கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்

ராயக்கோட்டை போலீசார் லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அவரிடம் இருந்த கஞ்சா 50 கிராம் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் நேற்று மரிக்கம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் 30 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் அவர் மரிக்கம்பள்ளி சேர்ந்த வேலு (வயது25) தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

இதேபோல் ராயக்கோட்டை போலீசார் லிங்கம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு இதேபோல் சந்தேகத்து இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த லிங்கம்பட்டி ஆனந்த் (29) என்பவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த கஞ்சா 50 கிராம் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com