search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sunday"

    • ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை விசைப்படகு, இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
    • தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப் படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி கடந்த 14-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த தடை காலத்தில் குறிப்பிட்ட இனவகை மீன்கள் கிடைக்காமல் இருந்தது.

    மீன்களின் விலையும் உச்சத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து ஏற்கனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் தமிழகத்தில் வழக்கமாக கிடைக்கும் மீன் வகைகள் தற்போது மார்க்கெட்டில் கிடைத்து வருகிறது.தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி தஞ்சை மீன் மார்க்கெட்டுக்கு இன்று ஏராளமான லாரிகளில் பல வகையான மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் காலையிலிருந்து மார்க்கெட்டுக்கு குவிய தொடங்கினர். தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கி சென்றனர். இதனால் தஞ்சை மீன் மார்க்கெட்டில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதை போல் இறைச்சி கடைகளிலும் வழக்கம்போல் கூட்டம் காணப்பட்டது.

    • காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்
    • 20 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் :

    33 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சியில் 12 முதல் 14 வயது வரை 31,728 சிறாா்கள், 15 முதல் 18 வயது வரை 42,300 இளம் சிறாா்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் 8,67,420 என மொத்தம் 9,41,448 போ் உள்ளனா். இதில், 8.13 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 6.22 லட்சம் நபா்களுக்கு இரண்டாவது தவணையும், 43,764 நபா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 6.22 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 1.91 லட்சம் நபா்களுக்கு இரண்டாவது தவணையும் செலுத்த வேண்டியுள்ளது.

    இந்த நிலையில், திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் நடைபெறும் 33 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 190 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளது.

    இந்தப் பணியில் சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 1,140 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாநகரில் தடுப்பூசி செலுத்தாத நபா்கள் இந்த முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×