என் மலர்

  நீங்கள் தேடியது "family fight"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  இரு நாடுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். ஆனால் இரு மனங்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல. மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது, இங்குள்ள வாழ்வியல் முறையும், கலாசாரமும் வேறு வேறு. இங்கே பல்வேறு இனங்கள், பல்வேறு வாழ்க்கை முறையைக் கையாளுகிறார்கள்.

  இவர்கள் பேசும் மொழிகளும் தனித்தனியாக வழங்கி வருகிறது. இந்தியாவில் விடுதலைக்கு முன்பு பலதார மணம் வழக்கமாக இருந்தது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் செய்துகொள்ளவும், சொத்திற்காக வயதானவருக்கு சிறுமியைப் பூப்பெய்தும் முன்பே திருமணம் செய்யும் வழக்கமும் இருந்தது. அதை தவிர்க்க அரசாங்கம் பெண்களுக்குத் திருமண வயதை பதிநான்காகவும், ஆண்களுக்கு பதினெட்டாகவும் இருந்து நாளடைவில் பெண்ணுக்கு திருமண வயது பதினெட்டாகவும், ஆணுக்கு இருபத்தொன்றாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  சமூக அமைப்பைப் பொறுத்தவரை விடுதலைக்கு முன்பு பெண்களுக்கு சமூக உரிமைகள், ஓட்டுரிமை எதுவும் கிடையாது. அதைப்போல கல்வியும் அவர்களுக்கு மறுக்கப் பட்டது. ஆனால் படிப்பிலும், வேலையிலும் பெண்கள் வெகுவாக முன்னேறி சம நிலையை எட்டும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் திருமணத்தில் சம படிப்பும், வேலையும் பெண்களுக்கு முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. உலகமயமாக்கல் கொள்கை மூலம் அன்னிய வியாபாரிகளை நுழைய வழி கொடுத்துவிட்டதால், மேலை நாட்டுக் கலாசாரத்தை இந்திய கலாசாரம் சுவீகரிக்க ஆரம்பித்தது. தவிரவும் கல்வி கற்று வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களும், பெண்களும் அந்தக் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு சுயமிழக்கின்றனர்.

  ஆனால் திருமணம் என்று வரும்போது மட்டும் தாய் நாடு, குடும்பம் ஆகியவற்றை முன்னிறுத்தி மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்கின்றனர். மணமான தம்பதியினர் மேலை நாட்டுக் கலாசாரத்தை விரும்ப, இடையே ஏற்படும் முரண் பிரச்சினையாகிறது. பெண்களைச் சமமாக ஏற்க தயங்கும் சமூகத்தில் அவர்கள் படித்ததால் சுயமாக சிந்திக்கவும், செயல்படவும், உரிமை கோருகிறார்கள் அல்லது எடுத்துக்கொள்கிறார்கள். இந்தப் போக்கு பழமையில் இருந்து மாறுவதால் வாழ்வில் நெருடலை உண்டாக்குகிறது. அதனால் மணமக்கள் சட்டப்படி பிரிய நினைக்கிறார்கள்.

  விவாகரத்து சட்டத்தின்படி விருப்பமில்லா தம்பதியரை பிரிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தாலும், அவர்கள் சேர்ந்து வாழ சாத்தியக்கூறு இருக்கிறதா என்று ஆராயக் கால அவகாசமும், உளவியல் கலந்தாய்வும், சமரச தீர்வு மையமும் அனுப்பி தீர்வாகாத பட்சத்தில் இருவரும் சம்மதித்தால் சேர்ந்து வாழவும், விருப்பமில்லா விட்டால் பிரியவும் தீர்வு செய்யப்படுகிறது. மற்ற சட்டங்களைப் போல விவாகரத்தை கடுமையாக பின்பற்ற இயலாது. காரணம், இதில் மனம் சம்பந்தப்பட்டதால், உறவு சம்பந்தப்பட்ட பந்தமும் தொடர்கிறது குழந்தைகள் வடிவில். குழந்தைகளின் எதிர்காலம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மனப்பிரிவை மேற்கொள்ள இயலும்.  தம்பதியினரிடையே மனப் பிரிவு ஏற்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. மன நோய், பால் வினை நோய், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், முறையற்ற தொடர்பு எனப் பலவகை இருந்தாலும் அண்மைக் காலமாக செல்போன்களின் அசுர வளர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

  செல்போன் மூலம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அதில் வாட்ஸ் அப், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற தகவல் பரிமாற்ற ஊடகங்கள் வழியே எளிதாகப் பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவையெல்லாமே முகமறியா மனிதர்களுடன் தொடர்புகொள்ளவும் நட்புகொள்ளவும் வசதி இருக்கிறது. அதில் நிறைய போலி கணக்குகளைத் தொடங்கி நட்பு ஏற்படுத்தி தவறான எண்ணத்துடன் வர வாய்ப்புண்டு. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் தம்பதியர் கவனக்குறைவு ஏற்பட்டால் மூன்றாவது நபர் இடையில் புகுந்து தம்பதியருக்கு குறுக்குச் சுவராய் அமையலாம். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் கணவன், மனைவி தொடர்பில் விரிசல் வரலாம் அல்லது மன நோய் ஏற்படலாம்.

