலியை கண்டெடுத்து, அதனை குளச்சல் போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து அறிந்த லெனின் மேரி குளச்சல் போலீசில் முறையிட்டார். விசாரணைக்கு பின்பு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி குழந்தையின் தங்க சங்கிலியை லெனின் மேரியிடம் ஒப்படைத்தார்.

    சாலையோரம் கண்டெடுத்த தங்க சங்கிலியை நேர்மையாக போலீசில் ஒப்படைத்த அமலோற்பவத்தை குளச்சல் போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×