சிறுமியிடம் பேசிய இளைஞருக்கு மொட்டையடித்து செருப்பு மாலை- வைரலாகும் வீடியோ

இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமியிடம் பேசிய இளைஞருக்கு மொட்டையடித்து செருப்பு மாலை- வைரலாகும் வீடியோ
Published on

அம்ரோஹா:

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள கெடா அப்ரோலா கிராமத்தில் இளைஞர் ஒருவரை பாதி மொட்டையடித்தும் கழுத்தில் செருப்பு மாலையுடன் ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கெடா அப்ரோலா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் மகளிடம் பேசியதற்காக இளைஞர் மீது கோபமடைந்து, இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த பஞ்சாயத்தில் இளைஞருக்கு இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞரை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், சில குழந்தைகள் அவரை கேலி செய்வதும் பதிவாகியது.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமூகத்தைச் சேர்ந்த இரு வீட்டாருக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com