என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நான்கரை ஆண்டுகளில் அதனை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • உருவாக்க முடியவில்லை என்றால் ஏன் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்?

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

    கும்பகோணத்தை பிரித்து தனணி மாவட்டமாக உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தது திமுக.

    ஆனால் நான்கரை ஆண்டுகளில் அதனை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    24X7 திமுக ஆட்சி அமைந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம் கூட புதிதாக உருவாகவில்லை.

    உருவாக்க முடியவில்லை என்றால் ஏன் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுகிறீர்கள்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர்.
    • அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை- வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா (22), குசால் மெண்டிஸ் (34) நல்ல தொடக்கம் அமைத்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    தசுன் ஷனகா தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடினார். அதேவேளையில் 19ஆவது ஓவரில் முஷ்டாபிஷுர் ரஹ்மான் 3 விக்கெட் வீழ்த்தினார். தசுன் ஷனகா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ரன்கள் விளாச இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்துள்ளது.

    • 28 சதவீதத்தில் இருந்து 18 ஆகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
    • ஜி.எஸ்.டி. புரட்சியை, பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.

    தமிழ்நாடு தீப்பெட்டித் தொழில் நூற்றாண்டு விழா கோவில்பட்டியில் எஸ்.எஸ்.டி.எம். கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    விழாவுக்கு, நூற்றாண்டு விழாக் குழுத் தலைவர் எஸ்.மகேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எஸ்.எஸ்.டி.கிருஷ்ணமூர்த்தி, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பரமசிவம் தீப்பெட்டி தொழில் கடந்து வந்த பாதை குறித்து விளக்க உரையாற்றினார். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம.எல்.ஏ, கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    விழவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. எம்.பி. இல்லையென்றால் என்ன, அதுவும் பாரத நாட்டின் ஒரு பங்குதான், அங்கும் சிறப்பாக நாம் செயல்பட வேண்டும் என நினைத்து பிரதமர் மோடி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு மீது பிரதமருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம் உள்ளது.

    இந்த விழாவை பிரதமருக்கான பாராட்டு விழாவாக கருதுகிறேன். அவருடைய ஆதரவு இல்லாமல் நாம் எதையுமே செய்திருக்க முடியாது. தென் மாவட்டங்களில் உள்ள பெரிய திட்டங்களுக்கு பிரதமர்தான் காரணம்.

    2047க்குள் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் நமது நாட்டு வர்த்தகத்திற்கு எந்த விதத்தில் பங்காற்ற முடியும் என்பது குறித்து நீங்களே ஒரு வழிவகுத்து, திட்டத்தை தயாரித்து கொடுத்தால், அதற்கு ஏற்ற விதமாக என்னென்ன மத்திய அரசு மூலமாக கொடுக்க முடியும் என்பதற்கான முயற்சியில் நான் முழுமையாக ஈடுபடுவேன்.

    2026இல் உங்களுக்கு எம்.எல்.ஏ.வோ, 2029-இல் எம்.பி.யோ உங்கள் கஷ்டத்தை புரிந்து வேலை செய்யக் கூடிய கடம்பூர் ராஜு மாதிரியானவர்களை தேர்ந்தெடுங்கள்.

    பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர், தென் மாவட்டங்களை இணைத்து, எதிர்காலத்தில் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு தேவையான தொலைநோக்கு திட்ட அறிக்கை தயாரித்து கொடுத்தால் , 2047க்கு முன்னர் நல்ல திட்டங்கள் மூலம் இந்த மாவட்டங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோம்.

    இந்த முறை ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தங்கள் செய்யப்படவில்லை, புரட்சி செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பெரிய மாற்றத்தை எடுத்து வந்திருக்கிறோம். 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது. 10 சதவீதம் குறைத்துள்ளோம்.

    28 சதவீதத்தில் இருந்து 18 ஆகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரக்கூடிய ஆதாயம் என்பது மக்களுக்கான ஜிஎஸ்டி சேமிப்பு என்பதுதான். ஜி.எஸ்.டி. வரிக்குறைப் பினால் கிடைக்கும் சேமிப்பை உங்கள் குடும்ப நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    ஜி.எஸ்.டி. புரட்சியை, பிரதமர் மோடி மக்களுக்கு தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார். நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு எல்லாரும் வழிவகுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நடிகர் மோகன் லால்-க்கு என்று மத்திய அசு அறிவித்துள்ளது.
    • 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

    மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருது வரும் 23ம் தேதி அன்று மோகன் லால்-க்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அசு அறிவித்துள்ளது.

    அதாவது, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் மோகன் லால்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிரு*

    திறமை மற்றும் நடிப்பு பன்முகத்தன்மையின் சின்னம் மோகன்லால். பல தசாப்தங்களாக நீடித்த தனித்துவமான கலை வாழ்க்கையைக் கொண்ட அவர், மலையாள சினிமா மற்றும் நாடகத்துறையில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்,

    மேலும், கேரள கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் சிறந்து விளங்கியுள்ளார். திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்களில் அவரது திறமை உண்மையான உத்வேகம் அளிக்கிறது.

    தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஸ்மிரிதி மந்தனா 125 ரன் விளாசினார்.
    • ஒரு கட்டத்தில் 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். மறுமுனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.

    தொடர்ந்து விளையாடி ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மிரிதி மந்தனா 125 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தீப்தி ஷர்மா நேர்த்தியாக விளையாடினார். அதன்பின் வந்த ரிச்சா கோஷ் (6), ராதா யாதவ் (18), அருந்ததி ரெட்டி (10) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் இந்தியா 289 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மா உடன், ஷே்னே ராணா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நம்பிக்கையுடன் விளையாடியது. இதனால் இந்தியா இலக்கை நோக்கி முன்னேறியது. இந்தியா 42.2 ஓவரில் 354 ரன்கள் எடுத்திருந்தது. 46 பந்தில் 59 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 42.3 ஆவது ஓவரில் தீப்தி ஷர்மா 58 பந்தில் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இந்தியாவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. ராணா 46ஆவது ஓவரில் 35 ரன்னில் ஆட்டமிழக்க, இந்தியா 47 ஓவரில் 369 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது, இதனால் ஆஸ்திரேலியா 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக்கைப்பற்றியது.

    • நான் ராஜமவுலி இயக்கம் முதல் கொண்டு நடித்து பாத்திட்டனுங்க.
    • இவருகிட்ட (தனுஷ்) நடிப்பது ரொம்ப சிரமமுங்க.

    தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.

    இன்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சத்யராஜ், கோவை பாஷையில் பேசி அசத்தினார்.

    அவர் தனுஷ் மற்றும் இட்லி கடை படம் குறித்து கூறியதாவது:-

    நான் ராஜமவுலி இயக்கம் முதல் கொண்டு நடித்து பாத்திட்டனுங்க. இவருகிட்ட நடிப்பது ரொம்ப சிரமமுங்க. இப்படித்தான் நடிக்கனும். இந்த பக்கம், அந்த பக்கம் நகர முடியாதுங்க. ஆனா ஒன்னும் மட்டும் தெரியுதுங்க. இட்லி கடை பட்டைய கௌப்ப போதுங்க. இது கண்டிப்பாக தெரியுதுங்க.

    சமீப காலத்தில் எத்தனை டிரைலர் பாத்திருக்கோம்ங்க. எல்லாம் டமால் டுமில்தான் என இருந்திருக்கும்ங்க. ஒரு டைரக்டர் சிரிக்க வேண்டும்னு காட்சி வச்சா சிரிக்கனும்ங்க. அழுகனும்னு காட்சி வச்சா, அழுகனும்ங்க. எகிறி அடிக்கனும்போது கைதட்டனும்னா தட்டனும்ங்க. அதற்கு பெயர்தான் சினிமா. அதுதான் இட்லி கடைங்க..

    இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

    • மலேசிய ஜோடியை நேர்செட் கேமில் வீழ்த்தியது.
    • மலேசிய ஜோடி 11-5 என சாத்விக்-சிராக் ஜோடிக்கு எதிராக வலுவான ரெக்கார்டு வைத்துள்ளது.

    சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி மலேசியாவின் ஆரோன் சியா- ஷோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 21-17, 21-14 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    மலேசிய ஜோடி முன்னாள் உலக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது. இந்திய ஜோடிக்கு எதிராக 15 போட்டிகளில் 11 முறை வெற்றி பெற்றுள்ளது. எனினும் இன்றைய போட்டியில் இந்திய ஜோடியிடம் தோல்வியடைந்தது.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொரிய ஜோடியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னதாக இந்திய ஜோடி ஹாங் காங் ஓபனில் 2ஆவது இடம் பிடிததது.

    • பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது.
    • திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

    நம் பயணம் நீண்டது, தமிழ்நாட்டை தலைகுனிய விடாமல் இலக்கை நோக்கி விரைவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் முதலமைச்சர் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தை குறிவைத்து பாஜக செய்பவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் திமுகவை டார்கெட் செய்கின்றனர்.

    பாஜக நேரடியாக நுழைய முடியாததால் அதிமுகவுடன் சேர்ந்து என்னென்ன செய்கிறது என கரூர் மாநாட்டிலேயே எடுத்து சொன்னேன்.

    தொகுதி மறுவரையறை, கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என லிஸ்ட் நீள்கிறது.

    அவர்களின் கூட்டணிக்குள் பல குழப்பம் இருந்தபோதிலும் திமுக ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்பதில் குறியாக உள்ளனர்.

    பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் நிறைய பேர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையாக எதிர்ப்பது திமுக தான்.

    அனுபவம், வலிமை, கொள்கைகளோடு பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிற்கு மட்டும்தான் உள்ளது.

    திமுக ஆட்சி தொடர்ந்தால் தான் தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்க முடியும். ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை முன்னெடுப்பில் ஒருகோடிக்கும் அதிகமான குடும்பங்கள் திமுகவில் இணைத்துள்ளனர்.

    இந்த 100 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள உயரம் என்பது ஒரு குழந்தை நடைபழகுவது போலதான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிக அளவிலான திறமை கொண்ட பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதை உறுதி செய்யும்.
    • எங்களுக்கு பணியார்கள் தேவை. எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், H-1B விசாவுக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளார். 1 லட்சம் அமெரிக்க டாலர் (ரூபாயில் சுமார் 88 லட்சம்) உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்தில் "அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் குடும்பங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் வழியாக மனிதாபிமான விளைவுகள் ஏற்படலாம். அமெரிக்க அதிபர்கள் இதை கருத்தில் கொள்வார்கள்" எனத் தெரிவித்துள்ளது.

    இந்த நடவடிக்கை தொடர்பாக டிரம்ப் கூறுகையில் "அதிக அளவிலான திறமை கொண்ட பணியாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதையும், அமெரிக்க பணியாளர்கள் மாற்றம் இல்லை (Replace) என்பதை உறுதி செய்யும். எங்களுக்கு பணியார்கள் தேவை. எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை. இதுதான் நடக்கப்போகிறது என்பதை இது மிகவும் இறுதி செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    • 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.
    • சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று இரண்டாம் கட்ட பிரசாரமாக நாகையை தொடர்ந்து, திருவாரூரில் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர்," தமிழக வெற்றிக் கழகத்தில் பொய் வாக்குறுதிக்கு இடமில்லை" என்றார்.

    மேலும், விஜய் பேசியதாவது:-

    கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்க ரூ.40 கமிஷன் வாங்குவதாக திருவாரூர் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.

    கமிஷன் விவகாரத்தை வேறு யாரும் சொல்லியிருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன், இதனை கூறியதே விவசாயிகள் தான்.

    உங்களுக்கு வேண்டுமென்றால் 40-க்கு 40 என்றால் வெற்றி, டெல்டா விவசாயிகளுக்கு நீங்கள் வயிற்றில் அடித்த ரூ.40 கமிஷன் தான்.

    விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.

    டெல்டா பகுதியில் 40-க்கு 40 என்பது விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெற்ற கமிஷன், இதற்கு சிஎம் சாரின் பதில் என்ன?

    எது நடைமுறைக்கு சாத்தியமோ எதை உண்மையாக செய்ய முடியுமோ அதைதான் வாக்குறுதியாக தவெக தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 28 பந்தில் அரைசதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
    • ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 2ஆவது பேட்டர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    அத்துடன் 13 சதங்களுடன், பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசி பேட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

    படத்தின் டிரெய்லரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

    அதன்படி, கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இட்லி கடை படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

    ×