  கணவன், மனைவிக்கு இடையே சமூக ஊடகங்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். போலி முகங்களால் பிரச்சினை வரலாம். தம்பதிகள் இருவரும் பணிபுரிபவராக இருந்தால் கேட்கவே வேண்டாம். செல்போனை எடுத்துக்கொண்டு தனித்தனியாக அமர்ந்து கனவுலகில் சஞ்சரிக்கிறார்கள். மனதாலும், உடலாலும் இணையும் வாய்ப்பு மிகமிகக் குறைவே.

  ‘செல்பி’ போட்டோ எடுத்து, பகிர்ந்து அதை எத்தனை பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்ற சுயமோகம் தம்பதியினரிடையே பிணக்கை ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் ஐயம் ஏற்பட்டுவிட்டால் உள்ள பிணைப்பில் தளர்வு ஏற்பட்டு, ஒருவர் மற்றவரை வேவு பார்க்க ஆரம்பிக்க அது முற்றி ‘பாரநோயா’ என்ற மன நோய்க்கு ஆளாகி விவாகரத்து மட்டுமல்ல, தற்கொலை, கொலை செய்யும் அளவுக்குப்போகும். இதற்கான தீர்வை அந்த தம்பதிகளே தான் காணவேண்டும்.

  மனக்கசப்பிற்கான காரணத்தைக் கண்டறிந்து அவர்களுக்குள்ளாகவே பேசித் தீர்த்துக்கொள்ளலாம். வழக்கு என்பது ஒரு சட்டபூர்வமான விடுவிப்பு. சமூக பந்தங்களிலிருந்தும், சொத்துரிமை போன்ற உரிமைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவே பயன்படும். அதனால் மருந்து நம் கைவசமே உள்ளது. அதை அளவாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை ருசிக்கும்; இல்லையெனில் கசக்கும்.

  வாழ்க்கையென்பது நம் கலாசாரப்படி ஒரு வாழும் கலை. அதைச் சிதறாது கட்டுக்கோப்பாக கொண்டு செல்வது தம்பதியினரின் கடமை. குடும்ப வாழ்வில் ஒளிவுமறைவின்றி மனம்விட்டுப் பேசுவதும், ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்வதும் தான் வாழ்க்கை எனத் தெளிந்து குடும்பங்களைப் பராமரிப்போம், நற்செல்வங்களைப் பெற்றெடுப்போம்.

  கே.சுப்ரமணியன், வக்கீல், சென்னை உயர்நீதிமன்றம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிடைக்காது. தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுகின்றனர்.
  பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப் பொருத்தம் பார்க்கின்றார்கள். ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார்.

  படிப்பு, அறிவு, அழகு, பொழுது போக்கு, வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை, கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர். இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.

  அப்படி, பதவி, வருமானம், திறமை, நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும் சண்டை, சச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியலாம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம். வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.

  குடிகாரக் கணவன், வேலைக்குச் செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர். தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.

  அன்பு ஆதரவு இல்லாத உறவுகள், சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர்.  மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இவர்கள் சட்டப்பூர்வமான மணவிலக்குப் பெற விரும்பினாலும் அது மிகவும் சிக்கலாக ஆகிவிட்டது.

  கால தாமதம் ஆகிறது என்பதாலும் இன்னும் சிலர் குடும்ப கெளரவம், குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மணவிலக்குப் பெற முயற்சி செய்வதில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன. திருமணங்களை நீண்ட காலத்திற்குத் தள்ளிப் போடுவதால் தமது ஆசைகளுக்கு வடிகாலாக ஏற்கனவே திருமணமான ஒருவனோடு ஒருத்தியோடு உறவு கொள்கின்றனர்.

  கணவனும், மனைவியும் நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்தாலும் கள்ள உறவுகள் உருவாகின்றன. நீண்ட நாட்களாகப் பிரிந்திருக்கும் பெரும்பாலான குடும்பங்களில் இது நிகழ்கின்றன என்று சொல்ல முடியாது. மற்ற குடும்பங்களை விட இந்தக் குடுமபங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  ஒழுக்கத்தில் மிகவும் பிடிப்புள்ளவர்கள் ஒழுக்கக்கேட்டிலிருந்து தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ஆனால் பலவகையான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஆபத்தான இணைய நட்பு வீட்டுக்கு வீடு கணினி கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இதன் வழி நாம் பெறும் அனுபவங்கள் போற்றத்தக்கதாய் இல்லை.

