பணியில் இருந்த மின்வாரிய அதிகாரி திடீர் சாவு

மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணியில் இருந்த மின்வாரிய அதிகாரி திடீர் சாவு
Published on

பல்லடம் :

உடுமலை அருகே உள்ள கள்ளப்பாளையத்தைச் சேர்ந்த அம்மாசை மகன் முருகேசன் (வயது 42) .இவர் பல்லடம்- உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை அலுவலகத்தின் தரையில், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் முருகேசன் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com