என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் சங்க நிர்வாகியை தாக்கிய 3 பேர் கைது
- தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது.
- திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்குள் மோதலாக மாறியது.
கடலூர்:
கடலூர் குண்டு உப்பலவாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). தனியார் பஸ் சங்க நிர்வாகியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் 3 பேர் எந்தவித அனுமதியும் இன்றி முறையற்ற வகையில் தனியார் பஸ்களில் சந்தா பணம் வசூல் செய்வதாக செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற செல்வம் 3 பேரிடம் கேட்டபோது, திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்குள் மோதலாக மாறியது.
இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் முருகன் (50), ரவிச்சந்திரன் (55), புருஷோத்தமன் (51) ஆகியோர் மீதும், முருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்வம் மீதும் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முருகன், ரவிச்சந்திரன், புருஷோத்தமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






