என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 பேர் கைது"

    • சிறுமி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாணவி மாயமானார். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாணவியை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கே.என்.பாளையயத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற சூர்யா(20) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று மாணவியை மீட்டனர். மேலும் மாணவியை கடத்திய சூர்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    இதேபோல் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவியை மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்(20) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த மாணவியையும் மீட்டு, அவரை கடத்திய ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    தொடர்ந்து கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • 13 பசு மாடுகள், 7 எருமை மாடுகள், 3 எருமை கன்றுகுட்டிகளை லாரியில் ஏற்றி கொண்டி–ருந்தனர்.
    • மாடுகளை வண்டியில் ஏற்றும்போது சித்ரவதை செய்ததாக தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் கம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 43). இவர் மிருக நலவாரிய அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் சிவக்–குமார் நேற்று தொப்பூர் வனப்பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்–போது அங்கு 2 பேர் 13 பசு மாடுகள், 7 எருமை மாடுகள், 3 எருமை கன்றுகுட்டிகளை லாரியில் ஏற்றி கொண்டி–ருந்தனர்.

    முறையான பராமரிப்–பின்றி அந்த மாடுகளை வண்டியில் ஏற்றும்போது சித்ரவதை செய்ததாக தெரியவந்தது. உடனே சிவக்குமார் அந்த 2 பேரிடம் மாடுகளை வண்டியில் இருந்து இறக்கி விடுமாறு கூறினார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர்.

    இதுகுறித்து சிவக்குமார் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் கர்நாடகா மாநிலம் மைசூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் (45), கிருஷ்ணகிரி அவ்வை நகரைச் சேர்ந்த டிரைவர் பைரோஸ் அம்ஜத் (37) ஆகிய2 பேர் மாடுகளை சித்ரவதை செய்தது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×