என் மலர்

  நீங்கள் தேடியது "Income taxes"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
  இந்த இடைக்கால பட்ஜெட்டில் பலரது வயிற்றில் பால் வார்த்த விஷயம், வருமான வரி வரம்பு உயர்வு.

  ஆனால் உடனே சிலர் சில கணக்கீடுகளைக் கூறி பலரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்கள்.

  இந்நிலையில் மத்திய வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷன் பாண்டே ஒரு தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

  அவரது விளக்கத்தின்படி, ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

  அதாவது, தற்போது ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக, முதல் விடுதலை, ரூ. 5 லட்சம் வரை வரி கிடையாது.

  சம்பளதாரர்கள் தம்முடைய மற்றும் தம்மைச் சார்ந்தவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளை மேற்கொள்கிறார்கள். அதற்கு நிலையான கழிவாக ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் என இருந்ததை தற்போது ரூ. 50 ஆயிரமாக அறிவித்திருக்கிறார்கள். ஆக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  சம்பளம் வாங்குபவர்கள் அனைவருக்குமே வருங்கால வைப்புநிதி எனப்படும் பி.எப். பிடித்தம் செய்யப்படும். ஆனால் அதைத் தாண்டியும் ஆயுள் காப்பீடு, சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்று, அஞ்சலக சேமிப்புத் திட்டம், மியூச்சுவல் பண்டு போன்ற பல்வேறு திட்டங்களில் கொஞ்சம் யோசித்து முதலீடு செய்தால் ரூ. 1.50 லட்சத்துக்கு முழுமையாகக் கழிவு பெறலாம்.

  அப்படி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லாவிட்டாலும், வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அது வருமான வரி விஷயத்தில் உதவும்.

  வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் அசல் தொகை இந்த 80 சி பிரிவின் கீழ்தான் கழியும். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் = ரூ. 7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  வருமான வரி பிரிவு 24-ன் கீழ், வீட்டுக் கடன் தொகைக்குத் திருப்பி செலுத்தும் வட்டித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாம். ஆக, வீட்டுக் கடன் அசல் தொகைக்கு 80 சி என்றால், வீட்டுக் கடன் வட்டிக்கு இந்தப் பிரிவு 24. மொத்தமாக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் = ரூ. 9 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  80 சிசிடி (1பி) பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் வரை என்பிஎஸ் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து வரிக் கழிவு பெறலாம். இதுவும் ஒரு விதமான நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டம்தான். அரசின் உத்தரவாதத்துடன் இந்த முதலீடுகள் நன்கு செயல்படுகின்றன.

  இப்போது ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 9.50 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  சம்பளம் பெறும் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளார் என்றால் ஓர் ஆண்டில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80 டி பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை வரிக்கழிவு பெறலாம். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 25 ஆயிரம் = ரூ. 9.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மன்னார்குடியில் அ.தி.மு.க. பிரமுகர் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #ITRaid #ADMK

  மன்னார்குடி:

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் பகுதியை சேர்ந்தவர் டி.எம்.ஏ. மனோகரன்.

  தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் சேரன்குளம் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார்.

  இவர் முதல் நிலை ஒப்பந்த தாரராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு, நிறுவனங்கள் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்கள் உள்ளன.

  இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் வருமான வரித்துறையினர் மன்னார்குடிக்கு வந்தனர்.

  அங்கு மனோகரனுக்கு சொந்தமான டி.எம். டவர் என்ற பெயரில் உள்ள லாட்ஜ் மற்றும் அவரது அலுவலகம், பெட்ரோல் பங்க், தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூரில் உள்ள திருமண மண்டபம், நீடா மங்கலத்தில் உள்ள தார் பிளாண்ட் குவாரி உள்பட 6 இடங்களில் இன்று சோதனை நடந்தது.

  சுமார் 30 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியே கார்களில் சென்று இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.

  மன்னார்குடியில் உள்ள வீட்டில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். இதில் அங்கு இருந்த வரவு- செலவு கணக்குகள், மற்றும் முக்கிய ஆவணங்களை சரிபார்த்து ஆய்வு செய்தனர்.

  வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இவர் அமைச்சர் காமராஜின் உறவினர் என்று கூறப்படுகிறது. #ITRaid #ADMK

  ×