பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மின்வாரிய அதிகாரி பலி

பழனிசாமி சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் பணியாற்றினார். ராசாப்பாளையம் அருகில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மின்வாரிய அதிகாரி பலி
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த மனப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை என்கிற பழனிசாமி (வயது 55). மின்வாரிய அதிகாரி. இவர் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் பணியாற்றினார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்டரக்கோட்டையில் இருந்து பண்ருட்டிக்கு சென்றார்.ராசாப்பாளையம் அருகில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விரைந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com