search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 Arrested"

    • செந்தில்நாதன் மகள் தனுஸ்ரீ(வயது 14). இவர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • சிறுமியை தடுத்து நிறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரியமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மகள் தனுஸ்ரீ(வயது 14). இவர் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று தனுஸ்ரீ அவரது சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ்குமார்(32), மதுக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் கிஷோர்குமார்(21) ஆகியோர், சிறுமியை தடுத்து நிறுத்தி அவர் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்தனர்.

    அப்போது தனுஸ்ரீ நிலைதடுமாறி சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். உடனே தனுஸ்ரீ சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே ரமேஷ்குமாரும், கிஷோர்குமாரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து உள்ளனர்.

    இருப்பினும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து, பரமத்தி வேலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து, ரமேஷ் குமார் மற்றும் கிஷோர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • திண்டிவனத்தில் சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து ஒருவர் பலியானார். இது தொடர்பாக திண்டிவனம் தீர்த்தகுளம் ஏரிகோடி தெருவைச் சேர்ந்த மரூர் ராஜா என்கிற ராஜா (வயது 38) கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டிவனம் தீர்த்த குளம் மேம்பாலம் அருகே, திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

    அப்போது போலீசாரை கண்டவுடன் ஓட முற்பட்ட தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் 15 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் கிடங்கல் ஏரிக்கரை அருகே சோதனை செய்ததில் அதே பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 12 லிட்டர் சராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழங்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் நேற்று ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • கஞ்சா விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு பகுதியில் நேற்று ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜலகண்டீஸ்வரன் (வயது 23), மணிரத்தினம்(21) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை கத்தியால் குத்தினர்.
    • பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    கோவை,

    கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அப்சல் (19). கஞ்சா வியாபாரி. இவர் சுங்கம் பைபாஸ் ரோட்டில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உக்கடத்தை சேர்ந்த கார்த்திகேயன்(27) மற்றும் பாலமுருகன் (24) ஆகியோர் அப்சலிடம் வாக்குவாதம் செய்தனர் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.

    கைதான 2 பேரும் மீதும் கஞ்சா விற்பனை , திருட்டு என பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    • ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
    • 2 பேர் சேர்ந்து தாக்கினர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், கீழ்விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 20), 18 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் மதுகுடிப்பதற்காக அங்கே இருந்து உள்ளனர்.

    அப்போது இவர்கள் இருவரும் இளங்கோவிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி அவர்கள் 2பேரும் சேர்ந்து இளங்கோவை சரமாரியா கதாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.

    • இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையில் போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வினோபா நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் நின்றிருப்பதை அறிந்து அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த அகிலன்(25), திருப்பூரை சேர்ந்த விஜய்(54) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்காக 1 கிலோ 200 கிராம் கஞ்சா எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கடலூர்:

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வல்லம் காலனி கிழக்கு தெரு பழனிவேல் (வயது 52) காட்டுக்கூடலூர் கலைஞர் தெருவை சேர்ந்த முருகவேல் (49), ஆகியோர் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வாட்ஸ் அப் வழியாக லாட்டரி விற்பனை நடை பெறுவதாக, வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சமூக ஊடகங்களை கண்காணிக்க தொடங்கினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வாட்ஸ் அப் வழியாக லாட்டரி விற்பனை நடை பெறுவதாக, வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் சமூக ஊடகங்களை கண்காணிக்க தொடங்கினர்.

    அதன்படி, வாட்ஸ் அப்பில் லாட்டரி விற்பனை செய்ததாக பி.எஸ்.என்.எல். ஊழியர் சேகர் (வயது 56), தனியார் பால் நிறுவன ஊழியர் விக்னேஷ் (24) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களி டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை
    • கலெக்டர் உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சாராயம் விற்பதாக ஆந்திர மாநிலம் வி கோட்டா மண்டலம் பாம்பு களிப்பள்ளியை சேர்ந்த பூபேஷ் (வயது 25 (தாமோதரன் வயது 30 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

    கலெக்டர் உத்தரவின்பேரில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை போலீசார் வேலூர் சிறையில் உள்ள பூபேஷ் தாமோதரன் ஆகியோரிடம் வழங்கினர்.

    • போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக சேலம் மாவட்ட எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மருந்து மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்ககிரி:

    சங்ககிரி விஎன்பாளையம் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (63). இவர் சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக சேலம் மாவட்ட எஸ்.பி. சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை டாக்டர் ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் கீதா, உள்ளிட்ட குழுவினர் சென்று சோதனை நடத்தினர். அப்போது நோயாளிகளுக்கு பன்னீர்செல்வம் ஆங்கில மருத்துவம் பார்த்தது உறுதியானது.

    போலி மருத்துவர் பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்து நோயாளிகளுக்கு பயன்படுத்தி வந்த மருந்து மாத்திரைகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, சங்ககிரி வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த தேவராஜன் (67), என்பவர் வீட்டில் வைத்து ஆங்கில மருத்துகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து தெரியவந்தது.

    அதன் பேரில் சங்ககிரி அரசு மருத்துவர் செந்தில்வேலுடன் சென்று சோதனை செய்தபோது போலி மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டு மருந்து மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சங்ககிரியில்

    போலி மருத்துவர்கள் 2பேர் கைது

    • கடமானை துப்பாக்கியால் சுட்டு கொன்று வேட்டையாடியது தெரிய வந்தது.
    • வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தென் பர்கூர் காப்புக்காடு வரட்டு ப்பள்ளம் அணை பீட் சரக வனப்பகுதியில் வனச்சர அலுவலர் உத்திரசாமி தலைமையில் வனவர்கள் சக்திவேல், திருமூர்த்தி மற்றும் வனக்காப்பாளர் சதீஸ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வரட்டு ப்பள்ளம் அணை பகுதியில் புதர் மறைவில் மறைந்திருந்த 2 பேரை வனத்துறை குழுவினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கோவிலூரை சேர்ந்த முருகேசன் (40), எண்ணமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் (44) என்பதும், இவர்கள் மற்றும் கோவிலூரை சேர்ந்த பிரபு , சடையப்பன், மந்தையை சேர்ந்த முருகேசன், விளாங்குட்டையை சேர்ந்த ராசு என 6 பேர் கொண்ட கும்பல் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கடமானை துப்பாக்கியால் சுட்டு கொன்று வேட்டையாடியது தெரிய வந்தது.

    மேலும் கடமானை துண்டு, துண்டாக வெட்டி 4 சாக்குகளில் கட்டி வெளியே எடுத்து வரும் போது வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.

    அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு, சடையன், முருகேசன் மற்றும் ராசு ஆகிய 4 பேரும் வனப்பகுதி யில் சுட்டு கொன்ற கடமானின் கறி ,4 சாக்குகள் , துப்பாக்கி ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி மறைந்திருந்தனர்.

    இதில் வனத்துறையினரை கண்டு 2 பேர் தப்பி ஓடி விட்டதும், மற்ற 2 பேர் வனத்துறையினரிடம் சிக்கி கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனையடுத்து, முருகேசன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.

    • போலீசார் விசாரணை
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடியில் அரசு நூற்பாலை உள்ளது. மூடப்பட்ட இந்த தொழிற்சாலையில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அங்குள்ள பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    அணைக்கட்டு அருகே உள்ள கலங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த காவலாளி கணபதி என்பவர் 2 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்தார்.

    அப்போது தொழிற்சாலையில் புகுந்த 2 பேர் அங்கிருந்த இரும்பு தகடுகள் மற்றும் கம்பிகளை திருடி சென்றனர்.

    அவர்களை காவலாளி கணபதி விரட்டிச் சென்றார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்புக்கம்பி திருடியவர்களை தேடி வந்ததனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையில் இரும்பு கம்பிகளை திருடியது அரியூர் மலைக்கோடி நம்பிராஜபுரத்தைச் சேர்ந்த சுதாகர் (வயது 25) ராஜாராம் (28) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×