search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "9 பேர் பலி"

    அறந்தாங்கி அருகே குடும்ப வறுமையால் 9 வயது பேரனை கொன்ற பாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா வேலார். இவரது மனைவி சொர்ணவல்லி (வயது 65). மண்பாண்ட தொழில் செய்து வந்த செல்லையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து தற்போது மண்பாண்ட தொழில் நலிவடைந்ததாலும், போதிய வரவேற்பு இன்மையாலும் சொர்ணவல்லி அந்த தொழிலை விட்டு விட்டு கூலி வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு பன்னீர் செல்வம், தங்கராசு என்ற இரண்டு மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி அதே ஊரில் அருகருகே வசித்து வருகிறார்கள். இதில் தங்க ராசுவின் மனைவி நாகேஸ்வரி தம்பதியின் மகன் பாண்டி (9). பரமந்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    பாண்டி பிறந்த ஒரு சில ஆண்டுகளில் அவனது தாய் நாகேஸ்வரி நோய்வாப்பட்டு இறந்துவிட்டார். எனவே தங்கராசு, அவரது மகன் பாண்டி, சொர்ணவல்லி ஆகிய 3 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

    கூலி வேலைக்கு செல்லும் தங்கராசு, சொர்ணவல்லி ஆகியோரது வருமானத்தின் மூலம் பாண்டியை படிக்க வைத்து குடும்பத்தையும் நடத்தி வந்தனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் சரியான வேலை கிடைக்காதததால் குடும்பம் வறுமையில் வாடியது.

    இந்த நிலையில் நேற்று சொர்ணவல்லியின் மற்றொரு மகன் பன்னீர் செல்வம் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் நூறு நாள் வேலைக்காக சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது சொர்ணவல்லியின் வீடு திறந்து கிடந்தது. அத்துடன் பாண்டியையும் காணவில்லை.

    அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தபோது, வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள சுடுகாட்டின் அருகே சொர்ணவல்லியும், அவரது பேரன் பாண்டியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

    உடனே அவர்களை மீட்ட அந்த பகுதியினர் ஆம்புலன்சு வேன் மூலம் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். குடும்ப வறுமையால் தற்கொலை முடிவெடுத்த சொர்ணவல்லி, தான் இறந்த பின்னர் தனது பேரனை அக்கறையோடு யாரும் வளர்க்க மாட்டார்கள் என்று கருதி அவனுக்கும் வி‌ஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளார்.

    இதுகுறித்து ஆவுடையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயையும், மகனையும் இழந்த தங்க ராசு இருவரின் உடல்களையும் பார்த்து கதறித்துடித்தார்.

    வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டியில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வாழப்பாடி:

    வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டியில் பொது இடங்களில் அமர்ந்து பணம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதனையடுத்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர்கள் கோபால், சுந்தரராஜன் மற்றும் போலீசார், மேட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பட்டி குடிநீர் தொட்டி அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரன் (25), ஞானசேகரன் (24), மோகன்ராஜ் (22). சுரேஷ்(30), ராமசாமி (60) மற்றும் மணிவேல்(20), அருள் (27), மணிகண்டன்(22), ராஜ்குமார் (20) ஆகிய ஒன்பது பேரை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் ரூ. 270 மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    தாய்லாந்து பாங்காங் அருகே பிரார்த்தனையில் இடையூறு செய்ததாக 9 வயது சிறுவனை புத்த பிட்சு அடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பாங்காங்:

    தாய்லாந்தில் பாங்காங் அருகே காஞ்சனாபுரியில் புத்தபிட்சு மடம் உள்ளது. இங்கு இளம் புத்தபிட்சுகள் பயிற்சி மையம் உள்ளது.

    நேற்று இங்கு வாரத்தின் கடைசி வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடந்தது. சுபாசை சுதியானோ (64) என்ற புத்த பிட்சு பிரார்த்தனை நடத்தினார்.

    அப்போது அங்கு பயிற்சி பெற்று வந்த 9 வயது புத்த பிட்சு சிறுவன் வட்டானா போல் சிசாவத் இடையே விளையாடிக் கொண்டு குறும்பு செய்தான். இது பிரார்த்தனைக்கு இடையூறாக இருந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த புத்தபிட்சு சுபாசை சுதியானோ பிரார்த்தனை முடிந்ததும் சிறுவன் வாட்டானா போலை அழைத்து மூங்கில் குச்சியால் சரமாரியாக அடித்து உதைத்தார்.

    அதன் பின்னரும் அவரது கோபம் தீரவில்லை. சிறுவனை முதுகில் பல முறை எட்டி உதைத்தார். அங்கிருந்த தூணில் தலையை மோதவைத்தார். அதனால் ‘கோமா’ நிலைக்கு சென்ற அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.

    தாய்லாந்தில் புத்தமதத்தினர் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள புத்த பிட்சுகளில் பெரும்பாலானோர் செக்ஸ், போதை பொருள் விவகாரம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    திரிபுராவில் மண்சரிவில் இருந்து ரெயிலை நிறுத்தி அதில் பயணம் செய்த 2000 பேரின் உயிரை காப்பாற்றிய பழங்குடி இனத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அம்மாநில மந்திரி விருந்தளித்து பாராட்டியுள்ளார். #Somati #Tripura #9yearoldSaviour

    அகர்தலா:
     
    திரிபுரா மாநிலம் தன்சேரா பகுதியை சேர்ந்தவர் சோமதி என்ற 9 வயது பழங்குடி இன சிறுமி. அவரின் குடும்பத்தினர் அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     
    அம்மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவுகளால் பல இடங்களில் கடுமையாக பாதிப்படைந்துள்ளன. சிலர் உயிரிழந்துள்ளனர். தன்சேரா பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 15-ம் தேதி சுமதி தனது தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுடன் தன்சேராவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் மூங்கில் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியில் தரம் நகரிலிருந்து பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் ஏற்பட்டிருந்த மண்சரிவை பற்றி தகவல் தெரியாததால் அந்த ரெயில் அந்த வழியாக சென்றுள்ளது.


