என் மலர்
நீங்கள் தேடியது "கிரீன் கார்டு"
- இந்தியர்களை பணியமர்த்தும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும்
- H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்கா தெளிவுபடுத்தியது.
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல் வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறை முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.
இதுவரை, வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் புதுப்பித்தல் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் காலத்தில், 540 நாட்கள் வரை தங்கள் வேலையைத் தொடரலாம்.
ஆனால் புதிய விதியின் கீழ், தற்போதைய வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் முன் புதுப்பித்தல் பெறாத எவரும் உடனடியாக வேலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப்பத்தை முறையாக தாக்கல் செய்வதன் மூலம் வெளிநாட்டினர் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை சரியான நேரத்தில் புதுப்பிக்க இயலும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதுப்பித்தல் நடவடிக்கைக்கு 3-12 மாதங்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் இந்த முடிவு அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
- இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 26-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
- புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் போது போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களை எளிதில் தடுக்க முடியும்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
அதாவது வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 26-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த புதிய விதியின் கீழ், அமெரிக்காவிற்கு வரும் போது அல்லது வெளியேறும்போது அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களிடம் இருந்து புகைப்படங்கள் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்களை சேகரிப்பார்கள். முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு துறை ஒவ்வொரு பயணியுடனும் இணைக்கப்பட்ட புகைப்பட தரவுத்தளங்களை தொகுத்து, பாஸ்போர்ட்டுகள், பயண ஆவணங்கள் மற்றும் எல்லை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை இணைக்கும். இந்த படங்கள் பின்னர் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் எடுக்கப்பட்ட நிகழ்நேர புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு சரி பார்க்கப்படும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் போது போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களை எளிதில் தடுக்க முடியும். அதேபோல, இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
- விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யப்படும்.
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
H-1B விசா புதிய விதிமுறைகள்:
புதிய H-1B விசா மனுக்களுக்கான கட்டணம் தற்போதுள்ள சுமார் $4,000 முதல் $6,000 என்ற நிலையிலிருந்து, $1,00,000 (ரூ. 88 லட்சம்) என உயர்த்தப்படுகிறது.எனினும், இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
அடுத்ததாக, விசா பெறுவதற்கான சிறப்புத் தொழில் (Specialty Occupation) என்ற வரையறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
இனி, விண்ணப்பதாரரின் பட்டப்படிப்பும், அவர்கள் செய்யும் வேலையும் கண்டிப்பாக ஒரே துறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
புதிய விதிமுறைகளின்படி H-1B ஊழியர்களைப் பிற நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்து அனுப்பும் கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
ஊழியர்கள் அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு இருக்கின்றனரா அல்லது மூன்றாவது ஏஜென்சி மூலம் காண்டிராக்ட்-இல் இருக்கிறார்களா என்பது குறித்த கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், பல்கலைக்கழகங்கள், இலாப நோக்கற்ற ஆய்வு நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற வருடாந்திர விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு செயல்முறையும் கடினமாக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான திறன் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் O-1A விசா முறையில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ள்ளது.
இந்த முன்மொழிவுகள் தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கப் பணிக்கான விசா அமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மறுசீரமைப்பாக இருக்கும்.
- பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
- டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் குடியிருக்கும் வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்களின் கிரீன் கார்டு மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்ந்தோர் சேவைகள் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில், "பயங்கரவாதத்தை ஆதரிப்பது உள்ளிட்ட தீவிரமான குற்றங்களில் ஈடுபபவர்களின் கிரீன் கார்டு மற்றும் விசா ஆகியவை ரத்து செய்யப்படும். அமெரிக்காவில் குடியிருப்பது என்பது நிபந்தனை உடனான சலுகையே தவிர உத்தரவாதமுள்ள உரிமை இல்லை" என்று பதிவிட்டுள்ளது.
- அமெரிக்காவில் தங்கியிருக்கும் குடிமக்கள் அல்லாத அனைவரும் அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
- தங்கள் முகவரியை மாற்றுபவர்கள் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாடு கடத்தப் பட்டனர். மேலும் அமெரிக்காவில் பல்வேறு விசாக்கள் மூலம் வசிக்கும் வெளிநாட்டினருக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து அமெரிக்க குடியேறிகள், எச்-1பி விசாவில் பணியாற்றுபவர்கள், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தங்கள் சட்டப்பூர்வ அந்தஸ்துக்கான ஆதாரத்தை எப்போதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
படையெடுப்பிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாத்தல் என்ற டிரம்பின் நிர்வாக உத்தரவின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள் அல்லாதவர்களும் அவர்களின் அடையாள ஆவணத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதற்கு இணங்கவில்லையென்றால் எந்த அடைக்கலமும் இருக்காது. அமெரிக்காவில் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அல்லாத அனைவரும் படிவத்தை நிரப்பி அரசாங்கத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
குடியேறிகளின் குழந்தைகளும் 14 வயது ஆன 30 நாட்களுக்குள் மீண்டும் பதிவு செய்து கைரேகைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 11-ந்தேதி அல்லது அதற்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியை மாற்றுபவர்களும் 10 நாட்களுக்குள் புகாரளிக்க வேண்டும், தவறினால் அவர்களுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்-1பி உள்ளிட்ட செல்லுபடியாகும் விசா அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே அவர்கள் மீண்டும் படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை.
