ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி அபேஸ்

தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார்.
ஓடும் பஸ்சில் பெண்ணிடம்  4 பவுன் தங்க சங்கிலி அபேஸ்
Published on

தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமி.

இவரது மனைவி வசந்தா (வயது 68) . இவர் பாலையூரில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.

அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார். பலரிடம் கேட்டு பார்த்தும் பயனில்லை.

இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com