  இப்படி இன்றைய அறிவியல் பொறிகளின் மீது நாம் பழியை அடுக்கியுரைத்தாலும் சில பல தவறுகள் நம்பக்கம் இருப்பதையும் சுயபரிசோதனை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.  ஆண்களும் பெண்களும் எவ்விதத் தடையுமின்றி நெருங்கிப் பழகுவதாலும் ஆபத்துகள் விளைகின்றன. வீட்டிலோ, அலுவலகத்திலோ சந்தித்து சில வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம் என்ற நிலையைத் தாண்டும் போது விளைவுகள் மோசமாகின்றன.

  கூட்டுக் குடும்பங்களில் இந்த ஆபத்துகள் அதிகம் இருக்கின்றன. உறவுகளில் ஒரு இடைவெளி நிர்ணயம் செய்து கொண்டால் இத்தகைய ஆபத்துகளைத் தவிர்க்கலாம். கணவரின் நண்பர்களிடமும் இடைவெளி விட்டே தேவை ஏற்பட்டால் மட்டுமே பேச வேண்டும்.

  வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம். இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். தீய எண்ணம் கொண்டவர்கள் இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வர். அலுவலகத்தில் நடக்கும் விழாக்கள், பார்ட்டிகள், மதுபரிவர்த்தனைகள் நடைபெறும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் ஆகியவையும் கூடா உறவுக்கு வழிவகுக்கும் செயல்காளகும்.

  அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த சம்பவங்களும் சில வேளைகளில் பெண்களே உயர் அதிகாரிகளை வளைத்துப் போட தங்களையே தரத்துணிந்து விடுகின்ற சம்பவங்களும் மீடியாவில் அடிக்கடி அடிபட்ட செய்திகள்.

  வறுமை வேலை வாய்ப்பின்மை காரணமாக தவறான உறவுகளில் சில பெண்கள் ஈடுபடுகின்றனர். இன்னும் சிலரோ ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு தமது கற்பைக் கொடுத்து விடுகின்றனர். சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா? என்பது தான் கேள்வி.
  உங்களுக்கு திருமணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்பது முக்கியமல்ல. உங்களது வாழ்க்கை துணை எந்த விஷயத்தையாவது உங்களிடம் இருந்து மறைத்திருக்கிறாரா? என்பது தான் கேள்வி. அது நல்ல விஷயமோ? கெட்ட விஷயமோ?. மனைவியிடம் இருந்து ஒரு விஷயத்தை மறைப்பது என்பது மனித இயல்பு. இது போன்ற ரகசியங்கள் கணவரிடம் இருந்தால் அதை தெரிந்து கொள்ளவில்லை என்றால் மனைவிகளுக்கு தலை வெடித்துவிடும். நம்ப செய்து கட்டாயப்படுத்தும் வரை ரகசியம் வெளியில் வராது. மனைவிகளிடம் இருந்து ஆண்கள் மறைக்கும் பல்வேறு விஷயங்களை இங்கே பார்ப்போம்.

  1. திருமணத்திற்கு முன்பு ஆண் அல்லது பெண் இருவரும் தங்களது கடந்த வாழ்க்கை குறித்து பேசுவார்கள். இதில் சில குறிப்பிட்ட விஷயங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்ளமாட்டார்கள். தன்னை பற்றி யாரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் இதை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். உறவு முறைகள் குறித்து பேசுவார்கள். ஆனால் அனைத்து உறவு முறை குறித்தும் பேச மாட்டார்கள். ஆண்கள் பெரும்பாலும் தங்களது கடந்த கால உறவு முறைகளை மறைப்பார்கள். இதில் சிறிய அளவை மட்டும் மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்பது ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

  பின்னர் இதர வழிகள் மூலம் மனைவிகள் அந்த உறவு முறையை ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவார்கள். அப்புறம் விசாரித்தால் அதை கணவர்கள் ஒப்புக் கொள்வார்கள். நீங்கள் உண்மையிலேயே உங்களது கணவரின் கடந்த காலம் குறித்து தெரிந்துகொள்ள விரும்பினால் சாதாரணமாக ஒரு நண்பரை போல் அதே நேரத்தில் கேட்டுவிடுங்கள். அந்த விஷயத்தால் எனக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது, நான் கவலைப்படமாட்டேன் என்ற நம்பிக்கையை கணவருக்கு ஏற்படுத்திவிட வேண்டும். நீங்கள் தன்னை பற்றி தவறான அபிப்பிராயத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற காரணத்தால் தான் கணவர்கள் கடந்த கால உண்மைகளை மறைப்பார்கள்.

