என் மலர்tooltip icon

    உலகம்

    • ஏஐ தொழில்நுட்பம் உலகின் உள்ள அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாகியுள்ளது.
    • செக்ஸ் பொம்மைகள் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.

    அறிவியலின் சமீபத்திய பிரசவமான ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். பலதரப்பட்ட நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது.

    இந்த ஏஐ தொழில்நுட்பம் உலகின் உள்ள அனைத்து துறைகளிலும் பெரும் மாற்றத்தை உருவாகியுள்ளது. அவ்வகையில் செக்ஸ் பொம்மைகள் துறையிலும் பெரும் மாற்றத்தை ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.

    செக்ஸ் பொம்மைகளை பேச வைக்கவும் பயன்படுத்துவர்களிடம் உரையாடுவதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    சீன விஞ்ஞானிகள் chatGPT மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செக்ஸ் ரோபோட்களை பேச வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    அவ்வகையில் பயனாளர்களிடம் பேசவும் உடல்ரீதியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் வடிவிலான இந்த செக்ஸ் பொம்மைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வடகிழக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • அமெரிக்க - பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தகவல்.

    அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் இணைந்து ஏமனின் ஹொடைடா மாகாணத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஹௌதி சார்பில் நடத்தப்படும் அல்-மசிரா டிவி தெரிவித்துள்ளது. செங்கடலை ஒட்டிய அலுஹையா மாவாட்டத்தின் வடகிழக்கில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    எனினும், இது தொடர்பான இதர விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    முன்னதாக ஹௌதி சார்பில் அனுப்பப்பட்ட நான்கு டிரோன் கப்பல்கள் மற்றும் இரண்டு டிரோன் விமானங்களை அமெரிக்க - பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்கள் செங்கடல் பகுதியில் செல்வதாக கூறி அவற்றை அழிக்க ஏமனின் வடக்கில் அதிக பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹௌதி அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    • எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.
    • அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்த நிலையில், தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்த ஒரு நாள் கழித்து கென்டக்கி லூயிஸ்வில்லியில் உள்ள நைட் கிளப்பிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

    சனிக்கிழமை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயங்களுடன் இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    மேலும் எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.

    அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    • மின்சார உற்பத்தி கட்டமைப்புகளை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இன்று 8 ஏவுகணை மற்றும் 13 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் இன்னும் நீடித்து வருகிறது. உக்ரைனின் மின்சார கட்டமைப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகிறது. தற்போது உக்ரைன் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷியா பார்வை உள்ளது.

    அந்த நகர் மீது தொடர்ந்து தாக்குதலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் கட்டடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இடைவிடாமல் எரிசக்தி மற்றும் மின்சாரம் உற்பத்தி கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மின்சார உற்பத்தி திறனை இழந்துள்ளது. 16 ஏவுகணைகள் மற்றும் 13 டிரோன்கள் மூலம் எரிசக்தி மீது 8 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள் என்றால், உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டை பெற வேண்டும்.
    • முன்னிலை கல்லுரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இங்கு தங்கியிருந்து கம்பெனி தொடங்க வேண்டும் என திட்டமிடுவார்கள்.

    அமெரிக்காவில் படிக்க செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு கிரீன் கார்டு எளிதாக கிடைத்துவிடாது. கிரீன் கார்டு பெற்றால் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க முடியும். ஏற்கனவே அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் குடியுரிமை விவகாரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது விசயத்தில் மற்ற தலைவர்களுக்கு எதிரான கொள்கை கொண்டவராக இருந்தார்.

    வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் அவர்களுடைய நாட்டிற்கு திரும்பி செல்லக்கூடிய நிலை ஏற்படும் சூழ்நிலையான முடிவுகளை எதிர்கொண்டார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே... என்ற கொள்கை கொண்டவர்.

    தற்போது மீண்டும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவியில் போட்டியிட இருக்கிறார். வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் குடியுரிமை தொடர்பான தனது முந்தைய பேச்சில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

    போட்காஸ்ட் ஒன்றில் பேசிய டொனால்டு டிரம்ப் இங்கு கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள் என்றால், உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நாட்டில் தங்குவதற்கு அவசியமானது கிரீன் கார்டு. இது ஜூனியர் கல்லூரிகளுக்கும் இது அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "முன்னிலை கல்லுரிகள் அல்லது கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இங்கு தங்கியிருந்து கம்பெனி தொடங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். இந்த திட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்றால், அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியா திரும்புவார்கள். சீனா திரும்புவார்கள்.

    இதே அடிப்படையிலான கம்பெனிகளை அவர்களுடைய இடத்தில் தொடங்குவார்கள். அவர்கள் பில்லியனர்களாகி ஆயிரக்கணக்கான மக்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அதை இங்கே செய்யலாம்" என்றார்.

