என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடிகை ரவீனா ரவி"

    • மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் ஸ்ரீநாத் பாஸி.
    • ஆசாதி திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் வெளியாக இருக்கிறது.

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் ஸ்ரீநாத் பாஸி. இவர் நடிப்பில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்பொழுது ஸ்ரீநாத் அடுத்ததாக ஆசாதி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ளார். படத்தில் வாணி விஷ்வநாத், ரவீனா ரவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை ஃபைசல் ராஜா தயாரித்துள்ளார்.

    திரைப்படம் ஜெயிலில் இருக்கும் தன் மனைவியை காப்பாற்ற போராடும் கணவனின் கதையாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் வெளியாக இருக்கிறது. டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.

    • புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார்.
    • தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார்.

    சாட்டை படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக திரை உலகில் அறிமுகமானவர் ரவீனா ரவி. காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், ராசிகண்ணா, தீபிகா படுகோனே போன்ற நடிகைகளுக்கு டப்பிங் பேசி பிரபலமானவர்.


    தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார். இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

    தொடர்ந்து லவ் டுடே, மாமன்னன் படத்தில் நடித்தார். மாமன்னன் படத்தில் பகத் பாசில் மனைவியாக நடித்து இருந்தார். டப்பிங் கலைஞரான ரவீனா ரவி அந்த படத்தில் வசனமே பேசாமல் நடித்திருப்பார்.

    படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மலையாளத்தில் உருவான 'வாலாட்டி' என்ற படத்தில் ரவீனா ரவி நடித்த போது படத்தின் இயக்குனரான தேவன் ஜெயக்குமாருடன் காதல் ஏற்பட்டது.


    இதைத்தொடர்ந்து இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து காதலரை ரவீனா அறிமுகம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×