என் மலர்tooltip icon

    உலகம்

    • லிதுவேனியாவில் 1.314 லட்சம் 3-வது நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
    • ஐரோக்கிய யூனியன் குடியுரிமை பெற்றவர்கள் 10 ஆயிரம் பேர் வெலை பார்த்து வருகிறார்கள்.

    ஐரோப்பிய யூனியனில் உள்ள லிதுவேனியா 3-வது நாடு தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சட்டத்திற்கு 87 எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். ஒரு எம்.பி. மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். 8 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

    இது வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களின் இடம்பெயர்வுகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடியும் என எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்த சட்டத்தின்படி ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் இருந்து வருடத்திற்கு 40 ஆயிரம் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த எண்ணிக்கை அங்கு நிரந்தரமாக வசிப்போர்களின் எண்ணிக்கையில் 1.4 சதவீதம் ஆகும்.

    வெளிநாாட்டு தொழிலாளர்கள், நிறுவனத்தினற்கான தேவை, தற்காலிக குடியிருப்பு அனுமதிகளை வழங்குவதற்கான நடைமுறை ஆகியவை கடுமையாக்கப்பட்டுள்ளன.

    கடந்த வருட கணக்குப்படி லிதுவேனியாவில் வசித்து வந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு 2 லட்சமாக உயர்ந்ததாக உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருந்துதான் அதிக அளவில் வருவதாக தெரிவித்துள்ளது. 2023-ல் 1.42 லட்சம் பேர் வந்ததாக தெரிவித்துள்ளது.

    தற்போது லிதுவேனியாவில் 1.314 லட்சம் 3-வது நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைபார்த்து வருவதாகவும், இது கடந்த ஆண்டைவிட 65.5 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. ஐரோக்கிய யூனியன் குடியுரிமை பெற்றவர்கள் 10 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இது 66.7 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    • அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
    • பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளது என 2011-ல் உலக வங்கி தெரிவித்தது.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தின் காசா, ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

    ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது.

    இந்நிலையில், ஆர்மீனியா நாடும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

    முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கருத்தரித்து 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • பெண்ணின் உடலுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக கேபினட் கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்த நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் இனிமேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும். இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த முடிவு பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்ப்பமானது ஒரு பெண்ணுடன் அவளது விருப்பத்திற்கு மாறாக, அவளது சம்மதமின்றி அல்லது போதுமான விருப்பமின்றி உடலுறவின் விளைவாக இருந்தால் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும்.

    அதேபோல் கர்ப்பத்திற்கு காரணமானவர் அந்த பெண்ணின் திருமணத்திற்கு தகுதியற்ற உறவினர்களில் ஒருவராக இருந்தாலும் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கருத்தரித்து 120 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருக்கலைப்பு பெண்னின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஏனெ்னறால் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானம் தொடர்பாக அரசாணை வெளியிட்ட பிறகு அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.

    • இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
    • ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும்.

    டாக்கா:

    நமது அண்டை நாடான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

    டெல்லியில் இன்று மாலை அவரை இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார். நாளை காலை ஷேக்ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர்.

    பின்னர் ஷேக் ஹசீனா ஜனாதிபதி மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். நாளை மாலை அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வங்காளதேசம் திரும்புகிறார்.

    இந்த மாதத்தில் ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும். கடந்த 9-ந்தேதி பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

    • மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார்.
    • இலங்கையில் பால் உற்பத்திதுறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கொழும்பு:

    பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக புதிய அரசு அமைந்த பிறகு முதல் முறையாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் அவரை இலங்கை மந்திரி தாரக பால சூரியா, கிழக்கு மாகாண கவர்னர் தொண்டமான் மற்றும் பலர் வரவேற்றனர்.

    பின்னர் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்தும், தமிழக மீனவர்கள் விவகாரம், இலங்கையில் இந்திய நிறுவனம் முதலீடு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும், இடையே எரிசக்தி துறை தொடர்பான கூட்டுத்திட்டத்தை விரைவு படுத்துவது தொடர்பாகவும், இலங்கையில் பால் உற்பத்திதுறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


    மேலும் இலங்கையில் இந்திய நிதி உதவியுடன் இந்தியா-இலங்கை இடையே ரூ. 50 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.

    இந்திய அரசின் உதவியுடன் இலங்கை கண்டி, மாத்தறை உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள 154 வீடுகளை ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் ஜெய்சங்கர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

    இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனே, வெளியுறவு துறை மந்திரி அலி சப்ரி உள்ளிட்டவர்களையும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

    இலங்கையில் உள்ள தமிழ் அமைப்பு தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார்.

    • சோதனைக்காக இயக்கப்பட்ட ரெயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.
    • பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து பயணிகள் புதிய ரெயில் ஒன்று புறப்பட்டது. வேக சோதனைக்காக இயக்கப்பட்ட இந்த ரெயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர்.

    அதேசமயம் 1,500 டன் தாமிர பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயிலும் அந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது. புறநகர் பகுதியான சான் பெர்னார்டோ அருகே சென்றபோது அந்த இரு ரெயில்களும் நேருக்குநேர் மோதின.

