அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு- நைட் கிளப்பில் ஒருவர் பலி

எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை. அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு- நைட் கிளப்பில் ஒருவர் பலி
Published on

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்த நிலையில், தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்த ஒரு நாள் கழித்து கென்டக்கி லூயிஸ்வில்லியில் உள்ள நைட் கிளப்பிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயங்களுடன் இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.

அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com