என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஞாயிற்றுக்கிழமை"

    • ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
    • அமாவாசையில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாகச் செயல் புரியும்.

    இந்த ஆண்டு தை அமாவாசை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவது மிகவும் விசேஷமானது. ஞாயிறு என்றால் சூரியன். சூரிய பகவான் தான் தந்தை வழி உறவுகளுக்கு காரணமானவர். அவர் வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கும் தை மாதத்தில், அவருக்குரிய ஞாயிற்றுக்கி ழமையில் வரும் அமாவாசை என்பதால் இது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

    ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரனான ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். பிதுர்கார்களான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. அமாவா சையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

    அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையில் பிறந்தவர்கள் புத்தி மிகவும் கூர்மையாகச் செயல் புரியும். ஆகையால் அவர்கள் அறிவை சரியான முறையில் செயல் படுத்தினால் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை.

    • சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
    • பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்

    'சுமங்கலி' என்றால் `மங்கலம் நிறைந்தவள்' என்று பொருள். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் நடத்தப்படும் பூஜையே, சுமங்கலி பூஜையாகும்.

    சுமங்கலி பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்துவதால் இது சக்தி வழிபாடாக பார்க்கப்படுகிறது. இந்த சுமங்கலி பூஜையை ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ராகு காலம் இல்லாத நேரத்தில் நடத்தலாம். அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். கரிநாளாக இருக்கக்கூடாது. ஆடி மாதம், நவராத்திரி நாட்கள் ஆகியவை இந்த பூஜை நடத்த விசேஷமாகும். அதிலும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சுமங்கலி பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். சுமங்கலி பூஜை செய்பவர், தமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாசலில் தோரணங்கள் கட்டி, மாக்கோலம் இட்டு வீட்டை அழகுப்படுத்த வேண்டும். பூஜை செய்பவர்கள், தங்களால் எத்தனை சுமங்கலி பெண்களை அழைக்க முடியுமோ அத்தனை பேரையும் அழைக்கலாம். முக்கியமாக வயதான பெரியவர்களை அழைப்பது அவசியம். ஏனென்றால் அவர்களது ஆசீர்வாதம் நமக்கு மிகுந்த பலனை தரும்.

    பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். பூஜை நடத்துபவர் முதலில், சுமங்கலி பெண்களை நாற்காலியில் உட்கார வைத்து அவர்களது பாதங்களை தாம்பூலத் தட்டில் வைத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு பாதத்துக்கு குங்குமம், சந்தனம் வைத்து மலர் தூவி வழிபட வேண்டும்.

    அதன்பிறகு அவர்களின் கை, கால், முகங்களில் சந்தனம், குங்குமம் பூசி, தலையில் சூடிக்கொள்ள பூ கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் வசதிகேற்ப, தாம்பூலத் தட்டில் மஞ்சள், குங்குமம், மருதாணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், புடவை, வளையல் போன்றவற்றை வைத்து கொடுக்கலாம். தொடர்ந்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி சுமங்கலி பெண்களுக்கும் காட்ட வேண்டும். பின்பு, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பூஜையின் முடிவில், சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் கொடுத்து, மகிழ்ச்சியோடு அவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்த சுமங்கலி பூஜையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து செய்வதே சிறப்பானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு, நம்பிக்கையுடனும், பய பக்தியுடனும் செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதால் இல்லத்தில் செல்வம் பெருகும். துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும். தோஷங்கள் விலகும், குலவிருத்தி உண்டாகும்.

    இந்த பூஜையை மிகவும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றில்லை. நமது வசதிகேற்ப எளிமையாக நடத்தலாம். மிகுந்த இறைபக்தியோடு நடத்தினாலே போதுமானது.

    • சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
    • படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும் பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.கன்னியாகுமரியில் முக்க டலும் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கடல் நடுவில் அமைந் துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடவும் சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்த னர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூ ராட்சி பொழுது போக்கு பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வந்தனர்.

    • ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை விசைப்படகு, இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
    • தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப் படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி கடந்த 14-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த தடை காலத்தில் குறிப்பிட்ட இனவகை மீன்கள் கிடைக்காமல் இருந்தது.

    மீன்களின் விலையும் உச்சத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து ஏற்கனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் தமிழகத்தில் வழக்கமாக கிடைக்கும் மீன் வகைகள் தற்போது மார்க்கெட்டில் கிடைத்து வருகிறது.தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி தஞ்சை மீன் மார்க்கெட்டுக்கு இன்று ஏராளமான லாரிகளில் பல வகையான மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் காலையிலிருந்து மார்க்கெட்டுக்கு குவிய தொடங்கினர். தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கி சென்றனர். இதனால் தஞ்சை மீன் மார்க்கெட்டில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதை போல் இறைச்சி கடைகளிலும் வழக்கம்போல் கூட்டம் காணப்பட்டது.

    • வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.
    • இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

    ரஷ்யாவில் வார இறுதி நாளான [ஞாயிற்றுக்கிழமை] நேற்று [ஜூன் 23] யூத வழிபாட்டுத் தளங்கள் மீதும் போலீஸ் நிலையம் மீதும் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 1 மதகுரு, 14 போலீசார் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.

     

    நேற்று அப்பகுதியில் உள்ள சர்ச்களுக்குள்ளும் Synagogue எனப்படும் யூத வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த அந்த கும்பல் வழிபாட்டுக்காக கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.

    தாக்குதலினால் மகாச்காலா பகுதியில் உள்ள சர்ச் உட்பட இரண்டு சர்ச்கள் தீப்பற்றி எறிந்தன. சம்பவங்களின்போது அங்கு கூடியிருந்த மக்கள் உயிர்பிழைத்த நிலையில் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மேலும் தப்பிச் செல்லும்போது போலீஸ் போஸ்ட் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த மொத்த தாக்குதல்களிலும் இதுவரை 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் உடனடியாக நடந்த்து இல்லை என்றும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்னாள் ரஸ்ய தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹாலில் ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாதிகலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 133 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ஏராள மானோர் படை எடுத்த வண்ணமாக உள்ளனர்.

    அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.காலை 7.45 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி யதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    இன்று காலை 11 மணி வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில்சென்று பார்வையிட்டு இருந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள்படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியா குமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்கா ணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்
    • 20 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் :

    33 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சியில் 12 முதல் 14 வயது வரை 31,728 சிறாா்கள், 15 முதல் 18 வயது வரை 42,300 இளம் சிறாா்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் 8,67,420 என மொத்தம் 9,41,448 போ் உள்ளனா். இதில், 8.13 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 6.22 லட்சம் நபா்களுக்கு இரண்டாவது தவணையும், 43,764 நபா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 6.22 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 1.91 லட்சம் நபா்களுக்கு இரண்டாவது தவணையும் செலுத்த வேண்டியுள்ளது.

    இந்த நிலையில், திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் நடைபெறும் 33 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 190 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளது.

    இந்தப் பணியில் சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 1,140 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாநகரில் தடுப்பூசி செலுத்தாத நபா்கள் இந்த முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல கூட்டம் அலைமோதியது
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமானோர் குவிந்திருந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போதும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ×