search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cinema News"

    • புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார்.
    • தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார்.

    சாட்டை படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக திரை உலகில் அறிமுகமானவர் ரவீனா ரவி. காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், ராசிகண்ணா, தீபிகா படுகோனே போன்ற நடிகைகளுக்கு டப்பிங் பேசி பிரபலமானவர்.


    தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார். இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

    தொடர்ந்து லவ் டுடே, மாமன்னன் படத்தில் நடித்தார். மாமன்னன் படத்தில் பகத் பாசில் மனைவியாக நடித்து இருந்தார். டப்பிங் கலைஞரான ரவீனா ரவி அந்த படத்தில் வசனமே பேசாமல் நடித்திருப்பார்.

    படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மலையாளத்தில் உருவான 'வாலாட்டி' என்ற படத்தில் ரவீனா ரவி நடித்த போது படத்தின் இயக்குனரான தேவன் ஜெயக்குமாருடன் காதல் ஏற்பட்டது.


    இதைத்தொடர்ந்து இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து காதலரை ரவீனா அறிமுகம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
    • ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.

    மாநாட்டு திடலில் சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய்க்கு பல்வேறு திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரெஜினா, "விஜய் வெற்றிகரகமான நடிகர். வெற்றிகரமான அரசியல்வாதியாகவும் வருவார்" என்று அரசியல்வாதியாக களமிறங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நண்பர் புதிய பயணத்துக்கு புதிய பாதை போட்டுள்ளார்.
    • அரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்த படத்தில் பாபி தியோல், திசா பதானி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் வருகிற 14 -ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் புரமோஷன் பணிகள் மும்பை, டெல்லி, ஐதராபாத்தில் நடந்தது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் சூர்யா, கார்த்தி மற்றும் பட குழுவினர், திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.


    நடிகர் ரஜினி வீடியோ மூலம் சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் சூர்யா பேசியதாவது:-

    அன்பான ரசிகர்கள், அன்பு தம்பிகள், தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். நான் இருப்பதே உங்களால் தான். எனது நம்பிக்கை நீங்கள் தான்.

    என்னுடைய 27 ஆண்டு திரை வாழ்க்கையில் என்னுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் பெற்றோர், திரை உலகத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி. உங்களது உடல் நலமும், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

    மன்னிக்கிற மாதிரி சிறந்த விஷயம் எதுவும் இல்லைன்னு எனக்கு புரிய வைத்தது சிவாதான். அதனால என்ன வெறுப்பை விதைத்தாலும் அன்பை மட்டுமே பரிமாறுவோம். தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு உங்க நேரத்தை செலவு செய்ய வேண்டாம்.

    என்னுடைய திரை வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தையும், இறக்கத்தையும் எதிர்கொண்டுள்ளேன். அதில் எனக்கு மகிழ்ச்சி தான்.

    அதனால் புதிய முயற்சி மேற்கொண்டு நான் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறேன். என் படம் என்ன ஆனாலும் ரசிகர்களிடம் கிடைக்கும் அன்புக்கு எல்லையே இல்லை. நான் படித்த லயோலா கல்லூரியில் என்னுடன் 2 பேர் படித்தார்கள். அதில் ஒருவர் என்னை வைத்து 2 படங்கள் தயாரித்தார்.

    அவர் எனக்கு ஜூனியர். அவர்தான் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவரை 'பாஸ்' என்று தான் அழைப்பேன். அவரை எப்போதும் யார் வேண்டுமானாலும் அணுகலாம். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    இன்னொரு நண்பர் புதிய பயணத்துக்கு புதிய பாதை போட்டுள்ளார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும் என விஜய் பெயரை குறிப்பிடாமல் சூர்யா பேசினார். இதை கேட்டு அரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    விஜய் கட்சி மாநாடு இன்று நடைபெறும் நிலையில் சூர்யா வாழ்த்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் ஒரு சொகுசு கார் வந்து நின்றது. காரில் இருந்து நடிகர் பெஞ்சமின் மற்றும் 2 பேர் இறங்கி பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் ஜூஸ் பாட்டில் வழங்கினர்.

    அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தமான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதை வாங்கி பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து நடிகர் பெஞ்சமின் மற்றும் அவருடன் வந்திருந்த 2 பேரை சூழ்ந்து கொண்டு யார் நீங்கள்? எதற்காக வந்தீர்கள், மதமாற்றம் செய்கிறீர்களா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிறைந்தது.

    இதனையடுத்து நடிகர் பெஞ்சமின் தன்னுடன் வந்தவர்களை காரில் ஏற்றிக்கொண்டு உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார்.

    அவர்கள் வந்த காரிலும் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தமான வாசகம் இடம் பெற்றிருந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும்.
    • 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

    கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கடைசி உலகப் போர், லப்பர் பந்து, நந்தன், தோனிமா, தோழர் சேகுவாரா, கோழிப்பண்ணை செல்லத்துரை என ஏழு திரைப்படங்கள் வெளியானது. அதே போல இந்த வாரம் (27-ந்தேதி) 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் எந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளும் என்று பார்க்கலாம்...


    மெய்யழகன்

    சூர்யா தயாரிப்பில் அரவிந்த் சாமி- கார்த்தி நடிக்கும் படம் மெய்யழகன். இந்த திரைப்படம் செப்டம்பர் 27 -ந் தேதி வெளியாகிறது. ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். சி.பிரேம் குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.


    தேவாரா

    ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் செப்டம்பர் 27 ல் வெளியாக இருக்கும் திரைப்படம் தேவரா. இந்த படத்தில் சைத்ரா ராய், சயிப் அலி கான், சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரூ.300 கோடி செலவில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது.


    சட்டம் என் கையில்

    சதீஷ் நாயகனாக நடித்துள்ள 'சட்டம் என் கையில்' படம் 27ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. மெரினா, வாகை சுடவா, தாண்டவம், எதிர்நீச்சல், கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களின் மூலம் கவனம் பெற்றவர் சதீஷ். நாய் சேகர் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

    தற்போது சட்டம் என் கையில் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதில், சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    ஹிட்லர்

    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள `ஹிட்லர்' திரைப்படம் செப்டம்பர் 27 -ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படைவீரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தனா இப்படத்தி இயக்கி உள்ளார்.

    இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.


    பேட்ட ராப்

    எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் பேட்ட ராப். இதில் வேதிகா நாயகியாக நடித்துள்ளனர். மேலும், ரியாஸ்கான், மைம் கோபி, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உட்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    புளு ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சன்னிலியோன் ஒரு பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனமாடியுள்ளார். இந்த படம் செப்.27-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


    தில் ராஜா

    விஜய் சத்யா, ஷெரின் நடித்திருக்கும் தில் ராஜா திரைப்படம், செப்டம்பர் 27 ம் தேதி வெளியாகிறது. இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கும் இத்திரைப்படத்தில், கலக்கப்போவது யாரு புகழ் பாலா காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு சூப்பர் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
    • டீசர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியானது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


    படத்தின் க்ளிம்ஸ் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு ஜூலை 22-ந் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியானது.

    இந்த இரு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலை மாதம் வெளியான 'ஃபயர் சாங்...' எனும் முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.


    இதையடுத்து கடந்த மாதம் படத்தின் டிரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படி அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த படக்குழு அக்டோபர் 10-ந் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் வருவதால், அந்த தேதியில் படம் வெளியாகவில்லை என சமீபத்தில் நடந்த கார்த்தியின் மெய்யழகன் பட இசை வெளியீட்டில் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து புது ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வெகுதூரம் துரத்திச்சென்று லாரியை மடக்கினார்.
    • விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பட்டணங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேசன். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு டிரெய்லர் லாரி வந்தது.

    அந்த லாரி சைக்கிளில் சென்ற ரமேசன் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இருந்த போதிலும் அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. இந்நிலையில் அந்த வழியாக நடிகை நவ்யா நாயர் தனது காரில் வந்தார்.

    அவர் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றதை பார்த்தார். அவர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த லாரியை தனது காரில் பின் தொடர்ந்தார். காரின் ஹாரனை அடித்து லாரியை நிறுத்துமாறு சிக்னல் கொடுத்தார்.