  2. சமூக வாழ்க்கையையும் கணவர்கள் மனைவியிடம் மறைப்பது உண்டு. ஒரு அளவு வரை தான் இதை பற்றி பேசுவார்கள். பெண்கள் உள்ளிட்ட பலரிடம் அவர் நட்பு வைத்திருக்கலாம். இத்தகைய பெண்கள் குறித்து உங்களிடம் பேசினால் உங்களுக்கு சந்தேகம் வந்துவிடும் என்ற காரணத்தால் அதை மறைத்துவிடுவார்கள்.

  3. முறிந்த காதல் குறித்து ஆண்கள் மனைவிகளிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது. இதை ஏற்கமாட்டார்கள். ஆனால் சிலர் இது குறித்து வெளிப்படையாக பேசிவிடுவார்கள். மறைப்பதற்கு ஆண்களின் ஈகோ தான் காரணம். ஆனால் இது ஒரு மென்மையான விஷயம். மனைவிக்கு கிடைத்த சிறந்த காதலராக தன்னை காட்டிக் கொள்வார்கள். இதற்கு முன்பு நான் யாரிடமும் தொடர்பில் இல்லை என்று காட்டிக் கொள்வதற்காகவும் மறைப்பார்கள். இது ஆண்களுக்கு பொதுவாக இருக்கும் ஒரு குணாதிசியம்.  4. ஆண்களுக்கு உங்களது இழப்பு குறித்த அச்சம் அதிகம் இருக்கும். ஆனால் அதீத ஈகோ காரணமாக அதை வெளிப்படுத்தமாட்டார்கள். அவர்களும் உங்களை போலவே இழப்பின் மீது அச்சம் இருக்கும். ஆண்கள் இதை மறைத்து வைத்திருப்பார்கள். அவர்கள் அதிக உணர்ச்சிவசப்படும் போது இதை தெரிவிப்பார்கள். நீங்கள் அவரை இணங்கச் செய்யும் வரை அவர்களது உண்மையான உணர்வை மறைந்துதான் வைத்திருப்பார்கள்.

  5. அவர் உங்களை சார்ந்திருப்பதாக எப்போது உணரச் செய்யவிடமாட்டார். அதை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆனால் உண்மையிலேயே அவர் உங்களை சார்ந்து தான் இருப்பார்கள். மன ரீதியாக மட்டுமின்ற உடல்ரீதியாகவும் இந்த நிலை தான் இருக்கும். இதற்கு அவர் அணியும் ஆடையை கூட கூறலாம். பேன்ட் போன்றவற்றை அவர் அணியலாம். ஆனால் உள்ளாடைகள் விஷயத்தில் அவர் உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.
  இதற்கு மனைவி அல்லது வேறு யாரேனும் உதவியாக இருந்தாக வேண்டும். அவர்களுக்கு மனைவியின் உதவி கண்டிப்பாக தேவை. அதே சமயம் தன்னை பலவீனமாக நினைத்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

  அதனால் மனைவிகள் எப்போது கணவருக்கு காதலியாக, நண்பராக எப்போது இருக்க வேண்டும். இதை செய்தால் கணவர் இன்னும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பதை பார்க்க முடியும். தன்னிடம் உள்ள ரகசியங்களையும் மறைக்கமாட்டார்கள்.

  6. பொதுவாக இதை இந்த பட்டியலில் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆம், அவர் தனது கற்பனைகளை உங்களிடம் மறைப்பார். அனைத்தையும் கிடையாது. சிலவற்றை மறைப்பார்கள். இதை நிறைவேற்ற உங்களால் உதவ முடியாது என்று அவர் நினைப்பது தான் இதற்கு காரணம். அதனால் அத்தகைய கற்பனைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார். அவரது கற்பனைகளை தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். அந்த கற்பனைகள் அவருக்கு பல இரவுகளின் கனவாக கழிந்திருக்கும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கணவர் சில விஷயங்களை எதிர்பார்க்காமல் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவாள். இப்போது கணவன் எந்த விஷயங்களை செய்தால் மனைவி சந்தோஷப்படுவாள் என்பதை பற்றி பார்க்கலாம்.
  கணவன் எதிர்பார்க்காமலேயே அவனுக்கான வேலைகளை இன்றுவரை மனைவி செய்துக் கொண்டே தான் இருக்கிறாள். ஆனால், மனைவி எதிர்பாராத தருணத்தில், மனைவிக்கு தேவையான வேலைகள் என்னென்ன நீங்கள் ஒரு கணவனாக செய்துள்ளீர்கள்? அட்லீஸ்ட் இந்த லிஸ்ட்ல இருக்க இந்த விஷயமாவது கட்டின மனைவிக்காக செஞ்சிருக்கீங்களா?

