என் மலர்
உலகம்

காசாவின் ரபா நகரில் அகதிகள் முகாம் மீது தாக்குதல்- 25 பேர் பலி
- காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர்.
- காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது.
காசாவில் மொத்தம் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இதில் காசாவில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள். இந்த நிலையில் காசாவின் தெற்கு நகரமான ரபாவிற்கு வெளியே இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசாவின் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.
Next Story






