என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "love affair"

    • 'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.
    • புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள்.

    காதல் என்பது ஆழமான மற்றும் சிக்கலான உணர்ச்சிகளின் சங்கமம். காதலில் எப்போதும் லாஜிக் பார்க்கக்கூடாது. மேஜிக் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அதனால்தான் என்னவோ திறமைசாலிகளும், புத்திசாலிகளும் எப்போதும் காதலில் போராடுகிறார்கள்.

    'காதல் என்பது முட்டாளின் ஞானம் மற்றும் ஞானிகளின் முட்டாள்தனம்' என்று ஆங்கில பொன்மொழி உள்ளது.

    பொதுவாக புத்திசாலித்தனம் சிறப்பான குணமாக கருதப்பட்டாலும், அது சில நேரங்களில் காதல் விஷயங்களில் எதிர்பாராத சவால்களை ஏற்படுத்தக்கூடும். விமர்சன சிந்தனை, பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவர்கள் அதே பகுப்பாய்வு மனநிலையுடன் காதலையும் அணுகலாம்.

    இது அவர்களின் உறவுகளில் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தலாம். சரி..! புத்திசாலித்தனமாக செயல்படுபவர்கள், காதலில் எப்படியெல்லாம் சொதப்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோம்.

    ஆழமான சிந்தனை

    புத்திசாலி நபர்கள் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார்கள். பெரும்பாலும் துணையின் மனநிலை, காதல் கை கூடுவதற்கான வாய்ப்புகள், காதல் உண்டாக்க இருக்கும் சிக்கல்கள், இருதரப்பு குடும்ப புரிதல் இப்படி நீளமாக சிந்தித்த பின்னரே, காதல் உறவில் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்படி காதலிக்க ஆரம்பித்தாலும், தன்னுடைய துணையுடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை. அவர்களுக்கு தேவையானதை மட்டும், அதுவும் அவர்களை பாதிக்காத விஷயங்களை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள். இவை, காதலன்-காதலிக்குள் வெளிப்படை தன்மை குறித்த சர்ச்சைகளை, பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

    பர்பெக்ட்

    புத்திசாலிகள் பெரும்பாலும் தாங்களும், தங்களை சார்ந்தவர்களும், இப்படிதான் செயல்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். கலந்துரையாடல், புரிதல், காதல் இப்படி எல்லாவற்றிலும் ஒரு முதிர்ச்சியை (மெச்சூரிட்டி) எதிர்பார்க்கிறார்கள். இந்த பெர்பெக்ஷனை எல்லா சமயங்களிலும் எதிர்பார்ப்பது கடினம். ஆனாலும் ஒரு சிலர் எதிர்பார்ப்பதால், பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    பயம்

    புத்திசாலித்தனமான நபர்கள் காதலில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பு அதன் நீண்டகால தாக்கங்களை பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் நிதி நிலை, காதல் உறவின் வெற்றி-தோல்வி வாய்ப்புகள் இப்படி எல்லாவற்றையும் அதிகமாக கணக்கிடுவதால், காதல் உறவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பு தயங்குகிறார்கள்.

    உற்ற துணை

    தங்களுடைய புரிதல், புத்திசாலித்தனத்திற்கு ஏற்ப துணைத்தேடுவதுதான், இவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால். எல்லா மனிதர்களும், எல்லா விஷயங்களிலும் சிறப்பானவர்களாக இருப்பர் என்று சொல்லிவிட முடியாது. சிலருக்கு சில விஷயங்களில் ஆழ்ந்த புரிதல் இருக்கலாம். ஆனால் எல்லா விஷயங்களிலும் அதை எதிர்பார்க்கக்கூடாது. ஆனால் இந்த விஷயத்தில்தான், பலருக்கும் சிக்கல் உண்டாகிறது. தங்களைபோலவே, ஆழ்ந்த சிந்தனை, ஆழ்ந்த புரிதல் கொண்ட துணையை தேடி பலரும் ஏமாந்துவிடுகிறார்கள்.

    • காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிக்குண்டு வைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதுரகிரி (20). இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் ஆகட்டும் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சதுரகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவராமன் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு சம்மதம் கேட்டபோது, பெற்றோர்கள் கடன்களை அடைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிவராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலையம்மாள், இவர்களது மகன் அருண்பாண்டி (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட அருண்பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தாக்கப்பட்டனர்.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மகேந்திரன்(வயது23). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று மகேந்திரன் வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த மகேந்திரன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கணேஷ்(28). இவர் பெருமாள்பட்டியை சேர்ந்த புழுகாண்டி என்பவரின் மகளுடன் பழகியதாக தெரிகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புழுகாண்டி, அவரது மகன் கதிர்வேல், உறவினர் நடராஜன் ஆகிய 3 பேர் சம்பவத்தன்று கணேசை சரமாரியாக தாக்கினர்.

    படுகாயமடைந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த உதயகுமார்(26). தனியார் கிளப் பார் ஊழியரான இவரை மது கேட்டு வடபட்டி மேலூரை சேர்ந்த மாரிச்செல்வம், கபாலி, சதீஸ் ஆகியோர் தாக்கினர். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.
    • பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

    உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனருமான எலாம் மஸ்க் தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

    தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.

     

     

    எலான் மஸ்க் - சிவோன் சிலிஸ் ஜோடிக்கு இது 3 வது குழந்தையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு எலான் - சிலிஸ் இணையருக்கு ஸ்டிரைடர் - ஆஸுரே என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதுதவிர பிரபல கனேடிய பாடகி கிரிம்ஸ், எலான் மஸ்க்கின் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

     

    தற்போது ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று ப்ளூமன்பெர்க் அறிக்கை குறிப்பிடுகிறது. எலான் மஸ்க் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பகிராதவராகவே இருந்து வருகிறார். சமீபத்தில் தனது நிறுவனத்துக்கு இண்டர்ன்ஷிப் வந்த பெண்ணுக்கு பாலியல் துப்புறுதல் அளித்ததாக எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
    • இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அம்ரோஹா:

    உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள கெடா அப்ரோலா கிராமத்தில் இளைஞர் ஒருவரை பாதி மொட்டையடித்தும் கழுத்தில் செருப்பு மாலையுடன் ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கெடா அப்ரோலா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் மகளிடம் பேசியதற்காக இளைஞர் மீது கோபமடைந்து, இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த பஞ்சாயத்தில் இளைஞருக்கு இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞரை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், சில குழந்தைகள் அவரை கேலி செய்வதும் பதிவாகியது.

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமூகத்தைச் சேர்ந்த இரு வீட்டாருக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • சிறுமிக்கும், காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் செல்லம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுமியை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இருவரும் காதலித்து வந்த நிலையில், வழக்கம்போல் சந்தி்தது பேசியுள்ளனர்.

    அப்போது, சிறுமிக்கும், காதலனான இளைஞர் செல்லத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இளைஞர், தனது சித்தப்பா வீட்டில் இருந்த ஏர்கன் எடுத்து வந்திருந்த நிலையில், ஆத்திரத்தில் சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    இதில், சம்பந்தப்பட்ட சிறுமி படுகாயம் அடைந்துள்ளார். சிறுமியை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் செல்லம் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதனால் அங்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல் பட்டுள்ளனர்.
    • கத்தியால் வெட்டிய மாணவரின் புத்தக பையை ஆசிரியர்கள் சோதனை செய்தனர்.

    புதுச்சேரி:

    காதல் விவகாரம் ஒருவரை ஆத்திரத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புதுச்சேரியில் பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவனை கத்தியால் குத்தும் அளவிற்கு சென்றுள்ளது.

    புதுச்சேரி மூலக்குளம் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பு மாணவன், மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.

    இதையறிந்த மற்றொரு தரப்பினர் மாணவி பெயரில் போலி சமூகவலைதள ஐ.டி. உருவாக்கி, மாணவருக்கு மாணவி அனுப்புவதுபோல குறுஞ்செய்தி அனுப்பி வந்தனர். அந்த மாணவரும், தான் காதலிக்கும் மாணவி தான் குறுஞ்செய்தி அனுப்புவதாக நினைத்து மெசேஜ் மூலம் பேசி வந்தார்.

    ஒரு கட்டத்தில், இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் என மாணவி போல அந்த தரப்பினர் மெசேஜ் செய்தனர். இதனால் சோகமடைந்த மாணவர், நேரடியாக மாணவியிடம் சென்று கேட்டார். அப்போது அந்த மாணவி, தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என கூறிவிட்டார்.


