மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்கள்

கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வாலிபர்களின் உருவம். 
கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வாலிபர்களின் உருவம். 
Published on

பல்லடம் :

பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது62). இவரது மனைவி ஜானகி(56) . கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக நேற்று மாலை மோட்டர் சைக்கிளில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்ற தம்பதியினர் பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்து தங்கச் சங்கிலி பறித்து சென்ற வாலிபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. அதன் மூலம் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com