  மனைவி சோர்வாக, களைப்பாக உணரும் போது, அவரருகே அமர்ந்து, கால் பிடித்துவிடுவது, கால் விரல் சொடக்கு எடுத்துவிடுதல் போன்றவை செய்துள்ளீர்களா? இன்னும் சில ஆண்கள் மனைவியின் கால்களை பிடிக்க கௌரவம் பார்ப்பார்கள். ஆனால், இது மனைவிக்கு கணவன் மீது,” கௌரவம் பாராமல் தன் மீது அன்பு செலுத்துகிறார்” என்ற உணர்வு அதிகரிக்க, காதல் அதிகரிக்க செய்யும் கருவியாக அமையும்.

  சமையல் செய்யும் போது பின்னாடி இருந்து கட்டிபிடிப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துவது. காதல் விளையாட்டுகளுடன் அவருடன் சேர்ந்து சமைக்க உதவுவது.  சண்டையிட்டு அழவைத்த பிறகு, முதல் ஆளாக சென்று மன்னிப்பு கேட்டு, அரவணைத்து ஒரு ஆசை முத்தம் கொடுத்தது உண்டா? இல்லையேல் அடுத்த முறை சண்டையிடும் போது கொடுத்து பாருங்கள். சண்டை மட்டுமல்ல, உங்கள் மீதுள்ள கோபமும் ஒரு நொடியில் அடங்கிவிடும்.

  இப்போதெல்லாம், மாடர்ன் கணவன்மார்கள் மாதவிடாய் காலத்தில் மனைவியை ஒதுக்குவது இல்லை. ஆண்களுக்கும் மாதவிடாய் பற்றிய தெளிவு அதிகரித்து வருகிறது. ஆனால், இன்றும் மாதவிடாய் நாட்களில் மனைவியை தொட கூட தயக்கம் காட்டும் ஆண்களும் இருந்து வருகிறார்கள். இது உடலளவில் பாதிக்கப்படும் அவர்களுள் மனதளவிலும் பாதிப்பை அதிகரிக்கும். முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் மனைவியை அனுசரித்து பழகுங்கள்.

  மனைவி வேலை விஷயமாக அல்லது வெளியூர் சென்று நள்ளிரவில் ஊர் திரும்பும் போது, நேரம் பாராமல் அவருக்காக ஏர்போர்ட், ரெயில்நிலையம் அல்லது பேருந்து நிலையத்தில் தாமதம் ஆவதை பொருட்படுத்தாமல், அவருக்காக காத்திருந்தது உண்டா? இது போன்ற செயல்களை நீங்கள் மனம், முகம் சுளிக்காமல் செய்தால், அதை பற்றி தம்பட்டம் அடித்து பெருமையாக பேசுவது மனைவிக்கு பிடித்தமான செயலாகும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் பெண்கள் தான்.. குடும்ப தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்கள் இதனை உணர்ந்து குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த வேண்டும்..
  குடும்ப வாழ்க்கை அழகாக இருக்க என்ன செய்யலாம் என்று தேடிய பொழுது கிடைத்த பயனுள்ள தகவல்கள்...

  1. அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் பெண்கள் தான்.. குடும்ப தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில் தான் வெற்றி இருக்கு.. இதனை உணர்ந்து நாம் குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த வேண்டும்..

  2. எப்பொழுதும் முகத்தில் புன்னைகையுடன் இருக்க மறுக்காதீங்க..

  3. குடும்பத்தில் இருக்கும் ஓவ்வொருவரையும் மதிக்க பழகுங்கள்.. மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.. (விட்டுகொடுத்து பழகுங்கள்) நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என்ற அகம்பாவம் வேண்டாம்.

  4. தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும் சகஜமாக பேசுகள்.. மனம் திறந்து பாராட்டுங்கள்.

  5. சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதுக்கு கை, கால் வைத்து அழகுபடுத்த வேண்டாம்.. எந்த வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட நபரிடம் பேசி பாருங்கள்.. கேட்கவில்லையா துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விலகிவிடுங்கள்.

  6. வாழ்க்கையின் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுகள்.. பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.. தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்ற வேணடாம்..

  7. இறைவன் கொடுத்த இந்த அழகான இறைய நாளை நான் பயனுள்ளதாக தான் செலவு செய்வேன் என்ற மன உறுதியுடன் தேவையான நல்ல சிந்தனைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழியே செலவு செய்யுங்கள்.

  8. நாம் சந்தோஷமாக இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்..என்பதனை மனதில் கொண்டு சிரித்தமுகத்துடன் பேசி பழகுங்கள்..

  9. உங்கள் இஷ்டம் போல் உங்கள் குடும்ப நண்பர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணம் வைக்காதீங்க.. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று பிடிவாதம் பிடிக்காதீங்க.. மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச பழகுங்கள்.  10. குழந்தைகளுடன் சந்தோஷமாக பேசி, விளையாடி இருங்கள்.. சிறு குழந்தையாக இருக்கும் குட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசியுங்கள்... சேட்டை அதிகமானால் கண்டிக்க மறுக்காதிங்க...