    அந்த போலி ஐ.டி.யை உருவாக்கியது யார்? என மாணவர் விசாரித்த போது எதிர்தரப்பு மாணவர்கள் கேலி, கிண்டல் செய்ய போலி ஐ.டி. உருவாக்கியது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. அதோடு அந்த மாணவர்கள் ஏமாந்தாயா? என அவரை கிண்டல் செய்துள்ளனர்.

    இதனால் அவமானப்பட்ட மாணவர் போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை பழி தீர்க்க கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக புதிதாக கத்தி வாங்கிக் கொண்டு, பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி இடைவேளையில் மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர் போலி ஐ.டி. உருவாக்கிய மாணவரை குத்த முயன்றபோது, மற்ற மாணவர்கள் தடுத்தனர். இருப்பினும் அந்த மாணவரின் கையில் கத்தி வெட்டு விழுந்தது.

    ஆசிரியர்கள் அங்கு விரைந்து வந்து கத்தியை பிடுங்கினர். காயமடைந்த மாணவரை மருத்துவமனை அழைத்துச் சென்று ஆசிரியர்கள் சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பள்ளி நிர்வாகம் புகார் அளிக்க வேண்டாம் என கேட்டு கொண்டதால் பெற்றோர் போலீசில் புகார் அளிக்கவில்லை.

    இதனிடையே கத்தியால் வெட்டிய மாணவரின் புத்தக பையை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது அடுத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

    புத்தக பையில் 6 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதைக்கண்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசுக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மாணவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அரிவாளால் வெட்டிய மாணவரின் தந்தை போலீஸ் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி வழக்கு பதியவில்லை.  

    புத்தகம் தூக்க வேண்டிய கை கத்தியை எடுத்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று ஒருதலைக்காதலில் சிக்கும் இளைஞர்கள் தங்கள் பொன்னான வாழ்க்கையை மறந்து கொலை செய்யக்கூடிய விபரீத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
    காதல் புனிதமானது. ஒரு ஆணும், பெண்ணும் மனதார விரும்பி மணம் முடித்துக்கொள்ளும் வாழ்க்கை இனிமை நிறைந்தது. சங்ககாலம் முதல் தற்கால கவிஞர்கள் வரை காதலின் மகத்துவத்தை பாடாத புலவர்களே இல்லை. ஆனால், இன்று ஒருதலைக்காதலில் சிக்கும் இளைஞர்கள் தங்கள் பொன்னான வாழ்க்கையை மறந்து கொலை செய்யக்கூடிய விபரீத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தான் நேசிக்கும் பெண் மீது கொண்ட ஈர்ப்பு தான் அவர்களை இந்த நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது இது போன்ற ஒருதலைக்காதல் மயக்கத்தில் படுகொலை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒருதலைக்காதல் கொலைகள் அதிகரிப்பதை தடுக்க பெண்களும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இவர்கள் முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான நேரங்களை செலவிடுகின்றனர்.

    இதன் மூலம் தாங்கள் பதிவிடும் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, சாட் செய்வது உள்ளிட்ட சம்பவங்களால் ஒருவருக்கொருவர் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இந்த பழக்கத்தை சிலர் ஒருதலைக்காதலாக கருதி, தான் விரும்பிய பெண்ணிடம் காதலை தெரிவிப்பது, அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே... தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என்ற மனோபாவம் தான் இதுபோன்ற படுகொலைகள் அதிகரிக்கிறது என்று மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் தங்கள் மகள்களையோ, பணி இடங்களுக்கு செல்லும் தங்கள் மகள்களையோ கண்காணிக்க அவர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் இருப்பது இல்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் தங்களை வாலிபர்கள் யாராவது பின்தொடர்ந்தாலோ, தங்களை காதலிக்குமாறு வற்புறுத்தினாலோ அதுபற்றி தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பதில்லை. ஏன் வீண் சிரமம்? குடும்பத்தில் தெரிவித்து தங்களை படிக்க அல்லது வேலைக்கு அனுப்ப மறுத்து விடுவார்களோ என்ற எதிர்கால பயம் பெண்களிடம் இருப்பதால் தான் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறுகிறது.

    ஆரம்பத்திலேயே தங்களை பின்தொடரும் நபர்கள் மீது பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் எதிர்ப்பை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதோடு அதுபற்றி தங்கள் பெற்றோரின் கவனத்துக்கும் கொண்டு செல்வது அவசியம். பெற்றோர்களும் மகள், பள்ளி, கல்லூரிக்கோ அல்லது பணி இடத்துக்கோ போகும்போது வாலிபர்கள் பின் தொடர்கிறார்கள் என்றால் அதுகுறித்து அசட்டையாக இருந்து விட வேண்டாம்.



    சம்பந்தப்பட்ட நபரை நேரில் சந்தித்து தங்கள் குடும்ப வாழ்க்கை முறையை எடுத்துரைத்து பின்தொடர்வதை தடுக்கலாம். இல்லாவிட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். இது கூட சில நேரங்களில் ஆத்திரத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் சில நேரங்களில் பெண்களை பின் தொடர்ந்து செல்லும் வாலிபர்கள் தங்கள் முயற்சியை கைவிடவும் வாய்ப்பு உள்ளது.

    பெண்களும் தங்களை ஒருதலையாக காதலிக்கும் வாலிபர்களிடம் இருந்து தப்பிக்க எப்போதும் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடத்தின் வழியாக செல்லுங்கள். முடிந்தவரை கிட்ட நெருங்கினாலோ சத்தம் போட்டு ஊரை கூட்டுங்கள். நிச்சயம் அது பலன் கொடுக்கும். பெண்களே உங்களை நீங்கள் தான் காத்து கொள்ள வேண்டும்.

    முடிந்தவரை சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் அதிக நேரம் அரட்டை அடிக்காதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். அது போல் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருங்கள். பின்னால் பிரச்சினை வரும் என்று நினைக்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமும், நண்பர்களிடமும், வேலை பார்க்கும் இடங்களில் அதிகாரிகளிடமும் தெரிவியுங்கள். ஒருவர் பின்தொடர்கிறார் என்றால் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுங்கள்.

    அது போல் காதல் மயக்கத்தில் இருக்கும் இளைஞர்களும் தங்கள் பொன்னான எதிர்காலத்தை உணரவேண்டும்.. ஒருதலைக் காதலில் இதுபோன்ற ரத்த களரி இனியும் வேண்டாம். இன்று... தங்கள் குடும்பத்துக்கு உதவியாக இருந்த தாங்கள் 22 ஆண்டுகள் ஆசையாக வளர்த்த அருமை மகள் ரம்யாவை இழந்து தவிக்கும் அவர்களது பெற்றோருக்கு யார் ஆறுதல் கூற முடியும். காதல் மோகம் ராஜசேகரின் வாழ்க்கையும் சூறையாடிவிட்டது. எனவே இன்றைய இளைஞர்கள் ஒருதலைக்காதலில் சிக்கி சாதலில் முடிய வேண்டாம். வாழ்க்கை வாழ்வதற்கே.. வாழ்ந்து காட்டுங்கள்.

    - குருவன்கோட்டை ஸ்ரீமன்.
    குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிடைக்காது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுகின்றனர்.
    பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள். ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார்.

    படிப்பு, அறிவு, அழகு, பொழுது போக்கு, வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை, கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர். இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.

    அப்படி, பதவி, வருமானம், திறமை, நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும் சண்டை, சச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியலாம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம். வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.

    குடிகாரக் கணவன், வேலைக்குச் செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர். தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.

    அன்பு ஆதரவு இல்லாத உறவுகள், சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர்.



    மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது.

    கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மணவிலக்குப் பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன. திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.

    கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது. மற்ற குடும்பங்களை விட இந்தக் குடுமபங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஆபத்தான இணைய நட்பு வீட்டுக்கு வீடு கணினி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதன் வழி நாம் பெறும் அனுபவங்கள் போற்றத்தக்கதாய் இல்லை.

    இப்படி இன்றைய அறிவியல் பொறிகளின் மீது நாம் பழியை அடுக்கியுரைத்தாலும் சில பல தவறுகள் நம்பக்கம் இருப்பதையும் சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.



    ஆண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ, அலுவலகத்திலோ சந்தித்து சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன.

    கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.

    வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம். இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர். அலுவலகத்தில் நடக்கும் விழாக்கள், பார்ட்டிகள், மதுபரிவர்த்தனைகள் நடைபெறும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் கூடா உறவுக்கு வழிவகுக்கும் செயல்காளகும்.

    அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த சம்பவங்களும் சில வேளைகளில் பெண்களே உயர் அதிகாரிகளை வளைத்துப் போட தங்களையே தரத்துணிந்து விடுகின்ற சம்பவங்களும் மீடியாவில் அடிக்கடி அடிபட்ட செய்திகள்.

    வறுமை வேலை வாய்ப்பின்மை காரணமாக தவறான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு தமது கற்பைக் கொடுத்து விடுகின்றனர். சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கருதி தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் சாலை ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின் அருள்தாஸ் (வயது 46). இவர் ஓசூர் அருகே உள்ள ஒரு தனியார் பேட்டரி கம்பெனியில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஹெலன் ஜாஸ்மின் (43). இவர் உனிசெட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    ஹெலன் ஜாஸ்மினின் சகோதரி பேபி கிறிஸ்டியா (46). இவரது கணவர் ரவிக்குமார் (50). டைலர். இவர்கள் தளி கும்பார தெருவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பேபி கிறிஸ்டியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    நேற்று மாலை தளி கும்பார தெருவில் உள்ள ரவிக்குமாரின் வீட்டிற்கு பிராங்கிளின் அருள்தாஸ் சென்றார். அந்த நேரம் ரவிக்குமார்-பிராங்கிளின் அருள்தாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் வீட்டின் முன்பு இருந்த பெரிய கல்லை தூக்கி பிராங்கிளின் அருள்தாஸ் தலை மீது போட்டார். இதில் அவர் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இந்த கொலை குறித்து தகவலறிந்த தளி போலீசார் அங்கு சென்று ரவிக்குமாரை கைது செய்து கொலைக்கான காரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம் ரவிக்குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    தளி பி.டி.ஓ. அலுவலகத்தில் வேலை பார்த்த தேவநேசனின் மகள் பேபி கிறிஸ்டியா என்பவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்த நிலையில் அவரது சகோதரி ஜாஸ்மினின் கணவர் பிராங்களின் அருள்தாசும், எனது மனைவி பேபி கிறிஸ்டியாவும் அடிக்கடி பேசி பழகி வந்ததாக தெரியவந்தது. இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் கோபித்து கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    எங்களுக்குள் ஏற்பட்ட தகராறு குறித்து கேள்விப்பட்ட பிராங்களின் அருள்தாஸ் நேற்று எனது வீட்டிற்கு வந்தார். அவர் எனது மனைவியுடன் திரும்ப சேர்ந்து வாழுமாறு என்னிடம் கூறினார்.

    அப்போது நான், உன்னால் தான் எனது மனைவி என்னிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார் என்று கூறி தகராறில் ஈடுபட்டேன். இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை கீழே தள்ளிவிட்டேன். உடனே அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    மாதவரத்தில் காதல் தகராறில் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி பலத்த காயமடைந்தார்.
    மாதவரம்:

    மாதவரம் அண்ணா தெருவில் வசித்து வந்தவர் ஆட்டோ டிரைவர் முருகன். இவரது மகள் கலைவாணி (19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). பள்ளி வாகன டிரைவர்.

    இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் மணிகண்டனின் நடவடிக்கை பிடிக்காததால் கலைவாணி விலகி சென்றுள்ளார். ஆனால் அவர் கலைவாணியை விடாமல் விரட்டி காதலித்துள்ளார். கல்லூரிக்கு சென்றுவரும் போது அவரை மடக்கி தொந்தரவு கொடுத்துள்ளார்.

    ஆனால் கலைவாணியோ உன்னை பிடிக்கவில்லை என்று கூறி விலகிச் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் மணிகண்டன் பெற்றோருடன் கலைவாணி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது அவர் மணிகண்டனை திருமணம் செய்ய விரும்பவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், “நீ எனக்கு கிடைக்காவிட்டால் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு உன்னை அவமானப்படுத்துவேன்” என்று மிரட்டியுள்ளார்.

    இதனால் வேதனை அடந்த கலைவாணி இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவில் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    நள்ளிரவில் மகள் 3-வது மாடிக்கு செல்வதை முருகன் பார்த்தார். அவர் மேலே செல்வதற்குள் கலைவாணி மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மகள் குதித்ததை பார்த்து காப்பாற்ற முருகனும் கீழே குதித்ததில் 2 கால்களும் முறிந்தன. இருவரையும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மாணவியை மிரட்டிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×