என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை (செப்டம்பர் 22) அமெரிக்கா செல்ல உள்ளது.

    இந்த பயணத்தின்போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.

    குறிப்பாக, H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தும் அமெரிக்காவின்  முடிவு இந்திய தொழில்நுட்பத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி, விரைவில் ஒரு சாதகமான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்.

    இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஏற்கனவே பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

    கடந்த வாரம், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தை குழு இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து பேசியது. அந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்ததாக இரு நாடுகளும் தெரிவித்தன. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார். 

    • இந்த குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி ஆகும்.
    • இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம் என்ற இடத்தை மும்பை தக்க வைத்துள்ளது.

    இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

    Mercedes-Benz Hurun India Wealth Report 2025 வெளியிட்ட அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இருந்த 4,58,000 ஆக இருந்த கோடீஸ்வர குடும்பங்கள் 2025 ஆம் ஆண்டில் 8,71,700 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்த குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி ஆகும்.

    1 கோடியே 8.5 லட்சம் ரூபாய், அதற்கு மேல் நிகர மதிப்புள்ள குடும்பங்கள் கோடீஸ்வர குடும்பங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.

    இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம் என்ற இடத்தை மும்பை தக்க வைத்துள்ளது. இங்கு 1,42,000 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி (68,200) மற்றும் பெங்களூரு (31,600) உள்ளன.

    மாநில அளவில், மகாராஷ்டிரா 1,78,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அமெரிக்கா முக்கிய இடமாக உள்ளது.

    இந்த பணக்காரர்களில் 60% பேர் தங்கள் ஆண்டு செலவு ஒரு கோடி ரூபாய்க்குள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

    • பூனம் பாண்டே சமூக ஊடகங்களில் அவரது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காகவும் அறியப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • ராம்லீலாவில் ஒரு பெண் நல்ல குணத்தை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது தவறாக எங்களுக்குத் தெரியவில்லை.

    தசாரா விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் ராம் லீலா நாடகங்கள் பரவலாக வருடந்தோறும் நடத்தப்படுகின்றன.

    அந்த வகையில் டெல்லியில் பிரபலமான 'லவ் குஷ் ராம்லீலா' நாடகக்குழு, மாடல் அழகி பூனம் பாண்டேவை 'மண்டோதரி' (ராவணனின் மனைவி) கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்வு வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    டெல்லி பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் பிரவீன் ஷங்கர் கபூர், 'லவ் குஷ் ராம்லீலா' குழுவின் துணைத் தலைவராகவும் உள்ளார். அவர் அமைப்பாளர்களுக்குக் கடிதம் எழுதி, பூனம் பாண்டேவை மாற்றக் கோரியுள்ளார்.

    பூனம் பாண்டே சமூக ஊடகங்களில் அவரது சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்காகவும் அறியப்படுகிறார் என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த 'லவ் குஷ் ராம்லீலா' குழுவின் தலைவர் அர்ஜுன் குமார், "ராம்லீலாவில் ஒரு பெண் நல்ல குணத்தை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது தவறாக எங்களுக்குத் தெரியவில்லை.

    அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். 500 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். பூனம் பாண்டே அவர்களில் ஒருவர் மட்டுமே" என்று தெரிவித்தார்.

    நாளை (செப்டம்பர் 22) நாடகம் தொடங்க உள்ள நிலையில் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது. 

    • H-1B விசா பெற ஆண்டுதோறும் 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும்
    • அதே சமயம், மதகிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவுக்கு கவலை தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் 1,00,000 டாலர் (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்ற டிரம்ப்பின் உத்தரவு இந்தியர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

    2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த நடவடிக்கை குறித்து இந்தியப் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவரான மகேந்திர தேவ் நேர்மறையான கருத்தை தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியதாவது, "இந்த கட்டண உயர்வு, திறமையான இந்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுத்து, அவர்கள் தங்கள் நாட்டிலேயே பணிபுரியவும், தொழில் தொடங்கவும் ஊக்குவிக்கும்.

