இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார்.புதிய அரசு அமைந்தபின் வெளியுறவுத்துறை மந்திரி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
Published on

கொழும்பு:

மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா, கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

முன்னதாக, இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பயணம் இணைப்புத் திட்டங்களுக்கும், துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற ஒத்துழைப்புக்கும் உத்வேகம் சேர்க்கும் என தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com