2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 வாலிபர்கள் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விருதுநகர்

காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிக்குண்டு வைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதுரகிரி (20). இவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் ஆகட்டும் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சதுரகிரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சிவராமன் (27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு சம்மதம் கேட்டபோது, பெற்றோர்கள் கடன்களை அடைத்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சிவராமன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com