நடிகர் பெஞ்சமின் வழங்கிய ஜூஸ் பாட்டிலில் மத வாசகம்: பொதுமக்கள் வாக்குவாதம்

பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
நடிகர் பெஞ்சமின் வழங்கிய ஜூஸ் பாட்டிலில் மத வாசகம்: பொதுமக்கள் வாக்குவாதம்
Published on

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் நேற்று மதியம் ஒரு சொகுசு கார் வந்து நின்றது. காரில் இருந்து நடிகர் பெஞ்சமின் மற்றும் 2 பேர் இறங்கி பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் ஜூஸ் பாட்டில் வழங்கினர்.

அதில் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தமான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதை வாங்கி பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து நடிகர் பெஞ்சமின் மற்றும் அவருடன் வந்திருந்த 2 பேரை சூழ்ந்து கொண்டு யார் நீங்கள்? எதற்காக வந்தீர்கள், மதமாற்றம் செய்கிறீர்களா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிறைந்தது.

இதனையடுத்து நடிகர் பெஞ்சமின் தன்னுடன் வந்தவர்களை காரில் ஏற்றிக்கொண்டு உடனடியாக அங்கிருந்து சென்று விட்டார்.

அவர்கள் வந்த காரிலும் ஒரு குறிப்பிட்ட மதம் சம்பந்தமான வாசகம் இடம் பெற்றிருந்தது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com