என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armenia"

    • அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர்.
    • ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.

    ரஷியாவின் தெற்கே தெற்கு காகசஸில் உள்ள ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகள் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில் 35 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து இரு நாட்டு தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    அமெரிக்கா சென்றுள்ள அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் மற்றும் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் ஆகியோர் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர்.

    எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்காவுடன் ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக அஜர்பைஜானை நக்சிவானுடன் இணைக்கும் ஒரு பெரிய போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது.

    ஒப்பந்தத்தின்படி இந்த வழித்தடத்தின் உரிமைகளை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும்.

    இது சர்வதேச அமைதி மற்றும் செழிப்புக்கான "டிரம்ப் பாதை" என்று அழைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்தப் பாதை இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், எரிசக்தி துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறப்படுகிறது.

    இதை ஐரோப்பிய நாடுகள் வரவேற்றாலும், இரு நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.  

    • நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்காக இரு நாடுகளும் சண்டையிட்டு வருகின்றன
    • 2020ல் 6 வாரங்கள் நடைபெற்ற போரில் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்

    ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது.

    இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.

    2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர். கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது.

    இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.

    • அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
    • பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளது என 2011-ல் உலக வங்கி தெரிவித்தது.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தின் காசா, ராபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் கடந்த 9 மாதமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.

    ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்துள்ளது.

    இந்நிலையில், ஆர்மீனியா நாடும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

    முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×