search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP manifesto"

    • சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும்.
    • அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான்.

    மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா நேற்று வெளியிட்டது அதில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.-யுமான சசி தரூர் கூறியதாவது-

    யுசிசி (பொது சிவில் சட்டம்) சட்டத்தில் என்ன இருக்கிறது? அதன் வரைவு வராமல் அது குறித்து ஏதும் கூற முடியாது. மற்ற சமூகங்கள் வரைவு சட்டத்தை எதிர்க்கவில்லை என்றால் ... நமது சமூகத்தை பிளவுபடுத்தும் எதையும் நாங்கள் விரும்பவில்லை, அதை ஒருங்கிணைக்க வேண்டும்... என்பது நமக்கு இருக்க வேண்டும்.

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும். அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான். ஆனால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" கருத்தின்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் என நிர்ணயத்து விட்டால், மெஜாரிட்டியை இழந்த அரசு வீழ்ந்த பிறகு, ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் குடியரசு ஆட்சியை அமல்படுத்துவார்களா?. இது ஜனநாயக விரோதம் இல்லையா?.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    • நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளரான நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாராளுமன்ற மக்களை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி மே மாதம் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மாநில மற்றும் தேசிய கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது.

    பல்வேறு மாநில கட்சிகள் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கியுள்ள காங்கிரஸ் கட்சி ஏப்ரல் ஐந்தாம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவை இன்று அறிவித்துள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ள ராஜ்நாத் சிங் தலைமையிலான இந்த குழுவில் 27 பேர் இடம் பிடித்துள்ளனர்.

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒருங்கிணைப்பாளராகவும், பியூஷ் கோயல் துணை ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ராஜஸ்தான், அருணாச்சல பிரசேதம், ஒடிசா, குஜராத், அசாம், சத்தீஷ்கர், மத்தயி பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், டெல்லி, ஹரியானா, கேரளா மாநிலங்களை சேர்ந்த 24 உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம் பெறவில்லை. அதேபோல் ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்து யாரும் உறுப்பினராக இடம்பெறவில்லை.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பூஜ்யத்துக்குள் ராஜ்யம் நடத்துவதாக மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    நாகர்கோவில்:

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கை ஜீரோ (பூஜ்யம்) என்றும், காங்கிரசின் தேர்தல் அறிக்கையே சூப்பர் ஹீரோ என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



    இந்த கருத்திற்கு மத்திய மந்திரியும் பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். நாகர்கோவில் அருகே பறக்கையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன் ராதாகிருண்ணன், “பாஜக தேர்தல் அறிக்கை பூஜ்யம் அல்ல. பூஜ்யத்துக்குள் ராஜ்ஜியம் நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். அந்த பூஜ்யத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால்தான் பாஜக சதம் அடித்திருப்பது தெரியும்’ என்று குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #PonRadhakrishnan
    மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் இன்று டெல்லியில் வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.



    தொடர்ந்து பேசிய மோடி கூறியதாவது:-

    நாம் இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை நாட்டு மக்களின் மனங்களின் குரலாக எதிரொலிக்கின்றது. இந்த நாட்டின் எதிர்பார்ப்பையும், விருப்பத்தையும் இது பிரதிபலிக்கின்றது. தேசியவாதம் என்பது நமது முன்னுரிமையான குறிக்கோள். நல்லாட்சி என்பது நமது தாரக மந்திரம்.

    நமது தேர்தல் அறிக்கையில் கால நிர்ணயத்துடன் நிறைவேற்றத்தக்க 75 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பன்நோக்கு பார்வையுடன் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா முன்னேற வேண்டுமானால் முன்னேற்றம் என்பதை மிகப்பெரிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கு தூய்மை இந்தியா திட்டம் தந்த வெற்றியை நான் நினைவுகூர வேண்டும். இந்த திட்டம் இன்று எத்தனை பெரிய வெகுஜன இயக்கமாக இன்று மாறியுள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. ‘ஒரே நோக்கம்-ஒரே திசையிலான பயணம்’ என்ற குறிக்கோளுடன் முன்னேற்றத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

    வரும் 2047-ம் ஆண்டு நமது 100-வது சுதந்திர திருநாளை கொண்டாடும்போது இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடாக திகழ வேண்டும் என்பதுதான் நமது தேர்தல் அறிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    கடந்த ஐந்தாண்டுகளில் நல்லாட்சி, எளிமையான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி மற்றும் பொறுப்புள்ள ஆட்சியாக நாம் செயல்பட்டதால் அரசின் திட்டப்பலன்கள் உரியவர்களை சென்றடைய முடிந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் மக்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்றி விட்டோம். இனி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #Modi #BJPSankalpPatra

    ×