  11. நம் உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுது தான் மனதில் சந்தோஷம் நம்மை விட்டு போகும்.. முடிந்த வரை உடலை ஆரோக்கியமாக வைக்க பாருங்க.. சில நேரங்களில் வரும் சின்ன சின்ன நோய்களை பெரிதுபடுத்தாமல் வீட்டில் இருக்கும் பொரியவர்களிடம் என்னால் இன்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லிவிட்டு ஓய்வு எடுங்கள்.

  12. எல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு என்று ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்கு பிடித்தகாரியங்களில் ஈடுபடுங்கள்.. உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல் உங்கள் மனதுக்கும் ஒய்வு கொடுங்கள்.

  13. குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் பொழுதோ அல்லது டென்ஷன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்காதிங்க.

  14. முடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்து பேசி பழகுங்கள்...

  15. குடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல் போன்றது.. உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக இருப்பது முக்கியம்.. அதனை பக்குவமாக செய்வது குடும்ப தலைவியாக இருக்கும் ஓவ்வொரு பெண்ணில் கையில் தான் இருக்கு..

  16. மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை மேலும் மேலும் குப்பையாக்குகிறது.. அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.. மனது தூய்மையாகும்...
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
  திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர் தலையிடுவது, இருவருக்கும் இடையே சந்தேகம் எழுவது, அதையொட்டிய அதீத கற்பனைகள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் வெகுநாட்கள் சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, தேவையற்ற விவாதம், ஈகோ, ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியம் செய்வது, மற்றவர்களிடம் குறைக் கூறுவது.. இப்படி விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

  தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகுவதும், ஒருவரையொருவர் ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளாததும் கணவன்-மனைவி உறவு முறிவுக்கு வழிவகுத்துவிடுகிறது’ என்கிறார் மனநல நிபுணர் ராம் பிரதாப் பேனிவாலா.

  கம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் முறையான தகவல் தொடர்பின்மையே 65 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருவர் நிலையை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதுதான் இருவருக்குமிடையே விரிசல் உண்டாவதற்கு மூலகாரணம். தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் திடீரென்று அதை பேசி சரிசெய்ய தம்பதிகளால் முடியாமல் போய்விடுகிறது. இதனால் பல கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பம் எது என்பதே தெரியாமல் உறவை முடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம்.

  கணவன், மனைவி இருவருமே நல்லவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டு பிரிவது இருவருக்குமே பாதிப்பைத் தரும். ‘நான் இல்லையானால் நீ அவ்வளவு தான்’ என்ற எண்ணம் தம்பதிகளுக்குள் தோன்றும் போது பிரிவு வலுவடைகிறது. பிரிந்துபோக விரும்புகிறவர்களுக்கு அவர்களது அழகான குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் நினைவுக்கு வருவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான்.  ஏதேனும் ஒரு பிரச்சினையைப் பற்றி திரும்பத் திரும்ப தம்பதியர் இருவரும் பேசுவது, அடுத்தவர் குறையை மிகைப்படுத்திப் பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இன்முகத்துடன் தொடங்கும் உரையாடல் பல தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதமாக மாறிவிட இது தான் காரணம்.

  முன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.

  முற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது.

  வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது சில காரணங்களால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படும்.
  கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது சில காரணங்களால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படும். இதற்கு ஆண்கள் மட்டும் காரணமாக இருப்பது என்பது கிடையாது. இதுபோல மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

  * தொடர் பிரச்சனைகளால் இருவருக்கிடையில் ஏற்படும் மனக்கசப்பு, குழப்பம் போன்றவற்றால் நிம்மதியில்லாமல் போகும். இந்நேரங்களில் ஆண்கள் இதைவிட்டு விலக நினைப்பார்கள். மனைவியுடனான் நெருக்கத்தை குறைத்து மற்றவர்கள் மேல் அக்கரை அதிகமாகும்.

  * திருமண வாழ்க்கை சில காலகட்டத்தில் சலிப்பை உண்டாக்கும். இதனால் மற்ற பெண்களின் ஈர்ப்பை அவர்கள் அடைய நினைப்பார்கள்.

  * தாம்பத்யத்தில் முக்கியமானது உடலுறவு சம்பந்தமான பிரச்சனை. மனைவியுடனான அனுபவம் குறைந்து காணப்பட்டால் வேற எண்ணங்கள் தோன்றி ஏமாற்றும் நிலையை தேடுவார்கள்.

  * காலம் செல்ல செல்ல திருமணமான புதிதில் இருந்த பாசம், அன்பு, அக்கரை குறைய ஏற்படும். இதனால் வேறொரு பெண்ணை தேடுவார்கள்

  * குழந்தைகள், வேலைபளு போன்றவற்றால் மனைவிகளை மறந்து இடைவெளியை உண்டாக்குவார்கள். இதன்மூலம் அலுவலகத்திலோ வேறு எங்கேயோ நெருக்கமுள்ள பெண்களின் உறவால் மயங்கிவிடுவார்கள்.

