என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் வழியாக ரெயிலில்  கஞ்சா கடத்தல்பெங்களூருவில் 2 பேர் கைது
    X

    கைதான 2 பேரை படத்தில் காணலாம்.

    சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்தல்பெங்களூருவில் 2 பேர் கைது

    • சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்களில் அடிக்கடி கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • போலீசார் விசாரணையில் கஞ்சா கடத்திய கும்பல் பெங்களுரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    சேலம்:

    சேலம் வழியாக கேரளா செல்லும் ரெயில்களில் அடிக்கடி கஞ்சா கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. கஞ்சா கடத்தும் மர்ம நபர்களை பிடிக்க ரெயில்வே போலீசார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் விசாரணையில் கஞ்சா கடத்திய கும்பல் பெங்களுரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பெங்களூரில் பதுங்கி இருந்த 2 பேரை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் பெங்களூர் லக்கேரியை சேர்ந்த பசுவராஜ் (வயது 34), ஜெயா நகரை சேர்ந்த இஜாஸ் பாஷா (42) என்பது தெரியவந்தது.

    இவர்கள் ஒடிசா மாநிலம் பெளாங்கீர் பகுதியில் 1 கிலோ கஞ்சா 5 ஆயிரத்திற்கு வாங்கி வந்து 10 கிராம் பொட்டலங்களாக பொட்டு ரூ. 200 க்கு பெங்களூர், தமிழ்நாட்டில் விற்பனை செய்ததாக கூறினர்.

    இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×