search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Arrested"

    • தேரம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக காரமடை இன்ஸ்பெக்டர் குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
    • 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேரம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக காரமடை இன்ஸ்பெக்டர் குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராஹீம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, தேரம்பாளையம் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் கையில் பையுடன் 2 பேரை நின்றிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த மனோ ரஞ்சன்தாஸ்(29), ரிஷிகேஷ் தாஸ்(24) என்பதும்,கூலி தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் போதிய வருமானம் இன்றி கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    • 2 சிறுமிகளை, சிறுவன் ஒருவர் பின் தொடர்ந்து சென்றார்.
    • மூதாட்டியை சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து மிரட்டினார்.

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த 2 சிறுமிகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் போது கெம்பட்டி காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் தினசரி பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து சிறுமிகள் தனது பாட்டியிடம் கூறினர். அவர் சிறுவனை கண்டித்தார். சம்பவத்தன்று சிறுமிகள் தனது பாட்டியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அதிகாலை சிறுமியின் வீட்டுக்கு வந்த சிறுவன் உட்பட 2 பேர் வீட்டு காலிங் பெல்லை நிறுத்தாமல் அழுத்தி தொல்லை கொடுத்தனர். இந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த சிறுமியின் பாட்டியை 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியை காட்டி மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றனர். இது குறித்து சிறுமிகளின் பாட்டி பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாது. புகாரின் பேரில், போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கெம்பட்டி காலனி பாளையம்தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் உப்புமண்டி பகுதியை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி சிவக்குமார்(21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போட்டியில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் டாக்டராக உள்ளார்.
    • ஏ.வி.ஆர் ரவுண்டாவில் உள்ள ஸ்டிக்கர் கடை வைத்திருக்கும் உதயகுமார் என்ப ருடன் பழக்கம் ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபா ளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையின் டாக்டராக உள்ளார். இவரது மனைவியும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் அரசு டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் மகனுக்கு, ஏ.வி.ஆர் ரவுண்டாவில் உள்ள ஸ்டிக்கர் கடை வைத்திருக்கும் உதயகுமார் என்ப ருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த சிறுவனின் அரை நிர்வாணம் படத்தை எடுத்து உதயகுமார், மாணவி ஒருவருடைய படத்துடன் மார்பிங் செய்து அந்த படத்தை டாக்டர் ரமேஷிடம் காட்டி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்.

    இந்த படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த டாக்டர் ரமேஷ், தனது மகன் படத்தை ஏன் இப்படி செய்தீர்கள்? என கேட்டு எச்சரித்து அனுப்பினார்.

    இதனால் கோபம் அடைந்த உதயகுமார், தனது கடையில் வேலை செய்யும் தொளசம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (24), ஞானசேகரன் (22) ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து ஊழியர்கள் இருவரும் டாக்டர் வீட்டுக்கு சென்று அந்த படத்தை மீண்டும் காண்பித்து, அந்த படத்தில் இருக்கும் மாணவியின் தாய் விஷம் குடித்து மயங்கி விட்டதாகவும் கூறி 10 லட்சம் பணம் கேட்டு டாக்டரிடம் மிரட்டி உள்ளனர்.

    அங்கு அவர்கள் இரு வரையும் உட்கார வைத்து விட்டு சூரமங்கலம் போலீசா ருக்கு போனில் டாக்டர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திக், ஞானசேகரன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் உதயகுமார், மற்றும் அவரது உறவுகார பெண்ணையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அனுபிரியா மெட்டல் கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • அனுபிரியா வேலைபார்த்த இடத்தில் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்துள்ளார்.

