search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Board Officer"

    • மதுரை வைகை ஆற்று பாலத்தில் மின்வாரிய அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • பாலமுருகன் எப்படி இறந்தார்? சாவுக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் மோதிலால் 2-வது தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(51). இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கிராமத்தில் மின்வாரியத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். வார விடுமுறையை முன்னிட்டு சம்பவத்தன்று பாலமுருகன் ஊருக்கு புறப்பட்டார். ஆனால் அவர் வீட்டுக்கு வரவில்லை. செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் ஆரப்பாளையம் வைகை வடகரை அம்மா பாலம் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது இறந்து கிடப்பது மின்வாரிய ஆய்வாளர் பாலமுருகன் என தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை அடையாளம் காண்பித்தனர்.

    இது தொடர்பாக மனைவி நாகராணி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் எப்படி இறந்தார்? சாவுக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமல்ராஜ் பிரபு நேற்று மதியம் எப்போதும் வென்றானில் இருந்து வேலைக்காக தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • சுப்ரமணியபுரம் விளக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி தாமஸ் நகரை சேர்ந்தவர் அமல்ராஜ் பிரபு (வயது 54). இவர் எப்போதும்வென்றான் மின்வாரிய அலுவலகத்தில் லைனிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மதியம் எப்போதும் வென்றனில் இருந்து வேலைக்காக தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    சுப்ரமணியபுரம் விளக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அமல்ராஜ் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனிசாமி சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் பணியாற்றினார்.
    • ராசாப்பாளையம் அருகில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மனப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை என்கிற பழனிசாமி (வயது 55). மின்வாரிய அதிகாரி. இவர் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் பணியாற்றினார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்டரக்கோட்டையில் இருந்து பண்ருட்டிக்கு சென்றார்.ராசாப்பாளையம் அருகில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விரைந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மாலை மணவாளன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • திருட்டு சம்பவம் தொடர்பாக மணவாளன் நேற்றிரவு சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் காலனியை சேர்ந்தவர் மணவாளன் (வயது 45). இவர் தூத்துக்குடி மின்வா ரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பொன் செல்வி, தனியார் வங்கியில் பணி செய்து வருகிறார். இவர்கள் வேலைக்கு சென்ற பின் இவர்களின் 2 மகன்களும் பள்ளிக்கு சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று மாலை மணவாளன் வீட்டுக்கு திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் பணம், மற்றும் ஒரு செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    திருட்டு சம்பவம் தொடர்பாக மணவாளன் நேற்றிரவு சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு திட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
    • முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    உடுமலை அருகே உள்ள கள்ளப்பாளையத்தைச் சேர்ந்த அம்மாசை மகன் முருகேசன் (வயது 42) .இவர் பல்லடம்- உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில், நேற்று காலை அலுவலகத்தின் தரையில், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் முருகேசன் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விழுப்புரத்தில் மின்வாரிய அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    • விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் தங்கியிருந்து தினமும் திண்டிவனத்திற்கு பணிக்கு சென்று வந்தார்.

    விழுப்புரம்:

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (50). இவர் திண்டிவனத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செயற் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் தங்கியிருந்து தினமும் திண்டிவனத்திற்கு பணிக்கு சென்று வந்தார். நேற்று மாலை 7 மணியளவில் பணி முடிந்து சதீஷ்குமார் தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். உடனே அவரிடம் ஏன் வாந்தி எடுக்கிறீர்கள் என்று அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு பணி முடிந்து வந்த போது எலிபேஸ்ட் உட்கொ ண்டதாக தெரிவித்தார்.

    அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் சதீஷ்குமாரை விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலியே சதீஷ்குமார் இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். சதீஷ்குமார் உயர் அதிகாரியால் தற்கொலைசெய்தாரா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    சாதாரண உதவியாளராக பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை குவித்த ஆந்திர மின்சார வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    நகரி:

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் கலாளியில் உள்ள மின்துறை அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி ரெட்டி. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லட்சுமிரெட்டி வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    நெல்லூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.

    இதில் பல ஏக்கர் விவசாய நிலங்களின் பத்திரங்கள், ஆடம்பர பங்களா, கார்கள், வங்கியில் ரூ.9 லட்சம், 23 பவுன் நகை உள்பட பல சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பது தெரிந்தது.

    லட்சுமி ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.100 கோடி என கணக்கிடப்பட்டு இருக்கிறது.

    லட்சுமி ரெட்டி 1993-ம் ஆண்டு மின்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு உதவி லைன் மேனாகவும், 1997-ம் ஆண்டு லைன்மேனகாவும் நியமிக்கப்பட்டார்.

    அதன்பின் 2017-ம் ஆண்டு லைன் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.

    சாதாரண ஊழியராக பணியில் சேர்ந்த லட்சுமி ரெட்டி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

    அவர் பணியில் சேர்ந்து 25 ஆண்டில் இவ்வளவு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews

    ×