search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் கைது"

    • கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூருவில் இருந்து மூட்டை மூட்டையாக பான் மசாலா ஹான்ஸ் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு கடத்தி வரப்படுவது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்துடி.எஸ்.பி. மகேஷ் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவை கொண்ட கார் அந்த வழியாக வேகமாக வந்ததை பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் நிற்காமல் அதி வேகமாக சென்ற கார் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகம் பிடித்தது. இருப்பினும் காரை சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்த போலீசார் காரில் சோதனை செய்தபோது அதில் 3 மூட்டைகளில் 300 கிலோ போதை பொருட்கள் கடத்தி வந்ததுகண்டுபி டிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் பயணம் செய்த விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஜெய பாண்டியன் (43,) சிறுபாலன் (27 )மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம் .எஸ். தர்கா பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (45 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள்.
    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முதலார் பகுதியை சேர்ந்தவர் கிப்சன் (வயது 19). இவர் நாகர்கோவில் கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி கிப்சன் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவரது நண்பர்களை வழிமறித்து தாக்கினார்கள். இதில் கிப்சன் பலத்த காயமடைந்தார். காயமடைந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கிப்சன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கிப்சனை தாக்கியவர்கள் குறித்த கும்பல் அடையாளம் தெரிந்த நிலையில் போலீ சார் 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரிடம் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. கிப்சனை எதற்காக தாக்கினார்கள் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • போலீசார் விசாரணை
    • பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    நாகர் கோவில் நாகராஜா திடலில் நாளை மறுநாள் (2-ந்தேதி) நடைபெறும் குமரி சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இது தொடர்பாகவும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    செண்பகராமன் புதூர் பகுதியில் தோவாளை இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் வாகன பிரசாரம் நடை பெற்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதுகுறித்து மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சி.சி.டி.வி. காமிராவில் பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டி சென்றவர்களின் வாகன எண் பதிவாகி இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டிய வர்கள் குறித்து அடையாளம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோபி

    கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தங்களது மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்ததாக நம்பியூர் பள்ளத்தூர் காலனியை சேர்ந்த தீபா (34), அளுக்குளி குட்டிமூலை காடு பகுதியை சேர்ந்த சரோஜாதேவி (62), காலிங்கராயன்பாளையம் பெரியார் நகர் முதல்வீதியை சேர்ந்த முருகேசன் (49) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ேபாலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.
    • திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்குள் மோதலாக மாறியது.

    கடலூர்:

    கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தனியார் பஸ் சங்க நிர்வாகியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் 3 பேர் எந்தவித அனுமதியும் இன்றி முறையற்ற வகையில் தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற செல்வம் 3 பேரிடம் கேட்டபோது, திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்குள் மோதலாக மாறியது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), ரவிச்சந்திரன் (55), புருஷோத்தமன் (51) ஆகியோர் மீதும், முருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்வம் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகன், ரவிச்சந்திரன், புருஷோத்தமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் தொடரும் சோதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட் டத்தில் அதிக பாரம் ஏற்றிய அல்லது அனுமதி இல்லாமல் கொண்டு வரப்படுகின்ற கனிம பொருட்களை கண் காணித்து அபராதம் விதிப்பது தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது.

    இந்த குழு விதிகளை மீறி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து வரு கிறது. மேலும் 9 வாகனங்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரையில் இந்த குழு நடத்திய சோதனையில், 6 வாகனங்கள் கைப்பற் றப்பட்டு, அந்த வாகனங் களுக்கு ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் வட்டார போக்குவரத்து அலுவல ரால் விதிக்கப்பட்டு உள்ள தாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் சில வாக னங்களை சாலை யோரம் நிறுத்திவிட்டு டிரை வர்கள் தப்பியோடி விடு கின்றனர். சில வாக னங்களை நேரம் தவறி இயக்குவதாகவும் தெரி கிறது. அத்தகைய வாகன உரிமையாளர்களின் உரி மங்கள் ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படு வதுடன் அத்தகைய வாகனங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது தெரிய வரும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • மேலும் 2 பேர் தலைமறைவு
    • 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32).

    இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரவிந்த் வீட்டில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது. மேலும் அரிவாளாலும் வெட்டியது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த அரவிந்தை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர் பாக இந்த தாக்குதல் சம்ப வம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த எபனேசர் (19) கன்னியா குமரியை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (35) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. 3 பேரையும் போலீ சார் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தினர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தலைமறைவாகியுள்ள வாலிபரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வேதநகர் மேல புது தெருவை சேர்ந்தவர் முகமது உமர் ஷாகிப் (வயது 55). வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஊருக்கு வந்த இவர் தற்பொழுது இங்கேயே வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாஸ்மின். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று ஜாஸ்மின் மற்றும் அவரது மகள், மாமியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