     
    இதையடுத்து, ரெயில் வருவதை கவனித்த சிறுமி மற்றும் அவளது தந்தை இருவரும் உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி ரெயிலை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். இதை கவனித்த ரெயில் ஓட்டுனர் உடனடியாக ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 2000 மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. 

    இந்த சிறுமி மற்றும் அவளது தந்தையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்த சிறுமியின் தந்தை ஸ்வபன் தெப்பர்மாவுக்கு ரெயில்வே துறையில் பணி வழங்கவும் திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.


     
    இந்நிலையில், திரிபுரா மாநில சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி சுதிப் ராய் பர்மன் அந்த சிறுமி மற்றும் அவளது தந்தை ஆகியோரை தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டினர். அதோடு அவர்களுக்கு விருந்து அளித்து மகிழ்வித்தார்.  #Somati #Tripura #9yearoldSaviour
    கோவாவிற்கு சுற்றுலா வந்த இடத்தில் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட புனே வாலிபர்கள் 9 பேரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #GoaCourt #GoaTouristsRemand
    பனாஜி:

    மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் கோவாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு வந்த அவர்கள், அங்கு அமர்ந்திருந்த 16 வயது பெண்ணை செல்போன்களில் படம் எடுத்துள்ளனர். இதனை அந்த பெண்ணின் அண்ணன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புனே வாலிபர்கள், அந்த சிறுவனை தாக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரும், மாநிலத்தை விட்டு வெளியேறுவதற்குள் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்டவர்களில் 2 சிறுவர்கள் தவிர மற்ற 9 பேரும் இன்று மபுசா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். சிறுவர்கள் இரண்டு பேரும் பனாஜி அருகே உள்ள சிறார் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். #GoaCourt #GoaTouristsRemand
    அமெரிக்காவில் 9 வயது சிறுவன், தன் தம்பியின் மருத்துவச் செலவுக்காக ஜூஸ் மற்றும் டிஷர்ட் விற்பனை செய்து 4 லட்சம் ரூபாய் திரட்டியது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கலிபோர்னியா:

    கலிபோர்னியாவின் கிரீன்வுட் பகுதியைச் சேர்ந்த மெலிஸ்சா-மேட் தம்பதியருக்கு 9 வயதில் ஆண்ட்ரூ மெரி என்ற மகன் இருக்கிறான். சமீபத்தில் இந்த தம்பதியருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்தது முதலே அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தையை பிட்ஸ்பர்க் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


    சிகிச்சைகான மருத்துவ பில்லை கட்ட முடியாமல் பெற்றோர் மிகவும் சிரமப்பட்ட வேளையில், தம்பியின் மருத்துவ செலவுக்காக தானே பணம் திரட்ட முடிவு செய்தான் ஆண்ட்ரூ.


    இதற்காக வித்தியாசமாக முயற்சி செய்த ஆண்ட்ரூ, எலுமிச்சம்பழ ஜூஸ் தயாரித்து அதை உள்ளூர் நெடுஞ்சாலையோரம் விற்பனை செய்தான். அத்துடன் தன் தம்பியின் பெயர் அச்சிடப்பட்ட டிஷர்ட்டுகளையும் விற்பனை செய்தான்.  ஆண்ட்ரூவின் இந்த முயற்சிக்கு குடும்பத்தினர் அனைவரும் உதவி செய்தனர். இதன்மூலம் 2 மணி நேரத்தில் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் பணம் திரட்டினான் ஆண்ட்ரூ. அதை அவனது தம்பியின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தினான். அவனது பாசம் மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் வியந்தனர். #LemonadeStand #FundRaiseForBrother #PrayForDylan
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை, காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் இறந்துபோனார்கள். இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கையில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கணேசன்(வயது 40), மாரிமுத்து(45), அழகர்சாமி(48), ராஜேந்திரன்(45), சுரேஷ்கண்ணன்(46), பால முருகன்(40), தங்கவேல்(50) ஆகிய 7 பேரை சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மோகன் கைது செய்துள்ளார்.

    இதேபோன்று காரைக்குடியில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த கல்யாணகுமார், முத்துமாணிக்கம் ஆகிய 2 பேரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு போலீசார் கைதுசெய்தனர். 
    மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் தண்ணீர் லாரியும், பயணிகள் ஆட்டோவும் மோதிய விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். #Accident
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் உள்ள கியோரய் தண்டா கிராமத்தில் பயணிகள் ஆட்டோ ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அதில் 10க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    முன்னால் சென்ற வாகனத்தை ஆட்டோ முந்த முயன்றது. அப்போது கட்ட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, எதிரில் வந்த தண்ணீர் லாரி மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். #Accident
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் இன்று அதிகாலை சென்னையை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக் கட்டையை மீறி எதிரே வந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். #Accident
    உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழைக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #UP #Thunderstorm
    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், உபியின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழைக்கு 9 பேர் பலியாகினர்.



    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உ.பி.யின் பல்வேறு நகரங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதுராவில் இடி தாக்கியதில் 3 பேரும், ஆக்ராவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும், இடாவா நகரில் 4 பேர் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மழையில் சிக்கிய மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UP #Thunderstorm
    ×