என் மலர்
உலகம்
- புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பூலியோ தங்கி இருந்தார்.
- ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் பூலியோ என்ற சார்லஸ் ஜோன்ஸ் (வயது 26). பிரபல ராப் பாடகரான இவரை சமூகவலைதளத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். இதற்காக புளோரிடாவின் தம்பா நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் ஓட்டலின் கார் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பூலியோ ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ராப் பாடகரான பூலியோ கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி.
- புலனாய்வு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா முனையில் நடத்திய தாக்குதலில் ஹமாசின் சீனியர் ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். ரஃபா மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாசின் ஆயுத தயாரிப்பு தலைமையகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டு பொறுப்பாளர் முகமது சாலா கொல்லப்பட்டார் எனத் தெரிவித்துள்ளது. புலனாய்வு அடிப்படையில் ரபா பகுதி மீதான இலக்கு தாக்குதல் (ஒரு இடத்தை குறிவைத்து தாக்குதல்) தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 37 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்தனர்.
- 21 ஊழியர்கள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். 2-வது பேர் படுகாயம் அடைந்தனர்.
தென்கொரியாவின் தலைநகரான சியோலில் இருந்து தெற்குப் பகுதியில் 45 கி.மீட்டர் தொலைவில் உளள் ஹ்வாசியோங்வில் உள்ள முக்கியமான பேட்டரி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தின்போது மாயமான 21 தொழிற்சாலை தொழிலாளர்கள் உயிரிழந்தது உறுதியானது. அவர்களின் உடல்களை மீட்புப்படையினர் மீட்டனர். தொழிற்சாலையில் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தியபோது ஒரு தொழிலாளர் மாரப்படையால் உயிரிழந்ததை மீட்புப்படையினர் கண்டு பிடித்தனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஆறு பேர் லோசான காயத்துடன் உயிர்தப்பினர். இன்னும் ஒரு தொழிலாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தொழிற்சாலைக்குள் சி்க்கி உள்ளாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.
லித்தியம் பேட்டரி தொழிற்சாலை என்பதால் தீயணைப்புப்படை வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள். தீ விபத்து ஏற்பட்டபோது மூன்று மாடிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில் 35 ஆயிரம் லித்தியம் பேட்டரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
- கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை சுமார் 3 ஆயிரம் பேர்.
- நடவடிக்கை அங்காரா, அன்டால்யா, புர்ஸா, மெர்சின், ஒர்டு, இஸ்தான்புல் ஆகிய மாகாணங்களில் நடைபெற்றுள்ளது.
துருக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆறு மாகாணங்களில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். உடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் வகையில் 30 பேரை கைது செய்துள்ளதாக துருக்கி உள்துறை மந்திரி அலியெர்லிகயா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை அங்காரா, அன்டால்யா, புர்ஸா, மெர்சின், ஒர்டு, இஸ்தான்புல் ஆகிய மாகாணங்களில் நடைபெற்றுள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை சுமார் 3 ஆயிரம் பேர் ஐ.எஸ். பயங்கரவாத குழுவுடன் தொடர்ந்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
- போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.
- அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ரியாத்:
சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு புனித பயணம் செல்வதை முஸ்லிம் மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதுகின்றனர்.
இதனால் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் மெக்கா, மதீனாவுக்கு 'ஹஜ்' புனித பயணம் செல்கின்றனர். அதன்படி இந்தாண்டு ஹஜ் பயணமாக மெக்காவில் சுமார் 18 லட்சம் முஸ்லிம்கள் குவிந்தனர்.
இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக மெக்காவில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் ஹஜ் பயணம் சென்ற பலர் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் வெப்ப அலை காரணமாக 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் பகத் அல் ஜலாஜெல் கூறும்போது,
ஹஜ் பயணம் சென்ற யாத்ரீகர்கள் இறப்பு எண்ணிக்கை 1,301-ஐ எட்டி உள்ளது. 83 சதவீதம் பேர் ஹஜ் பயணம் செய்ய பதிவு செய்யப்படாதவர்கள். போதுமான தங்குமிடம் அல்லது வசதியின்றி நேரடி சூரிய ஒளியின் கீழ் நீண்ட தூரம் நடந்துள்ளனர்.
வெப்ப அலையின் ஆபத்துகளில் இருந்து யாத்ரீகர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள முடியும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அனுமதி இல்லாமல் மெக்காவுக்கு வந்த 1,40,000 யாத்ரீகர்கள் உள்பட 5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே, 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் மிடுக்காக நடந்து வந்து தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார்
- 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சாதனைகளை நிகழ்த்துவதற்கும் பிடித்த விஷயங்களை செய்வதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்கவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்றார். இந்நிலையில் தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.
அமேரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் என்னும் அந்த மூதாட்டி மிடுக்காக நடந்து வந்து தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1940 ஆம் ஆண்டு கின்னி தனது இளங்கலைப் பட்டத்தை ஸ்டேன்போர்டில் பெற்றார். அதைத்தொடர்ந்து தனது முதுகலைப் படிப்பை பயிலத்தொடங்கிய கின்னி ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் அந்த சமயத்தில் கின்னியின் காதலன் ஜார்ஜ் இரண்டாம் உலகப்போரில் பணியாற்ற செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கின்னியின் படிப்பு பாதியில் தடைபட்டது. எனவே தற்போது 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பட்டத்தை வாங்கிக்கொண்ட கின்னி இதுகுறித்து பேசுகையில், அடக் கடவுளே , இதற்காக நான் வெகு காலமாக காத்திருந்தேன். முயற்சி செய்தால் எல்லோரும் மேல் படிப்பில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.

- வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.
- இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ரஷ்யாவில் வார இறுதி நாளான [ஞாயிற்றுக்கிழமை] நேற்று [ஜூன் 23] யூத வழிபாட்டுத் தளங்கள் மீதும் போலீஸ் நிலையம் மீதும் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 1 மதகுரு, 14 போலீசார் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.

நேற்று அப்பகுதியில் உள்ள சர்ச்களுக்குள்ளும் Synagogue எனப்படும் யூத வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த அந்த கும்பல் வழிபாட்டுக்காக கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.
தாக்குதலினால் மகாச்காலா பகுதியில் உள்ள சர்ச் உட்பட இரண்டு சர்ச்கள் தீப்பற்றி எறிந்தன. சம்பவங்களின்போது அங்கு கூடியிருந்த மக்கள் உயிர்பிழைத்த நிலையில் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் தப்பிச் செல்லும்போது போலீஸ் போஸ்ட் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த மொத்த தாக்குதல்களிலும் இதுவரை 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் உடனடியாக நடந்த்து இல்லை என்றும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்னாள் ரஸ்ய தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹாலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 133 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுடிதார் உடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது.
- பல ஆயிரம் பேர் பாராட்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து ஓட்டலில் இந்தியர்களை கவர்வதற்காக சுடிதார் உடையில் சேவை செய்யும் பெண்களின் வீடியோ வலைத்தளவாசிகளை கவர்ந்துள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் இந்திய தம்பதியான சினேகா-வீரு ஆகியோர் சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றபோது அங்கு பணியாற்றும் பெண்கள் அனைவரும் சிவப்பு நிற சுடிதார் உடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது அவர்களை வெகுவாக கவர்ந்தது. அதை வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட்டனர்.
"வெளிநாட்டில் இந்திய உணவகங்களில் நுழைவது ஒரு கலாசார நேரமாக இருக்கும். சில ஓட்டல்களில் பணக்கார மரபுகள் மற்றும் பகட்டு அலங்காரங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதாக தோன்ற வைக்கும்.
ஆனால் சுவிட்சர்லாந்து இந்திய உணவகத்தில் பணிப்பெண்கள் இந்தியர்களாக (சுடிதார்உடையில்) இருந்தபோது...." என்று பதிவிட்டு உள்ளனர்... அந்த பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வையைப் பெற்றது. பல ஆயிரம் பேர் பாராட்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.
+2
- அபுதாபி இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரியில் திறந்து வைத்தார்.
- அங்கு நிறுவப்பட்ட சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.
அபுதாபி:
இந்திய பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக மோடியின் வேண்டுகோளை ஏற்று அபுதாபியில் இந்துகோவில் கட்டுவதற்கு அமீரக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து துபாய்–அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் இந்து கோவில் கட்ட 55,000 சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.
இதற்கிடையே, அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் திறந்துவைத்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள கடவுள் சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்தார்.
இந்நிலையில், அபுதாபி இந்து கோவிலுக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சென்று சாமி தரிசனம் செய்தார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று அபுதாபியில் உள்ள பாப்ஸ் இந்து கோவிலுக்குச் சென்றதில் ஆசிர்வதிக்கப்பட்டேன். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்புறவின் புலப்படும் சின்னமாக இது உலகிற்கு ஒரு நேர்மறையான செய்தியை வெளிப்படுத்துகிறது. இந்தக் கோவில் இரு நாடுகளுக்கு இடையே ஓர் உண்மையான கலாசார பாலமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
- காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
- பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.


எலான் மஸ்க் - சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3 வது குழந்தையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் - சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் - ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதுதவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று ப்ளூமன்பெர்க் அறிக்கை குறிப்பிடுகிறது. எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
- இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.
பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

- உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
- பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை என நிஷாத் கூறினார்.
அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் படித்தால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இதனால் மேற்படிப்புக்காக ஆண்டு தோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் தாய் நாட்டை விட்டு மேல்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். படிப்பிற்காக பல லட்சங்களும் செலவு செய்யப்படுகிறது. படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் வேலை பார்ப்பதில் வரும் சம்பளத்தில் மாணவர்கள் தங்களது இதர செலவுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நிஷாத் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோவில், கனடாவில் பிரபல உணவகமான டிம் ஹார்டனில் வேலைவாய்ப்புக்காக நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர். நிஷாத்தும் வேலைக்காக அங்கு சென்ற போது நூற்றுக்கணக்கானவர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். உள்ளூர் மக்களும் இங்கே என்ன நடக்கிறது என்று ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.
பல மணி நேரம் வரிசையில் நிற்பவர்களிடம் உணவக ஊழியர்கள், அவர்களது விண்ணப்பங்களை வாங்கிக்கொண்டு பிறகு அழைப்பதாக கூறி அனுப்பி விடுகின்றனர். நிஷாத் பல இடங்களில் வேலைவாய்ப்புக்காக சென்றதாகவும், எங்கு வேலை கிடைக்கும் என்று தெரியவில்லை, இது எனது போராட்டம் நிறைந்த நாள் என்று கூறினார்.