    வீட்டில் முகமது உமர் ஷாகிப் மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் முகமது உமர் ஷாகிப்பை துப்பாக்கி காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முகமது உமர் ஷாகிப் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொள்ளையர்கள் பயன் படுத்திய காரை போலீசார் கைப்பற்றி னார்கள். கொள்ளை வழக்கு தொடர்பாக கோவில் பட்டியை சேர்ந்த சார்லஸ், இடலாக்குடியை சேர்ந்த அமீர், கோட்டாரை சேர்ந்த ரஹீம், அழகியபாண்டிய புரத்தை சேர்ந்த கவுரி, இருளப்பபுரத்தை சேர்ந்த சாஹிப் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்ச ரக்கல்விளையை சேர்ந்த தர்வீஸ் மீரான் ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் அமீர், ரஹீம், கவுரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 பவுன் நகை மீட்கப்பட்டது. தலை மறைவாகி இருந்த 4 பேரை பிடிக்க 3 தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கேரளாவில் கொள்ளை யர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்ப டையில் போலீசார் அங்கு சென்று தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக் முகைதீன், மைதீன் புகாரி, மேலச்சரக்கல்வி ளையை சேர்ந்த தர்வீஷ் மீரான் ஆகிய 3 பேரும் நாகர்கோவில் ஜே.எம். 2 கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை நீதிபதியை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தர விட்டார்.

    இதையடுத்து 3 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள கோவில்பட்டியை சேர்ந்த சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள். கோர்ட் டில் சரணடைந்த மைதீன் புகாரி, ஷேக் முகைதீன், தர்வீஸ்மீரான் ஆகிய 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தேனி அருகே வெவ்வேறு பிரச்சினையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தேவா ரத்தை சேர்ந்தவர் மணி கண்டன் மகன் அய்யனார் (வயது21). இவர் சிந்தலைச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு செல்ல பைக் வேண்டும் என பெற்றோ ரிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் பொருளாதார வசதி இல்லை. படித்து முடித்தவுடன் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதனால் மனவேதனை யடைந்த அய்யனார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடமலைக்குண்டு அருகே தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது57). இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அப்போது முதல் மன உளைச்சலில் இருந்த தங்கத்துரை விஷம் அருந்தி மயங்கினார். கடமலை க்குண்டு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கத்துரை உயிரிழந்தார். இது குறித்து கடமலை க்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜெயமங்கலத்தை சேர்ந்த வர் சின்னச்சாமி (45). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சின்னசாமி சம்பவத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வாகனத்தை வழிமறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்ற 3 வாலிபர்களை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • இது குறித்து தாடி க்கொம்பு போலீசார் அவர்களை கைது செய்து வாலிபர்கள் மீது வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 45). இவர் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு செட்டி நாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் திடீரென இவரை மறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இந்த தாக்குதல் குறித்து தாடிக்கொம்பு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. சப்-இன்ஸ்பெ க்டர் பிரபாகரன், தனிப்பி ரிவு ஏட்டு பழனிச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வழி ப்பறியில் ஈடுபட்டது மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் சேர்ந்த சரண்குமார் (21), முருகபவனம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் செல்வராஜ் (21), சூர்யபிரகாஷ் (19) ஆகியோர் என தெரிய வரவே அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்ய ப்பட்ட பணம் மற்றும் டூவீ லரை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து தாடி க்கொம்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச லம் விசாரணை நடத்தி வருகிறார். இவர்களுக்கு வேறு ஏதேனும் வழிப்பறியில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வெவ்வேறு 3 பெண்கள் மாயமானதையொட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். அதன்பே ரில் போலீசார் வழக்குபதிவு செய்து கனகவள்ளியை தேடி வருகின்றனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டிபட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் நித்ய ஸ்ரீ(21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தந்தை அதற்கு உடன்படவில்லை. படித்தது போதும் என கூறியுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்த நித்யஸ்ரீ திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    தேனி சிவராம்நகரை சேர்ந்தவர் வேல்பாண்டி மகள் ஷீலாதேவி(21). இவர் பி.பி.ஏ, படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடை க்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஷீலா தேவியை தேடி வருகின்றனர்.

    கம்பம் சுருளிபட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகள் கனகவள்ளி(24). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பே ரில் போலீசார் வழக்குபதிவு செய்து கனகவள்ளியை தேடி வருகின்றனர்.

    அண்ணா நகர் வணிக வளாகம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்த கல்லூரி மாணவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    அண்ணா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த வாரம் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் மடிப்பாக்கத்தை சேர்ந்த என்ஜினீயரான பிரவீன் என்பவர் அதிக போதையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இதனைத் மதுவிலக்கு அமலாக்க போலீசார் வழக்கு பதிவு செய்து போதை விருந்து நிகழ்ச்சி நடத்திய 6 பேரை கைதுசெய்தனர்.

    இந்த நிலையில் இந்த வணிக வளாகம் அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அண்ணாநகர் துணை கமிஷனர் சிவபிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் சிபுகுமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் போதை மாத்திரைகள் இருந்தன.அவர் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த்(28), அவர் கொடுத்த தகவலின் படி கூட்டாளிகளான சாகுல் ஹமீத் (21),கோடம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் டோக்கஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்புகள் கைப்பற்றப்பட்டது. அவர்கள் வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைன் மூலம் ஆர்டர் எடுத்து நேரில் வரவழைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

    கைது செய்யப்பட்ட இளம்பெண் டோக்கஸ் கல்லூரி மாணவி ஆவார். அவர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர்களுக்கு போதை மாத்திரைகள் கிடைப்பது எப்படி? எங்கிருந்து வருகிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×