ஆனாலும், அவர்கள் எல்லா நேரங்களிலும் தங்களுடன் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதிகாரிகள் கேட்கும்போது அடையாள ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.
அமெரிக்காவில் சுமார் 54 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். கிரீன் கார்டை பெற லட்சக்கணக்கானோர் காத்து இருக்கிறார்கள். கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுமதி செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் அதிகபட்சம் செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் துறை அறிவித்துள்ளது. கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த மாதம் 22-ந் தேதி அல்லது அதற்கு பிறகு நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட தகுதியான வேலை வாய்ப்பு அங்கீகார ஆவண விண்ணப்பங்களுக்கு இந்த புதிய கொள்கை பொருத்தும்.
இது அமெரிக்காவில் எச்.1பி.விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் பயன் அளிக்கும்.
- நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள் என்றால், உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டை பெற வேண்டும்.
- முன்னிலை கல்லுரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இங்கு தங்கியிருந்து கம்பெனி தொடங்க வேண்டும் என திட்டமிடுவார்கள்.
அமெரிக்காவில் படிக்க செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு கிரீன் கார்டு எளிதாக கிடைத்துவிடாது. கிரீன் கார்டு பெற்றால் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க முடியும். ஏற்கனவே அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் குடியுரிமை விவகாரத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். வெளிநாட்டினருக்கு விசா வழங்குவது விசயத்தில் மற்ற தலைவர்களுக்கு எதிரான கொள்கை கொண்டவராக இருந்தார்.
வெளிநாட்டைச் சேர்ந்த பணியாளர்கள் அவர்களுடைய நாட்டிற்கு திரும்பி செல்லக்கூடிய நிலை ஏற்படும் சூழ்நிலையான முடிவுகளை எதிர்கொண்டார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே... என்ற கொள்கை கொண்டவர்.
தற்போது மீண்டும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவியில் போட்டியிட இருக்கிறார். வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் குடியுரிமை தொடர்பான தனது முந்தைய பேச்சில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
போட்காஸ்ட் ஒன்றில் பேசிய டொனால்டு டிரம்ப் இங்கு கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "நீங்கள் கல்லூரியில் பட்டம் பெற்றீர்கள் என்றால், உங்கள் படிப்பின் ஒரு பகுதியாக நீங்கள் தானாகவே கிரீன் கார்டை பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நாட்டில் தங்குவதற்கு அவசியமானது கிரீன் கார்டு. இது ஜூனியர் கல்லூரிகளுக்கும் இது அடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "முன்னிலை கல்லுரிகள் அல்லது கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இங்கு தங்கியிருந்து கம்பெனி தொடங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். இந்த திட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை என்றால், அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியா திரும்புவார்கள். சீனா திரும்புவார்கள்.
இதே அடிப்படையிலான கம்பெனிகளை அவர்களுடைய இடத்தில் தொடங்குவார்கள். அவர்கள் பில்லியனர்களாகி ஆயிரக்கணக்கான மக்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அதை இங்கே செய்யலாம்" என்றார்.
- நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற அனுமதிக்கும் "EB-5" இமிக்ரன்ட் விசாவை ஒழிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
- கோல்டன் கார்டு திட்டத்தின்மூலம் அமெரிக்காவின் கடன் சுமை குறையும் என்பது அவரது கருத்து.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெளிநாட்டில் இருந்து அங்கு குடியேறுபவர்கள் மீது கடுமையான போக்கை கொண்டுள்ளார்.
ஆவணமின்றி சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் மறுபுறம் தொழில்நுபட்பத்துறைக்கு திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வேண்டும் என்பதால் HB1 வேலை விசாவை டிரம்ப் ஆதரித்து பேசினார்.
இதற்கிடையே அமெரிக்காவில் தொழில் மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற அனுமதிக்கும் "EB-5" இமிக்ரன்ட் விசாவை ஒழிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

EB-5 விசாவுக்கு பதிலாக அமெரிக்காவுக்கு குடியேறும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பணக்கார வெளிநாட்டவருக்காக டிரம்ப் தங்க அட்டை திட்டத்தை அறிவித்துள்ளார். கோல்டன் கார்டு எனப்படும் இது நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்டு -ஐ ஒத்தது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டி அளித்த டிரம்ப், "நாங்கள் ஒரு தங்க அட்டையை விற்கப் போகிறோம். அந்த அட்டைக்கு 5 மில்லியன் டாலர்(சுமார் 43 கோடி ரூபாய்) விலையை நிர்ணயம் செய்யப் போகிறோம்" என்று கூறினார். இந்த கோல்டன் கார்டு திட்டத்தின்மூலம் அமெரிக்காவின் கடன் சுமை குறையும் என்பது அவரது கருத்து.
டிரம்ப் அரசின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், தங்க அட்டை உண்மையில் ஒரு வகையான கிரீன் கார்டாக இருக்கும்.
டிரம்பின் இந்த புதிய ''கோல்டன் கார்டு' திட்டம் தற்போதுள்ள EB-5 திட்டத்தை மாற்றப் போகிறது. இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிரீன் கார்டு பயன்களை பெற முடியும். 'கோல்டன் கார்டு' மூலம் பெறப்படும் பணம் நேரடியாக அரசாங்கத்திற்குச் செல்லும் என்று தெரிவித்தார்.