  * கணவர்கள் செய்யும் சிலவற்றை மனைவி பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, அது தாமதமாகி வேறொருவர் பாராட்டினால் மனைவி மேல் இருக்கும் உறவில் பிளவு ஏற்படும். அதை கொடுக்கும் பெண்ணின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.

  * ஆண்கள் மனதில் ஏற்படும் எதிர்பார்ப்பை மனைவிகள் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது, அது அவர்களுக்கு இடையே நெருக்கம் குறைந்து, ஏமாற்ற செய்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விட்டுக்கொடுப்பவர் என்றும் கெட்டுப்போனதில்லை. வாழ்க்கை துணையிடம் வெற்றி தோல்வியை எதிர்பார்க்கலாமா? அரவணைத்து, அனுசரித்து செல்வதில் தானே தலைமுறைக்கும், இன்பம் கூடும்.
  ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறத்தில் ஈடுபடும்போது, வாழக்கை அர்த்தம் பெறுகிறது. இன்பம் கூடுகிறது. ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது என்பது மனிதருக்கு மட்டுமல்ல பெரும்பான்மையான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் உள்ள சிறப்பியல்பு. இணைவது, வெறும் இனப்பெருக்கத்திற்கு மட்டும் என்றில்லாது, ஒருவருக்கு ஒருவர் அன்பும் பாசமும் வெளிப்படுத்திக் கொள்ளுதல், இணைந்து இரை தேடுதல், கூடுக்கட்டி குடும்பமாய் வாழுதல், பாதுகாப்பு, இன்னொருவர் பிரிவுக்கு வாடுதல் என இணைந்து வாழ்வது பல்வேறு கூறுகளைக் கொண்டது.

  சங்கப் பாடல் ஒன்றில், குட்டை ஒன்றில் ஆண், பெண் மான் தண்ணீர் அருந்துவதுப் போல ஒருக் காட்சி. தண்ணீரின் அளவு மிகக் குறைவு, இரண்டில் ஒரு மானுக்கு மட்டுமே போதுமானது. ஆண் மான் அருந்தட்டும் என்று பெண்மான் தண்ணீர் குடிப்பதுப் போல பாவனை செய்கிறது. தனது இணை அருந்தட்டும் என்று ஆண் மானும் பாவனை செய்கிறது. இரண்டு மான்களும் தண்ணீர் குடிக்காமல் தாகத்தோடு நின்றாலும், ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள பற்றுதல் அங்கு புலப்படுத்தப்படுகிறது. இப்படியும் நடந்திருக்குமா என்று வியப்பை ஏற்படுத்திய பாடல்.

  ஆனால் சமீபத்தில் கேள்விப்பட்ட நிகழ்வு சங்கக் கால சம்பவம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய கடும் புயலில் பல மரங்கள் வீழ்ந்தன. எனது நண்பர் வசிக்கும் பகுதியில் மரமொன்றில் ஆண், பெண் என இரண்டு நாரைகள் வசித்து வந்தன. மரம் விழுந்ததில் ஜோடியில் ஒரு நாரை இறந்துவிட்டது. இன்னொன்று அதன் பிரிவைத் தாங்காது அதே கிளையில் நகராது இரைத் தேடாது சோகமாய் வீற்றிருந்து சில நாட்களில் தன் உயிரை மாய்த்துக் கொண்டது.

  விலங்குகளும் பறவைகளும் தத்தம் இணையிடம் அன்பும் பரிவும் காட்டும்போது ஆறறிவுக் கொண்ட மனிதன் வெளிப்படுத்துவது இன்னும் கூடுதலானதாகத் தானே இருக்கவேண்டும். அதைத்தானே ஒவ்வொரு மனிதரும் விரும்புவர். பறவைகள், விலங்குகள் போல மனித வாழ்வில் உறவுகள் எளிமையானது, நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. ஒருகாலத்தில் ஆண்கள் வேலைக்கு சென்று பொருள் ஈட்டுவதும் பெண்கள் வீட்டினை நிர்வாகிப்பதும் என தங்களுக்குள் வேலையை பிரித்துக் கொண்டனர். பிரித்துக் கொண்டனர் என்பதைவிட பெண்கள்மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது என்று சொல்லலாம்.

  ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு’ என்று சமூகம் கேட்டது. ஆக அத்தகைய சூழலில், பெண்கள் வாய்மூடி மவுனியாக அடிமைவாழ்வு வாழ்ந்ததால் எத்தகைய பூசலுமின்றி குடும்ப வாழ்க்கை அமைதியாக செல்வதுபோல காட்சியளித்தது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. பெண்கள் படிப்பில் வெகுதூரம் முன்னேறி விட்டார்கள். அவர்கள் தொடாத துறை இல்லையென்று சொல்லக் கூடிய வகையில், விண்வெளிக்குச் செல்வதாகட்டும், விமானம் ஓட்டுவதாகட்டும், மிகப்பெரிய கார்பரேட் கம்பெனிகளை நிர்வாகிப்பதாகட்டும் ஆண்களுக்கு எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்து வருகிறார்கள்.  அதுமட்டுமின்றி, தாரளமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் நமது தேவைகளையும் விருப்பங்களையும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தலைமுறையாக ஆணும் பெண்ணும் பொருளட்ட வேலைக்கு செல்வது அத்தியாவசியமாகிவிட்டது. குடும்பத்தை சீராகவும் சிறப்பாகவும் நடத்திட கூடுதல் வருவாய் பெருமளவில் உதவுகிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்கவும் ஏதுவாகிறது.

  இப்பொழுது சிக்கல் எங்குத் தொடங்குகிறது என்றால், ஆணும் பெண்ணும் வேலைக்கு செல்லும்போது வீட்டு வேலைகளை யார் செய்வது என்பது கேள்வி. பெரும்பான்மையான ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள்தான் முழுமையான பொறுப்பு என்னும் மோசமான மனநிலையில் இன்னும் உள்ளனர். பெண்களும், அலுவலகத்தில் வேலை செய்வதுடன் வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் தாங்கள் தான் செய்யவேண்டும் என்கிற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். பனிச்சுமைகள் காரணமாக மன அழுத்தங்கள் கூடும்போது இல்லறத்தில் பிணக்குகள் ஏற்படுகின்றன. மனவிலக்குகளுக்கு அடித்தளமிடுகின்றன.

  குழந்தையாக இருக்கும்போதே, இருபாலருக்கும் ஒருவரையொருவர் சமமாக நடத்தவும், சார்ந்து வாழ்தலின் மகத்துவத்தையும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு சொல்லித்தரவேண்டும். ஆண் குழந்தையென்றால் வீரத்திற்கு அடையாளமாகவும், ஆதிக்க சக்தியாகவும், பெண்ணென்றால் பணிந்து போகவும், அடிமையாகவும் சித்தரிப்பதை குழந்தையாக இருக்கும்போதே தவிர்க்கப்பட வேண்டும். பெண் என்பவரும் சக மனிதர், சுயமாக சிந்திப்பதற்கும் தனது விருப்பம்போல வாழ்க்கை அமைத்துக்கொள்ள அவருக்கும் உரிமையுள்ளது என்பதை வளரும் பருவத்திலேயே ஆண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

  வீட்டு வேலைகள், குழந்தைகள் வளர்ப்பது, சமையல், வீட்டை சுத்தப்படுத்துவது, குடும்பத்தை பாராமரிப்பது, என்பவை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். அவரவர் நேர வசதிக்கு தகுந்தாற்போல மாறிமாறி செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது தம்பதியினரிடம் பிணக்குகள் குறைந்து இல்லறம் மகிழ்ச்சியுறும். ஊடலில் தோற்றவரே வென்றார் என்று வள்ளுவர் கூறி இருக்கிறார். விட்டுக்கொடுப்பவர் என்றும் கெட்டுப்போனதில்லை. வாழ்க்கை துணையிடம் வெற்றி தோல்வியை எதிர்பார்க்கலாமா? அரவணைத்து, அனுசரித்து செல்வதில் தானே தலைமுறைக்கும், இன்பம் கூடும். நமக்கும் மகிழ்ச்சி அளிக்கும். குடும்ப வெற்றிக்கும்வழி வகுக்கும். இது குடும்பத்தாருக்கு முன்னோர் காட்டியவழி.

  ‘மனைவி’, ‘இல்லத்தரசி’ போன்ற சொற்கள் பெண்களை மேலோட்டமாக போற்றக்கூடிய வகைகளாகத் தோன்றினாலும் ஆழ்ந்து நோக்கினால், அவர்களை அடிமைப்படுத்தும் சொற்களே. வாழ்வில், இன்பத்திலும் துன்பத்திலும், ஏற்றத்திலும் இறக்கத்திலும் இணைந்து செயல்படும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் இணையர் ஆவார்கள். ‘இணையர்’ என்ற சொல்லே பொருத்தமானதாகும். வள்ளுவர் கூற்றின்படி, ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’. அறமென்பது ஆண்கள் சார்ந்தது அல்ல இருவருக்கும் பொதுவானது என்பதை உலகத் தம்பதியினர் நாளான இன்று நினைவில் நிறுத்தி, நமது இல்லறத்தை இன்பமாய் பேணுவோம்.

  முனைவர் த சிவக்குமார், கல்வியாளர்
  ×