என் மலர்

  நீங்கள் தேடியது "protection of women"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
  இந்த இடைக்கால பட்ஜெட்டில் பலரது வயிற்றில் பால் வார்த்த விஷயம், வருமான வரி வரம்பு உயர்வு.

  ஆனால் உடனே சிலர் சில கணக்கீடுகளைக் கூறி பலரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்கள்.

  இந்நிலையில் மத்திய வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷன் பாண்டே ஒரு தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

  அவரது விளக்கத்தின்படி, ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

  அதாவது, தற்போது ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக, முதல் விடுதலை, ரூ. 5 லட்சம் வரை வரி கிடையாது.

  சம்பளதாரர்கள் தம்முடைய மற்றும் தம்மைச் சார்ந்தவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளை மேற்கொள்கிறார்கள். அதற்கு நிலையான கழிவாக ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் என இருந்ததை தற்போது ரூ. 50 ஆயிரமாக அறிவித்திருக்கிறார்கள். ஆக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  சம்பளம் வாங்குபவர்கள் அனைவருக்குமே வருங்கால வைப்புநிதி எனப்படும் பி.எப். பிடித்தம் செய்யப்படும். ஆனால் அதைத் தாண்டியும் ஆயுள் காப்பீடு, சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்று, அஞ்சலக சேமிப்புத் திட்டம், மியூச்சுவல் பண்டு போன்ற பல்வேறு திட்டங்களில் கொஞ்சம் யோசித்து முதலீடு செய்தால் ரூ. 1.50 லட்சத்துக்கு முழுமையாகக் கழிவு பெறலாம்.

  அப்படி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லாவிட்டாலும், வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அது வருமான வரி விஷயத்தில் உதவும்.

  வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் அசல் தொகை இந்த 80 சி பிரிவின் கீழ்தான் கழியும். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் = ரூ. 7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  வருமான வரி பிரிவு 24-ன் கீழ், வீட்டுக் கடன் தொகைக்குத் திருப்பி செலுத்தும் வட்டித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாம். ஆக, வீட்டுக் கடன் அசல் தொகைக்கு 80 சி என்றால், வீட்டுக் கடன் வட்டிக்கு இந்தப் பிரிவு 24. மொத்தமாக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் = ரூ. 9 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  80 சிசிடி (1பி) பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் வரை என்பிஎஸ் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து வரிக் கழிவு பெறலாம். இதுவும் ஒரு விதமான நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டம்தான். அரசின் உத்தரவாதத்துடன் இந்த முதலீடுகள் நன்கு செயல்படுகின்றன.

  இப்போது ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 9.50 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  சம்பளம் பெறும் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளார் என்றால் ஓர் ஆண்டில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80 டி பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை வரிக்கழிவு பெறலாம். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 25 ஆயிரம் = ரூ. 9.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்மார்கள் எப்படி நடந்துகொண்டால் சமூகத்தில பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டும்.
  பெண் பிள்ளைங்க நல்லா படிக்கணும், நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று பல வி‌ஷயங்களை யோசிக்கிறோம்; ஆனால், எப்படி நடந்துகொண்டால் இந்த சமூகத்தில அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை பற்றி அவர்களிடம் மனம் திறந்து பேசுவது இல்லை. இதனால்தான் பல பெண்கள் தங்களோட வாழ்க்கையில் தடம்புரண்டு விடுகிறார்கள். எனவே பெண் குழந்தைகளை சரியாக வழிநடத்தினால் நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.

  முன்பெல்லாம் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண் சுலபமாக வெளி ஆட்களுடன் பேசிவிட முடியாது. ஆனால், இது செல்போன், கம்ப்யூட்டர் காலம். அதனால தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு யாருடனும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக பேச முடிகிறது.

  எனவே முன்பின் தெரியாத நபர்கள் போனில் வந்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துங்கள். செல்போனை காண்பித்து சில்மி‌ஷத்தில் ஈடுபடுவது; ஆபாச படங்களை காண்பித்து பிஞ்சு மனதில் நஞ்சை விதைப்பது என பல வகைகளில் பெண் குழந்தைகள் திசைமாற்றப்படுகின்றனர்.

  எனவே, இவற்றில் எல்லாம் உ‌ஷாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். 7-வது, 8-வது படிக்கும் குழந்தைகள் முதல் சொல்லித்தரலாம். சின்ன பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் என்றோ, இப்ப எதுக்காக இதுப்பற்றி யெல்லாம் சொல்லித் தரவேண்டும் என்றோ நினைக்காதீர்கள்.

  எல்லையே இல்லாமல் இ‌ஷ்டத்துக்கு பிள்ளைகளை வளர விடுவது எத்தனை தவறோ, அதே போல்தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை வலம்வரச் செய்வதும். அதனால், உங்கள் குழந்தைகளை சக நண்பர்களிடம் பேச அனுமதியுங்கள்.