    ஆனால் லாரி டிரைவர், லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இருந்தபோதிலும் நடிகை நவ்யா நாயர் விடாமல் வெகுதூரம் துரத்திச்சென்று அந்த லாரியை மடக்கினார்.

    இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்திவிட்டார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நடிகை நவ்யா நாயர் தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு பட்டணங்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தெரசா மற்றும் போலீசார் சென்றனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

    லாரி மோதியதில் படுகாயமடைந்த ரமேசனை நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தங்களின் வாக னத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். முதலில் துறவூர் தாலுகா ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது .

    பின்பு மேல் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் ரமேசன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை துணிச்சலாக காரில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்த நடிகை நவ்யா நாயரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடக்கிறது.
    • 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார்.

    பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா. இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடக்கிறது.

    மரணம் அடைந்த சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு செல்வி என்ற மகள் இருக்கிறார்.

    சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு 'கைதி கண்ணாயிரம்' என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

    1970-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. சங்கர் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது முதல் சி.ஐ.டி. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

    படிக்காத மேதை, நினைவில் நின்றவள், ஒளிவிளக்கு, என் அண்ணன், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் புதிய வாழ்க்கை, இதய வீணை, ராஜராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் என 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார்.

    நடன கலைஞராக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்தார். எம்.ஜி.ஆர்.-சிவாஜி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள அவர் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

    அதன் பிறகு டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். குடும்பம், சொந்தம், வாழ்க்கை, அக்னி சாட்சி, கஸ்தூரி, பூவிலங்கு, கல்யாண பரிசு, தமிழ்ச்செல்வி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    சி.ஐ.டி. சகுந்தலா மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
    • அஜித் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

    அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கும் இரு படங்கள் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.

    மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    மேலும் இந்த படத்தில் அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.


    இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த திரப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது. இது அஜித் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார்.
    • ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நடிகர் விஷால் திருச்சி ஆதீனத்துடன் நேற்று வந்தார். அவர் கோவில் மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து சுவாமி சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார்.

    வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து விஷால் திருச்சி ஆதீனத்துடன் பேட்டரி காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல்.
    • சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு இணையும் படம் ஒன்று உருவாகி வருவதாக செய்தி வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


    சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி மிகப்பெரிய சக்சஸ் கூட்டணி என்று கோலிவுட் திரையுலகில் கூறப்பட்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக இருவரும் திரைப்படத்தில் இணையாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்திற்கு `கேங்கர்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    15 வருடங்களுக்குப் பிறகு இணையும் சுந்தர் சி மற்றும் வடிவேலு காமெடி கூட்டணி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முகேஷ் மீதான குற்றச்சாட்டை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும்.
    • பொய்யான குற்றச்சாட்டுகளை வேறுபடுத்துவது கடினமாக உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.

    இதையடுத்து பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது நடிகைகள் கூறிவரும் பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாளம் மட்டுமின்றி அனைத்து திரையுலகையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரபல நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. மீது பாலியல் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. கேரள மாநிலத்தை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அவருக்கு கோர்ட்டு முன் ஜாமீன் வழங்கி இருக்கிறது.


    இந்நிலையில் முகேஷ் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அவரது முன்னாள் மனைவியான மெத்தில் தேவிகா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    முகேஷ் மீதான குற்றச்சாட்டை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும். அது உண்மை என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ள நோக்கத்தை சந்தேகிக்கிறேன்.

    நான் முகேசுடனான உறவை முறித்துக் கொண்டாலும், நாங்கள் நல்ல நண்பர்களாக தொடர்கிறோம். எங்களுக்குள் பகையை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒரு மனைவியாக அவருடன் நான் இனி உறவை தொடர விரும்பவில்லை.

    ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதுடன், உண்மையான குற்றச்சாட்டுகளில் இருந்து பொய்யான குற்றச்சாட்டுகளை வேறுபடுத்துவது கடினமான பணியாக உள்ளது. பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர் என்று யாரையும் குற்றம் சாட்டுவது ஒரு புதிய இயல்பான ஒன்றாகிவிட்டது.

    இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களின் பொருத்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றல்ல.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×