search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duraimurugan"

    • தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
    • கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

    நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை.
    • மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து ஏதாவது மீன் சிக்காதா? என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழகம் வருகிறார்.

    இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல. மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள்.

    மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். பா.ஜ.க.வினர், தி.மு.க. வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்.

    உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள். இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்:-

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கோர்ட்டில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்ட உள்ளனர்.

    இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உச்ச கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டி உள்ளேன்.

    அண்டை மாநிலமான எங்களோடு பேசியிருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என எழுதி உள்ளேன் என்றார்.

    • நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
    • தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும் என ஆந்திரா அரசு கூறியிருந்த நிலையில், எந்த விழாவும் நடைபெறவில்லை. அதேநேரத்தில் பாலாற்றில் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு 315 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:-

    பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டைய மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

    1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

    இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த குறிப்பிட்டுள்ளது.

    இவ்வாறு இருக்கையில் தன்னிச்சையாக ஒரு புதிய ஆந்திர அரசு அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும் என்று கூறியுள்ளார்.

    • அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள 10சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது என்றார்.

    சோதனை ஓட்டத்தில் ஒரு சில ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என கூறிய அவர், விடுபட்டுள்ள ஏரி குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பைப் இணைப்பு நடந்து வருவதாகவும், விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்ட தொடக்க விழா நடைபெறும் எனவும் உறுதி அளித்தார்.

    அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது இந்த திட்டம் சுணக்கமாக செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    • சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக செயல்பட்டு வந்தவர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதுமட்டுமின்றி கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கொடுங்கையூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டிஸ்மிஸ் செய்து பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் சேர்க்குமாறு தி.மு.க. தலைமைக்கு கடிதம் கொடுத்தார். அதில் தனது தவறுக்கு வருந்துவதாகவும், மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்கும்படி கூறி கேட்டிருந்தார்.

    அதை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கழக உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார்.
    • பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில், 'விரைவில் அமலாக்கத்துறை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வீட்டு கதவை தட்டும்' என்று கூறினார்.

    காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் முதல் பாலாறு இணையும் வரை உள்ள பாண்டியன் மடுவு கால்வாய் புனரமைப்பு பணிகளை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அவர்கள் ஒன்றும் எங்கள் கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் அவர்களுக்கு எதற்கு?. நாங்களே திறந்து வைத்திருக்கிறோம்.

    பொருளாதாரத்தில் தமிழகம் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறினார். அவர் என்ன வந்து பார்த்தாரா?. பெரிய, பெரிய வல்லுனர்களே எங்களுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

    பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து எழும் வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. பிறகு துரைமுருகன் சொன்னதாக எதையாவது ஒன்னு போட்டு குட்டையை குழப்பி விடுவீர்கள். கூட்டணி குறித்து முறையாக அறிவிப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
    • சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரியில் 13 ஆயிரம் கனஅடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம். 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது.

    வரும் 3-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. 13ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்துவோம்.

    காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக கூறி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏதோ எதிரிநாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள். உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

    • கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை.
    • காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

    ஆலந்தூர்:

    காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு, தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்று தரக்கோரி, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று இன்று மாலை, மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

    இதற்காக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் கர்நாடக அரசை, தமிழ்நாட்டிற்கு உடனடியாக 5,000 கன அடி நீரை திறந்து விட உத்தரவிட்டிருந்தது. ஆனால் கர்நாடக மாநில அரசு ஒரு சொட்டு தண்ணீர் கூட, காவிரி நதிநீர் ஆணையம் கூறியபடி திறந்து விடவில்லை. காவிரி நதிநீர் ஆணையத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசுதான் அமைத்தது.

    எனவே இப்போது மத்திய அரசிடம் முறையிட, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் குழு டெல்லி செல்கிறது. இன்று மாலை டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடக் கோரி வலியுறுத்த இருக்கிறோம்.

    காவிரி தண்ணீர் விவகாரத்தில், கர்நாடகா மாநில அரசு ஒவ்வொன்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் தயவை நாடிதான், கர்நாடக மாநிலத்திடம் இருந்து, தமிழ்நாடு தண்ணீரை பெற்று வருகிறது. இது நியாயமானது அல்ல என்பது என் கருத்து.

    கர்நாடகா காவிரியில் தண்ணீர் இல்லை என்று கூறுகிறது. நாம் தண்ணீர் இருக்கிறது என்று கூறுகிறோம். ஆனால் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம், கண்ணை மூடிக்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று ஆய்வு நடத்தி விட்டு, அங்கு தண்ணீர் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும்படி கூறியிருக்கிறார்கள். எனவே கர்நாடகா தண்ணீர் இல்லை, வறட்சி நிலவுகிறது என்று பொய்யான காரணத்தை கூறுகிறது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதே விமானத்தில் இந்தக் குழுவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் சென்றார். இந்தகுழுவில் உள்ள மற்ற எம்பிக்கள் ஏற்கனவே டெல்லி சென்றுவிட்டனர்.

    • உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம்
    • கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தருகிறோம்

    சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். நாங்கள் மறுபரிசீலனை இல்லாமல் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    கே: உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளாரே?

    ப: உச்சநீதிமன்றம் என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அதுதான் உச்சநீதிமன்றம். சென்னைக்கு இந்த பிரச்சினை ஆரம்பித்ததோ, என்றைக்கு இதே பிரச்சினைதான். அவங்க முதலில் நடுவர் மன்றத்தையே ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு நடுவர் மன்றத்துக்கு வாதாடி அதை பெற்றோம். நடுவர் மன்றத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதை கொடுக்க கூடாது என்று கர்நாடகா முட்டுக்கட்டை போட்டது.

    அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் சென்று அதற்கும் தீர்வு கண்டோம். அதன் பிறகு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்றனர். அப்போதும் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    காவிரி நீர் பிரச்சினையில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    அதை நாங்கள் சந்தித்து தமிழ்நாடு மக்களுக்கு வேண்டிய உரிமையை பெற்றுக் கொண்டுதான் வந்துள்ளோம். இனியும் பெறுவோம்.

    கே: சேப்பாக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் மத்தியில் அமலாக்கத்துறை சோதனை நடத்துள்ளதே?

    ப: அதெல்லாம் எனக்கு தெரியாது.

    கே: இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய தமிழக முதல்-அமைச்சர் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். அங்குள்ள கர்நாடக முதல்-மந்திரியிடம் பேசினார் என்றால் சுமூகமாக முடியும் என்று சொல்கிறார்களே?

    ப: அப்படி பேசினால் குளோஸ் ஆகிவிடுவோம். பேச்சுவார்த்தை சரியில்லை என்றுதான் கோர்ட்டுக்கு சென்று இவ்வளவு தூரம் வந்துள்ளோம். மறுபடியும் பேச சென்றால் நாம் சட்டரீதியாக செல்வதை விட்டு விடுவதாக அர்த்தமாகிவிடும்.

    கே: கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுத்தால் இது முடிவுக்கு வரும் என கூறப்படுகிறதே?

    ப: எங்களை கெடுப்பதற்கு அப்படி சொல்கிறார்கள். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே கடைசி வாய்ப்பு. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இதில் நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமநாதபுரத்தில் டெல்டா மற்றும் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
    • வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் வருகிற 24-ந்தேதி காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறி வாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பி னர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழ கத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (பி.எல்.ஏ.-2) நியமிக்கப்பட்டு தலைமைக் கழகத்தால் முழுமையாக சரி பார்க்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் டெல்டா மற்றும் தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

    இப்போது மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் "வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்(பி.எல்.ஏ.-2) பயிற்சி பாசறைக் கூட்டம்" வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

    மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டு உள்ள 14 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தமது மாவட்டங்களுக்குட்பட்ட 'வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை' கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

    திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, கரூர், கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, நீலகிரிமாவட்டங்கள் இதில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
    • கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்றார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

    சென்னை:

    மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டப்படும் என்றும், அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என கர்நாடக மாநில துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கர்நாடக அரசால் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. மேகதாது விவகாரம் குறித்து நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் மேகதாது குறித்து ஆலோசிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    • மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு ஓபிஎஸ் பதில்.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரை மேகதாது அணைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதே கட்சிகளின் நிலைப்பாடு.

    கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான பணிகளை விரைவில் துவங்கப் போவதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கள் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா அரசியலில் பேசுபொருளாகி இருக்கிறது. டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில், டிகே சிவக்குமார் கருத்துக்கு தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்துக்களுக்கு ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,

    'கர்நாடக துணை முதலமைச்சருக்கு பதில் அளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் கர்நாடக துணை முதலமைச்சருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.'

    'தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக உள்ள திரு. டி.கே. சிவகுமார் அவர்கள் கர்நாடக சட்டமன்றப் பேரவைக்கு எட்டு முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது தெரியாமல், பல ஆண்டு காலம் அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், ஓராண்டு காலம் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது தெரியாமல், மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் சொல்லி இருக்கமாட்டார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் சொல்வதில் இருந்து யார் விவரம் அறிந்தவர், யார் விவரம் அறியாதவர் என்பதையும், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் வேண்டுமென்றே மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசியிருக்கிறார் என்பதையும் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.'

    'கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அவர்கள் ஏதோ விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் என்ற தொனியில் மான்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை நகைப்புக்குரியதாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மேகதாது அணைத் திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பதுதான் அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு.'

    'தமிழ்நாட்டில் நடைபெறுவது தி.மு.க. ஆட்சி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர பாடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கர்நாடக அரசிடம் பேசியும், காங்கிரஸ் மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்தும், சட்டத்திற்கு புறம்பான மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இசையலில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறித்துக் கொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்,' என்று தெரிவித்துள்ளார்.

    ×