    இதில் பயணிகள் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் நேருக்குநேர் மோதியதில் பயணிகள் ரெயிலின் ஒரு பெட்டி சரக்கு ரெயிலின் மீது ஏறியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 4 சீனர்கள் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று ரெயிலின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மற்றொருபுறம் ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. அதன்படி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் கேபிரியேல் போரிக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.

    • இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம்.
    • இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    நியூயார்க்:

    பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.

    இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், "இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெறும். இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் 'யோகா நமக்காகவும் சமூகத்திற்காகவும்' என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இங்கு நடைபெறும் யோகா நிகழ்ச்சி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என்று கூறினார்.

    • ஆபத்தை ஏற்படுத்தும் எனில் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • உலகம் முழக்க 400 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

    ரஷியாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை-இன் மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    "கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அமெரிக்காவில் விற்பனை செய்யவோ அல்லது ஏற்கனவே விற்பனை செய்த மென்பொருள்களுக்கு அப்டேட் வழங்கவோ முடியாது," என்று அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    "ரஷிய நிறுவனமான கேஸ்பர்ஸ்கை கொண்டு அமெரிக்காவின் மிக முக்கிய விவரங்களை சேகரிக்கும் பணிகளில் ரஷியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்நாடு அதற்கான திறன் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் அந்நாட்டு குடிமக்களுக்கு அவர்களது தொழில்நுட்பம் ஆபத்தை ஏற்படுத்தும் எனில் அதற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்," என அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமொண்டோ தெரிவித்துள்ளார்.

    மென்பொருள் துறையில் பிரபலமாக அறியப்படும் கேஸ்பர்ஸ்கை நிறுவனம் ரஷியாவின் மாஸ்கோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் உலகம் முழுக்க 31 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உலகம் முழக்க 400 மில்லியன் பேரும், 200-க்கும் அதிக நாடுகளில் 2.7 லட்சம் கார்ப்பரேட் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

    • பயங்கரவாத தாக்குதல்களில் அகமது அல் சவர்கா முக்கிய பங்கு வகித்து வந்ததாக தகவல்.
    • பாலஸ்தீனம் சார்பில் 37 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காசா வடக்கு எல்லை பகுதியான பெய்ட் ஹனௌனில் நடத்தப்பட்ட வான்வளி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பெய்ட் ஹனௌனில் ஸ்னைப்பர் பிரிவுக்கு தலைமை வகித்த அகமது அல் சவர்கா ராணுவ போர் விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்தார்.

    இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களில் அகமது அல் சவர்கா முக்கிய பங்கு வகித்து வந்ததாக கூறப்படுகிறது. மத்திய காசா மற்றும் தெற்கு ரஃபா பகுதிகளில் ஹமாஸ்-ஐ அழிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து காசாவில் உள்ள சுகாதார துறை அதிகாரிகள் கூறும் போது இதுவரை பாலஸ்தீனம் சார்பில் 37 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 653 ஆக அதிகரித்து உள்ளதாக தெரிவித்தனர். 

    • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார்.
    • புதிய அரசு அமைந்தபின் வெளியுறவுத்துறை மந்திரி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.

    கொழும்பு:

    மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா, கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

    இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    முன்னதாக, இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பயணம் இணைப்புத் திட்டங்களுக்கும், துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற ஒத்துழைப்புக்கும் உத்வேகம் சேர்க்கும் என தெரிவித்துள்ளது.

    • இம்ரான் கான் கடந்த ஆண்டு முதல் ஜெயிலில் இருந்து வருகிறார்.
    • ஆலோசகர் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அவர் குறித்து தகவல் ஏதும் இல்லை என மகன் புகார்.

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அரசியல் ஆலோசகர் குலாம் ஷபீர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக லாகூரின் காயன்பான்-இ-அமின் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இஸ்லாமாபாத் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது மகன் பிலால் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அடையாளம் தெரியாத நபர்களால் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படப்படுகிறது. குலாம் ஷபீர் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான ஷபாஸ் கில்லின் மூத்த சகோதரர் ஆவார்.

    கடந்த 2022-ல் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகிய பின் அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஆட்சி கவிழ்ந்ததும் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சிக்கு எதிராக லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் வரை பிரமாண்ட பேரணி நடத்தினார். அப்போது பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு கரையில் இருந்து காசாவுக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல இஸ்ரேல் அனுமதி.
    • பாலஸ்தீன பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் செல்லும்போது வான்தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

    இஸ்ரேல் ராணுவம் காசாவின் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் வணிக பொருட்களை பாதுகாத்து வந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மீது வான்தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்ததாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர்கள் உடல்கள் மற்றும் காயம் அடைந்தோர் ஐரோப்பிய காசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    சமீபத்தில் மேற்கு கரையில் இருந்து காசா முனைக்கு வணிக பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி அளித்திருந்திருந்தனர். இதனால் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் வணிக பொருட்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காசா முனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    கடந்த திங்கட்கிழமை இதுபோன்று வணிக பொருட்கள் கொண்டு சென்றபோது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் 2-வது முறையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    புதன்கிழமை வரை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் தாக்குதலால் 37396 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசாவைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×