    • கனமழையால் நேற்று மட்டும் சீனாவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • நூற்றுக்கணக்கான பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த தீவிரமான மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது

    சீனாவில் ஃபுஜ்ஜியான் மாகாணத்தில் மழைக்காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை காணவில்லை. மீட்புக்குழு அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த கோவில் மண்ணில் புதைந்ததை கண்டுபிடித்தினர். அந்த கோவில் இடிபாட்டிற்குள் ஆறுபேர் உடல் கிடந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

    கனமழை காரணமாக வீட்டில் இருந்து உயரமான பகுதியில் இருந்து கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலச்சரிவு காரணமாக கோவில் மண்ணில் புதைந்தபோது இவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

    நேற்று குவாங்டாங் மாகாணத்தில் கனமழை காரணமாக 47 பேர் உயிரிழந்தனர். கனமழை காரமாக 100-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. விளைநிலைங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளன. புறநகர் டவுன்பகுதிகளை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    • 20 ஆண்டாக முழு சம்பளத்தையும் வழங்கிய நிறுவனம் எந்த வேலையையும் வழங்கவில்லை.
    • வேலை வழங்காத முன்னாள் நிறுவனத்தின்மீது அந்தப் பெண்மணி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் லாரன்ஸ் வான் வாசென்ஹோவ் என்ற பெண்மணி. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 1993-ம் ஆண்டில் பிரான்ஸ் டெலிகாம் நிறுவனத்தில் (ஆரஞ்சு நிறுவனத்தால் கையகப்படுத்துவதற்கு முன்) பணியில் சேர்ந்தார்.

    அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஏற்ற பணிகளை நிறுவனம் வழங்கியது. அவர் 2002-ம் ஆண்டு வரை வேலை செய்தார்.

    மற்றொரு பகுதிக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என 2002-ல் வான் வாசென்ஹோவ் கோரிக்கை விடுத்தார். ஆனால் புதிய சூழல் அவருக்கு ஏற்றதாக இல்லை. அவருக்கு ஏற்ற் வேலை சூழலை மாற்றி அமைக்க ஆரஞ்ச் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    முழு சம்பளத்தையும் அவருக்கு தொடர்ந்து வழங்கிய ஆரஞ்ச் நிறுவனம், எந்த வேலையையும் வழங்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், சஸ்பெண்ட் செய்யாமல் அவரை கம்பெனியில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கை இது. 20 ஆண்டாக எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் இருப்பது தாங்கமுடியாத கஷ்டம். தனிமைப்படுத்தப்பட்டதால் மன அழுத்தம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

    2015-ம் ஆண்டில் அரசு மற்றும் பாகுபாடு தடுப்புக்கான உயர் அதிகாரியிடம் புகார் அளித்தார். இதையடுத்து பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில், வான் வாசென்ஹோவ் முன்னாள் நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் ஆரஞ்சு நிறுவனத்தின் மீது பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பணி எதுவும் தராமல் ஊதியம் மட்டும் வழங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.

    • துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் கடையில் இருந்த பொதுமக்கள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். பலர் கடையில் இருந்த அறைகளில் பதுங்கி கொண்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் சுட்டதில் அந்த நபர் பலத்த காயமடைந்தார்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    போலீசார் கூறும்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர். ஆர்கன்சாஸ் கவர்னர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் கூறும்போது, போர்டைசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் கவலை அடைந்துள்ளேன். இதில் விரைந்து செயல்பட்ட அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர்.
    • காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

    இதில் காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள். இந்த நிலையில் காசாவின் தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.



    • இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.
    • தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

    தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இந்திய மதிப்பில் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    அரசின் இந்த புதிய சட்டங்களை மீறினால் அரசு அதிகாரிகளுக்கு 3 லட்சமும் மத தலைவர்களுக்கு 5 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    தஜிகிஸ்தான் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சகம் இஸ்லாமிய உடை மற்றும் மேற்கத்திய பாணி மினி ஸ்கர்ட் இரண்டையும் மாணவர்களுக்கு தடை செய்தபோது ஹிஜாப் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    1991 ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த போது தஜிகிஸ்தான் நாடு உருவானது. இந்நாட்டில் 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.

    கொசோவோ, அஜர்பைஜான், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் உட்பட பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாபை தடை செய்துள்ளது.

    • ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் இந்துஜா குழுமம் செயல்பட்டு வருகிறது.
    • ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர்

    ஜெனிவா:

    உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்துஜா குழுமம். இந்தியாவில் அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் , ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஹிந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.

    ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் இந்துஜா குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் பல்லாயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

    37-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் இந்துஜா, அவரது மனைவி கமால், மகன் அஜய் மருமகள் நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார்கள். இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணியமர்த்தி, அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கியதாகவும், அதிக மணி நேரம் வேலை செய்ய மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கு விசாரணையின்போது, இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் (ரூ.2,217) செலவு செய்கின்றனர். அதே சமயம், வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் (ரூ.660) மட்டுமே வழங்குகின்றனர். ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர் என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் சுவிட்சர்லாந்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில் இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்கள், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது தொடரப்பட்ட மனிதக் கடத்தல் தொடர்பான வழக்கை மட்டும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • போலந்து நாட்டில் தன்பாலின திருமணத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • அவர்கள் குழந்தைகளை தத்தெடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    போலந்து நாட்டில் தன்பாலின ஜோடிகள் திருமணம் செய்து கொள்ளவும், தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தன் பாலின மக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான மசோதா குறித்து பாராளுமன்றம் பரிசீலனை செய்து வருகிறது.

    அதேபோல் தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    இந்த நிலையில் தன்பாலிய ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சட்டத்தை கொண்டு வர வீட்டோ பவரை பயன்படுத்துவீர்களா? என போலாந்து அதிபர் அன்ட்ஸெஜ் டுடாவிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அன்ட்ஸெஜ் டுடா "யாரிடமும் மறைப்பதற்கு இதில் ரகசியம் ஏதும் இல்லை. நான் தன்பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான முடிவுக்கு எதிரானவன் அல்ல. இது குழந்தைகள் பாதுகாப்பது தொடர்பான விசயம்" என்றார்.

    ×