    இதன் விளைவாக, பெங்களூரு, ஐதராபாத், மற்றும் குரேகான் போன்ற இந்திய நகரங்களில் புதிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருகும். இது இந்தியாவின் 'விக்சித் பாரத்' கனவுக்கு உத்வேகம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், மதகிய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவுக்கு கவலை தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குடும்பங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மனிதநேய விளைவுகளை உருவாக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

    • அமித்ஷா வீடுதான் அதிமுகவிற்கு நீதிமன்றமாக இருக்கிறது.
    • ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.

    தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர செயலாளர் முத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சங்கரன், முனியசாமி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் வாசுகி, தேர்தல் ஆணையத்தோடு கூட்டுசேர்ந்து கொண்டு எதிர்கட்சிகளை பழிவாங்கி வருகின்றது பிஜேபி அரசு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எல்லா கடன்களையும் கொடுத்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

    ஏழை எளிய மக்கள் மீது அனைத்து வரிகளையும் விதித்து நிர்மலா சீத்தாராமன் பழிவாங்கி வருகிறார்.

    11 வருடம் மோடி ஆட்சியில் அராஜகம் தான் தலைவிரித்தாடுகிறது.

    தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தன்னை சிங்கம் என்று நினைத்துக் கொண்டு தனியாக ரோடு ஷோ சென்று கொண்டிருக்கிறார்.

    இவர் இன்றைக்கு மக்கள் மத்தியில் அரசியல் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை சொல்கிறார். முன்பெல்லாம் நீங்கள் அதிகம் போராடுவீர்கள். இப்போது நீங்கள் போராடுவதே கிடையாது. திமுகவை நீங்கள் ரொம்ப தடவி கொடுக்கிறீர்கள். திமுக உங்களை விழுங்கி விடும் என்கிறார்.

    திமுக பாம்பும் இல்லை. கம்யூனிஸ்ட்கள் தவளையும் இல்லை. நீங்கள் உங்கள் கட்சியை கவனியுங்கள். நீங்கள் தான் தவளை. பிஜேபி பாம்பு உங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாதி உள்ள போய்ட்டீங்க.

    தவளையோட கை கால் தான் பாம்போட வாயிலிருந்து வெளியில் நீட்டிக்கிட்டு இருக்கு.

    அதிமுக தலைவர்கள் இப்போது மாறி மாறி டெல்லிக்கு படை எடுக்கிறார்கள். கட்சியின் உள்விவகாரத்தில் அமித்ஷா தலையிடுகிறார்.

    அவருடைய வீடு தான் நீதிமன்றமாக இருக்கிறது. எங்களுக்கு கூட்டணி தா்மம் கிடையாது. மக்கள் தா்மம்தான் உண்டு.

    கூட்டணி வைப்பது மக்களின் நலனுக்காகத் தான். அந்த நலன் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ, அப்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் தட்டிக் கேட்போம்" என்று தெரிவித்தார். 

    • உக்ரைன் மீது ரஷியா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
    • ரஷியாவின் சரடோவ் மற்றும் சமாரா மாகாணங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தது.

    உக்ரைன் மீது ரஷியா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

     உக்ரைனின் விமானப்படை தகவலின்படி, மொத்தம் 619 டிரோன்கள், 8 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 32 குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன.

    உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் இதில் 583 இலக்குகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இதன் மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    அதேவேளை, ரஷியாவின் சமாரா பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இரவில் 149 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில், சமாரா பிராந்தியத்தின் வான்வெளியில் 15 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக நேற்று மதியம், ரஷியாவின் சரடோவ் மற்றும் சமாரா மாகாணங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தது. 

    இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.   

    • அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.
    • அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுகிறது.

    ஈரானில் வேலைவாய்ப்பு தருவதாக நடக்கும் மோசடிகள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

     வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சில ஏஜென்ட்கள் இந்தியர்களுக்கு ஈரானில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வழங்குவதாக அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றனர்.

    இவர்களின் பேச்சுகளை நம்பி ஈரானுக்குச் செல்லும் இந்தியர்கள், அங்குள்ள குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு, பணயக்கைதிகளாக வைக்கப்படுகின்றனர்.

