search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கினர்"

    • போலீசார் விசாரணை
    • பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி குமரி மாவட்டம் முழுவதும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    நாகர் கோவில் நாகராஜா திடலில் நாளை மறுநாள் (2-ந்தேதி) நடைபெறும் குமரி சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார். இது தொடர்பாகவும் வாகன பிரசாரம் நடந்து வருகிறது.

    செண்பகராமன் புதூர் பகுதியில் தோவாளை இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் வாகன பிரசாரம் நடை பெற்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வாகனத்தை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் கிடந்த கல்லால் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதுகுறித்து மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் பத்மநாபன் ஆரல்வாய் மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சி.சி.டி.வி. காமிராவில் பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டி சென்றவர்களின் வாகன எண் பதிவாகி இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது பா.ஜ.க. நிர்வாகிகளை மிரட்டிய வர்கள் குறித்து அடையாளம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரை பிடித்துள்ளனர். பிடிபட்ட 3 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராயக்கோட்டை போலீசார் லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
    • அவரிடம் இருந்த கஞ்சா 50 கிராம் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் நேற்று மரிக்கம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் 30 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் அவர் மரிக்கம்பள்ளி சேர்ந்த வேலு (வயது25) தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

    இதேபோல் ராயக்கோட்டை போலீசார் லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு இதேபோல் சந்தேகத்து இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த லிங்கம்பட்டி ஆனந்த் (29) என்பவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த கஞ்சா 50 கிராம் பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும், கொள்குளை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுப்பெற்றது  இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலிஸ் சூப்பரண்டு கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.  கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் வேளாங்கண்ணி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் போலீசார் வேளாங்கண்ணிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 வாலிபர்களை போலீசார் பிடித்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்  கடலூர் சிங்காரத்தோப்பு சேர்ந்த விக்னேஷ் (வயது 23), கடலூர் முதுநகர் சேர்ந்த பிரகாஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவிலில் சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தி உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம், விருதாச்சலம், புதுச்சேரி மாநிலம் முள்ளோடை, காரைக்கால், நாகப்பட்டினம், பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் 2 வாலிபர்களும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது                                 .

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே 2 வாலிபர்கள் கோவில் பூட்டை உடைத்து திருடுவதற்கு வந்தபோது, அங்கு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததால் பயத்தில் அதிகாலை 3 மணி அளவில் சாலை ஓரத்தில் இளம் பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் திருடுவதற்கு குறிக்கீடாக இருப்பதால் சாலை ஓரத்தில் இருந்த இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று சாலையில் இறக்கி விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்து திருடி சென்ற சுவாரசிய சம்பவம் தெரியவந்துள்ளது. எங்கெங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஈரோட்டில் வாகன சோதனையின் போது பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையில் கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்ப–ட்டது.

    இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி–ருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அந்த வாலிபர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன்பட்டி, குட்டை தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற மணி (27), நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 4 -வது வீதியை சேர்ந்த தவச்செல்வன் (21) என்பது ெதரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம் பகுதியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து இருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 

    • சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர்.
    • அப்போது கலைமகள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கலைமகள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (60), கவுந்தப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் (40), விஜயகுமார் (64), மொடச்சூர் விஸ்வநாதன் (49) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 810 பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×