    கோவை,

    கோவை காட்டூர் காளப்பன் லே-அவுட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அனுபிரியா (வயது 25). இவர் செல்லப்பன் வீதியில் உள்ள ஒரு மெட்டல் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அனுபிரியா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதையொட்டி அனுபிரியாவின் உறவினர்கள் ஏராளமானோர் பிரேத பரிசோதனை மையம் முன்பு திரண்டு நின்றனர். அனுபிரியா வேலைபார்த்த இடத்தில் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். எனவே அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். விசாரணை நடத்தி தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதை ஏற்று உறவினர்கள் அனுபிரியாவின் உடலை பெற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    போலீசார் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கடையில் வேலை பார்க்கும் திலகவதி, நாகராஜ் ஆகியோருக்கும், அனுபிரியாவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இது குறித்து அனுபிரியா காட்டூர் போலீசாருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரி வித்தார். போலீசார் மெட்டல் கடைக்கு விரைந்து சென்று அனுபிரியாவிடம் தகராறு செய்த திலகவதி, நாகராஜ் ஆகியோரை எச்சரித்து விட்டு சென்றனர்.

    இது குறித்து இவர்கள் 2 பேரும் மெட்டல் கடை உரிமையாளர் சிவக்குமாரிடம் தெரி வித்தனர். உடனடியாக உரிமையாளர் அனுபிரியாவை தனது அலுவலகத்துக்கு அழைத்து போலீசில் ஏன் புகார் செய்தாய் என கண்டித்ததுடன், சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போ, இனி உனக்கு இங்கு வேலை இல்லை என கூறி அனுப்பி வைத்துள்ளார்.

    இதன் காரணமாக மனவேதனை அடைந்த அனுபிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து அனுபிரியாவை தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப்பதிவு செய்து மெட்டல் கடை உரிமையாளர் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சிவக்குமார் (36), ஊழியர் நாகராஜ் ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அனுபிரியாவுடன் தகராறு செய்த திலகவதி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54)நேற்று அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது காணவில்லை.
    • மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் 2 பேர் திருடி செல்லும் காட்சிசி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54). இவர் நேற்று முன்தினம் அவரது மோட்டார் சைக்கிளை ராமநத்தம் கடைவீதியில் உள்ள மளிகை கடை முன் நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின் நேற்று அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து அந்தோணிசாமி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ராமநத்தத்தில் மளிகை கடை முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் 2 பேர் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று போலீசார் ராமநத்தம் மேம்பாலம் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்

    . அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ராமநத்தத்தை அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (20), பெரம்பலூர் மாவட்டம் ரெட்டிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (19) எனவும். இவர்கள் இருவரும் ராமநத்தத்தில் மளிகை கடை முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து ராமநத்தம் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்களில் அடிக்கடி கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • போலீசார் விசாரணையில் கஞ்சா கடத்திய கும்பல் பெங்களுரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    சேலம்:

    சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்களில் அடிக்கடி கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கஞ்சா கடத்தும் மர்ம நபர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் விசாரணையில் கஞ்சா கடத்திய கும்பல் பெங்களுரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பெங்களூரில் பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பெங்களூர் லக்கேரியை சேர்ந்த பசுவராஜ் (வயது 34), ஜெயா நகரை சேர்ந்த இஜாஸ் பாஷா (42) என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஒடிசா மாநிலம் பெளாங்கீர் பகுதியில் 1 கிலோ கஞ்சா 5 ஆயிரத்திற்கு வாங்கி வந்து 10 கிராம் பொட்டலங்களாக பொட்டு ரூ. 200 க்கு பெங்களூர், தமிழ்நாட்டில் விற்பனை செய்ததாக கூறினர்.

    இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

    • சிறுமி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாணவி மாயமானார். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாணவியை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கே.என்.பாளையயத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற சூர்யா(20) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்திய சூர்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இதேபோல் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவியை மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்(20) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த மாணவியையும் மீட்டு, அவரை கடத்திய ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    தொடர்ந்து கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • சேலம் மாவட்ட வன அலுவலர் குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று இரவு ரோந்து பணி ஈடுபட்டனர்.
    • அப்போது, காப்பு காட்டில் 2 பேர் வேட்டையாட பதுங்கி இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட வன அலுவலர் சசாங் கசியப் ரவி உத்தரவின் பேரில், வனசரக அலுவலர் முரளிதரன் தலைமையில் வனவர் பழனிவேல், வனக்காப்பாளர்கள் அசோக்குமார், அருண்குமார், செல்வசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர், குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று இரவு ரோந்து பணி ஈடுபட்டனர்.