    பின்னர், அவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகையை அந்த கும்பல்கள் கேட்டு மிரட்டுவதாக அரசுக்குத் தெரியவந்துள்ளது.

    சமீபகாலமாக இத்தகைய வழக்குகள் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற போலியான உறுதிமொழிகளை நம்பி ஏமாறாமல் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.  

    • அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை- வங்கதேசம் அணிகள் விளையாடின.

    டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    தசுன் ஷனகா தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினார். அதேவேளையில் 19ஆவது ஓவரில் முஷ்டாபிஷுர் ரஹ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார். தசுன் ஷனகா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் விளாச இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

    தொடர்ந்து 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக சைப் ஹாசன் 61 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
    • அதற்கான ஆதாரங்களை பின்னூட்டங்களாக வழங்கியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

    இதன்போது அலையாத்திக் காடுகளைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடல்சார் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்!

    தவறான தகவல் 1 :

    "மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    உண்மை :

    தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

    அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.

    தவறான தகவல் 2 :

    கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை.

    உண்மை:

    தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

    தவறான தகவல் 3 :

    மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?

    உண்மை :

    சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.

    தவறான தகவல்களைப் பரப்பாதீர்!" என்று தெரிவித்து அதற்கான பத்திரிகை ஆதாரங்களை பின்னூட்டங்களாக வழங்கியுள்ளது. 

    • கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
    • இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    சீனாவின் சிறப்பு அந்தஸ்து மாகாணமான ஹாங் காங்கில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

    குவாரி பே (Quarry Bay) பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கட்டுமானப் பணிகளுக்காக தோண்டிக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஆய்வில், இது 1.5 மீட்டர் நீளமும், 450 கிலோகிராம் எடையும் கொண்ட அமெரிக்க குண்டு என்று கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆண்டி சான் டின்-சு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு என்பதை உறுதி செய்துள்ளோம்.

    இதை செயலிழக்கச் செய்யும் பணி மிகவும் ஆபத்தானது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,900 வீடுகளில் வசிக்கும் சுமார் 6,000 பேரை வெளியேற்றினோம்" என்று தெரிவித்தார்.

    வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் பல மணி நேரம் போராடி குண்டை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்ததால் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

    இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த ஹாங்காங் மீது நேச நாடுகள் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

    அந்தத் தாக்குதல்களில் வெடிக்காமல் பூமியில் புதைந்துபோன குண்டுகள், இன்றும் கட்டுமானப் பணிகளின் போது அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். 2018 ஆம் ஆண்டிலும், வான் சாய் பகுதியில் இதேபோன்ற ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • லண்டன், ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ், பெர்லின் போன்ற முக்கிய விமான நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின.
    • விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மீது இன்று பெரிய அளவிலான சைபர் தாக்குதல்கள் அரங்கேறி உள்ளன. இதனால் பல நாடுகளிலும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த சைபர் தாக்குதல், விமான நிலையங்களின் சேவை வழங்கும் அமைப்புகளை குறிவைத்துள்ளது. குறிப்பாக, பயணிகளின் செக்-இன் மற்றும் போர்டிங் போன்ற முக்கியமான சேவைகளில் முடக்கம் ஏற்பட்டது.

    லண்டன், ஹீத்ரோ, பிரஸ்ஸல்ஸ், பெர்லின் போன்ற முக்கிய விமான நிலையங்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின.

    பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் விமான நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    இந்த சைபர் தாக்குதல் காரணமாக, விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    தொழில்நுட்ப நிபுணர்கள்  பிரச்னையை தீர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே விமான நிலையங்களுக்கு வந்துள்ள பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • நான்கரை ஆண்டுகளில் அதனை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • உருவாக்க முடியவில்லை என்றால் ஏன் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்?

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    கும்பகோணத்தை பிரித்து தனணி மாவட்டமாக உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக.

    ஆனால் நான்கரை ஆண்டுகளில் அதனை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    24X7 திமுக ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் கூட புதிதாக உருவாகவில்லை.

    உருவாக்க முடியவில்லை என்றால் ஏன் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×