என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் பள்ளி மாணவிகளை கடத்திய 2 பேர் கைது
- சிறுமி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாணவி மாயமானார். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கே.என்.பாளையயத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற சூர்யா(20) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்திய சூர்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதேபோல் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவியை மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்(20) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த மாணவியையும் மீட்டு, அவரை கடத்திய ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தொடர்ந்து கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.






