சூதாடிய 4 பேர் சிக்கினர்

சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர்.அப்போது கலைமகள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.
சூதாடிய 4 பேர் சிக்கினர்
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிறுவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி மற்றும் போலீசார் ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது கலைமகள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் 4 பேர் சூதாடி கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (60), கவுந்தப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் (40), விஜயகுமார் (64), மொடச்சூர் விஸ்வநாதன் (49) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 810 பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com