  மற்றவர்களிடம் உரையாடும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து எடுத்துக்கூறுங்கள். உதாரணமாக, அடுத்து இருப்பவர்களிடம் பேசும் போது அவர்களின் முகத்தை பார்த்து, நேராக நின்று பேசச் சொல்லுங்கள். குறிப்பாக, ஆண்களிடம் அப்படி இல்லாமல், வெட்கப்பட்டு பேசும்போதோ அல்லது நாணிக் கோணி பேசும் போது, ஏதோ ஒரு விதத்தில் எதிர் இருப்பவர் மனதில் நீங்கள் பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவீர்கள்.

  தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்பந்தமான புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. நாட்டு நடப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பதான் இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அறிய முடியும். அதனால, செய்தித்தாள் வாங்கிக் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். அதோடு, நாட்டு நடப்புகளை அவர்களுடன் விவாதியுங்கள்; அவர்கள் எப்படி இருந்தால் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக வலம் வரமுடியும் என்பதை விளக்குங்கள். நல்வழிக்காட்டுங்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
  திருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப விஷயங்களில் மூன்றாவது நபர் தலையிடுவது, இருவருக்கும் இடையே சந்தேகம் எழுவது, அதையொட்டிய அதீத கற்பனைகள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருவரும் வெகுநாட்கள் சரிவர பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பது, தேவையற்ற விவாதம், ஈகோ, ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியம் செய்வது, மற்றவர்களிடம் குறைக் கூறுவது.. இப்படி விவாகரத்து செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. திருமணமாகி நீண்டகாலம் வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்பவர்களும் தற்போது அதிகரித்து வருவது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

  தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை உருவாகுவதும், ஒருவரையொருவர் ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளாததும் கணவன்-மனைவி உறவு முறிவுக்கு வழிவகுத்துவிடுகிறது’ என்கிறார் மனநல நிபுணர் ராம் பிரதாப் பேனிவாலா.

  கம்யூனிகேஷன் என்று சொல்லப்படும் முறையான தகவல் தொடர்பின்மையே 65 சதவீத விவாகரத்துக்கு காரணம் என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருவர் நிலையை மற்றவர் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதுதான் இருவருக்குமிடையே விரிசல் உண்டாவதற்கு மூலகாரணம். தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதால் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டால் திடீரென்று அதை பேசி சரிசெய்ய தம்பதிகளால் முடியாமல் போய்விடுகிறது. இதனால் பல கருத்து வேறுபாடுகள் தோன்றுகிறது. பிரச்சினையின் ஆரம்பம் எது என்பதே தெரியாமல் உறவை முடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம்.

  கணவன், மனைவி இருவருமே நல்லவர்களாகதான் இருப்பார்கள். ஆனால் ஒருவரை ஒருவர் தரம் தாழ்த்திப் பேசிக் கொள்வார்கள். அப்படி ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்திக்கொண்டு பிரிவது இருவருக்குமே பாதிப்பைத் தரும். ‘நான் இல்லையானால் நீ அவ்வளவு தான்’ என்ற எண்ணம் தம்பதிகளுக்குள் தோன்றும் போது பிரிவு வலுவடைகிறது. பிரிந்துபோக விரும்புகிறவர்களுக்கு அவர்களது அழகான குடும்பமும் குழந்தைகளின் எதிர்காலமும் நினைவுக்கு வருவதில்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான்.  ஏதேனும் ஒரு பிரச்சினையைப் பற்றி திரும்பத் திரும்ப தம்பதியர் இருவரும் பேசுவது, அடுத்தவர் குறையை மிகைப்படுத்திப் பேசுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும். இன்முகத்துடன் தொடங்கும் உரையாடல் பல தம்பதிகளுக்கு இடையே வாக்குவாதமாக மாறிவிட இது தான் காரணம்.

  முன்பெல்லாம் விவாகரத்து என்றதும் பெண்கள்தான் அதிகம் பயப்படுவார்கள். இப்போதெல்லாம் பெண்கள்தான் அதிகம் விரும்பி விவாகரத்து பெற முன்வருகிறார்கள். சொந்தக்காலில் நிற்பதால் யார் தயவும் தேவையில்லை என்ற எண்ணம் மேலோங்குவதுதான் அதற்கு முக்கிய காரணம். யாருக்கும் நான் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும், விவாகரத்திற்கு பின்பு சகஜமாக வாழும் ஒருசிலரின் வாழ்க்கையும் இத்தகைய மன மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.

  முற்காலத்தில் விவாகரத்து ஆன பெண்ணிற்குச் சமூக அந்தஸ்து கிடைப்பது அரிதாக இருந்தது. பலருடைய பரிதாபப் பார்வைக்கு ஆளாக வேண்டிய சூழலும் இருந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை. விவாகரத்திற்கு பின்பு பெண்கள் பிறந்த வீட்டிற்குப் பாரமாக இருக்க வேண்டிய சூழலும் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி பல காரணங்கள் பெண்களை விவாகரத்திற்கு ஒத்துப்போக வைக்கிறது.

  வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான தேவை என்ன என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். அதில் எந்தெந்த பிரச்சினைகளுக்கு நாம் காரணம் என்பதை கண்டறிந்து நிதானமாக செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விவாகரத்துக்கு இடம் கொடுக்காமல் மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அதற்கு தம்பதியரிடையே புரிதல் மேலோங்க வேண்டும்.
  ×