    அப்போது, காப்பு காட்டில் 2 பேர் வேட்டையாட பதுங்கி இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், விசாரணை செய்ததில், அவர்கள் சங்கர் (வயது 29), பச்சியப்பன் (51) என்பது தெரியவந்தது.

    இருவரும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கன்னி வலைகளை பயன்படுத்தி புள்ளிமான், முயல், காட்டுப்பூனை போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 6-ல் நீதிபதி முன்பு அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராஜரத்தினம் தேயிலை தொழிற்சாலை அருகே நின்று கொண்டிருந்துள்ளார்.
    • 2 வட மாநில வாலிபர்கள் அங்கு வந்து, ராஜரத்தினத்துடன் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

    ஊட்டி,

    கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம் (வயது 60). விவசாய கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று கட்டபெட்டு இண்ட்கோ தேயிலை தொழிற்சாலை அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது குடிபோதையில் 2 வட மாநில வாலிபர்கள் அங்கு வந்து, ராஜரத்தினத்துடன் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். திடீரென ஆத்திரமடைந்த அவர்கள் கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து ராஜரத்தினத்தின் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அவர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட வெளி மாநில வாலிபர்களை தேடி வந்தனர். போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ராஜன் பிஷோ கர்மா என்பவரது மகன் கிரிஷ் பிஷா கர்மா (19), மற்றும் ராஜு சுனார் என்பவரது மகன் மந்தீப் சுனார் (19) ஆகிய இருவர் என்பதும், இவர்கள் கூலித் தொழிலாளிகளாக பணி புரிந்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டுக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். உடனே போலீசாரை கண்டவுடன் வேனில் வந்தவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர்.

    உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து வாகனத்தில் சோதனை செய்தனர். சோதனையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதுவை மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக புதுவை மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சூர்யா என்கிற ஆசிக் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
    • மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    ஈரோடு

    ஈரோடு தெற்கு போலீசார் சூரம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சூரம்பட்டி நேதாஜி வீதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற ஆசிக் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 125 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல கொல்லம்பாளையம் ரவுண்டான அருகில் ஈரோடு தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக மோட்டார் சைக்களில் வந்த நபரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், நஞ்சப்பகவுண்டர் வலசு பகுதியை சேர்ந்த சுதர்சன் (26) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த ரூ.2,200 மதிப்பிலான 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • சஞ்சய தனது நண்பர்களுடன் மதுகுடிக்க சென்றார்.
    • சந்துருவை தாக்கிய சஞ்சய் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை நியூ சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சஞ்சய்(22). இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த சந்துரு (20), அரவிந்த் (21). 3 பேரும் சம்பவத்தன்று அங்குள்ள பாருக்கு மது குடிக்க சென்றனர். அப்போது சஞ்சய்க்கும், அரவிந்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை சந்துரு விலக்கி விட முயன்றார். ஆத்திரமடைந்த சஞ்சய் தகாத வார்த்தைகளால் திட்டி சந்துருவை பீர் பாட்டிலால் தாக்கினார்.

    இந்த நிலையில் தன்னை தாக்கிய சஞ்சய் மீது ஆத்திரத்தில் இருந்த சந்துரு தனது நண்பர் மூர்த்தியுடன்(20) சஞ்சயை தேடி அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு சஞ்சய் இல்லாததால், சஞ்சயின் சகோதரியை தாக்கி, மிரட்டி விட்டு சென்றனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சந்துரு (22), மூர்த்தி (20) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சந்துருவை தாக்கிய சஞ்சய் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ×