என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.
    • சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று இரண்டாம் கட்ட பிரசாரமாக நாகையை தொடர்ந்து, திருவாரூரில் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர்," தமிழக வெற்றிக் கழகத்தில் பொய் வாக்குறுதிக்கு இடமில்லை" என்றார்.

    மேலும், விஜய் பேசியதாவது:-

    கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்க ரூ.40 கமிஷன் வாங்குவதாக திருவாரூர் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    ஒரு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் கமிஷன். 4 ஆண்டுகளில் டெல்டா விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் புடுங்கி உள்ளனர்.

    கமிஷன் விவகாரத்தை வேறு யாரும் சொல்லியிருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன், இதனை கூறியதே விவசாயிகள் தான்.

    உங்களுக்கு வேண்டுமென்றால் 40-க்கு 40 என்றால் வெற்றி, டெல்டா விவசாயிகளுக்கு நீங்கள் வயிற்றில் அடித்த ரூ.40 கமிஷன் தான்.

    விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். சிஎம் சார் கமிஷன் விஷயம் உங்கள் ஆட்சியில் தான் நடந்துள்ளது.

    டெல்டா பகுதியில் 40-க்கு 40 என்பது விவசாயிகளின் வயிற்றில் அடித்து பெற்ற கமிஷன், இதற்கு சிஎம் சாரின் பதில் என்ன?

    எது நடைமுறைக்கு சாத்தியமோ எதை உண்மையாக செய்ய முடியுமோ அதைதான் வாக்குறுதியாக தவெக தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 28 பந்தில் அரைசதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
    • ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

    தொடக்க பேட்டர்களாக பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். ராவல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹல்ரின் தியோல் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக ஸ்மிரிதி மந்தனா புயல் வேகத்தில் ஆடினார். 28 பந்தில் அரைசதம் அடித்த அவர், 50 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.

    இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், சர்வதேச அளவில் 2ஆவது பேட்டர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலியாவின் லேனிங் 2012ஆம் ஆண்டு 45 பந்தில் சதம் அடித்திருந்தார்.

    அத்துடன் 13 சதங்களுடன், பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசி பேட்ஸ் சாதனையை சமன் செய்துள்ளார்.

    இட்லி கடை படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.

    தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

    படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

    படத்தின் டிரெய்லரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

    அதன்படி, கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இட்லி கடை படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

    • நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள்.
    • அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர்.

    திருவாரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-

    கேள்வி கேட்கிறான் என்று நினைக்கிறாதீர்கள். தீர்வை நோக்கி போவதுதான் தவெக-வின் லட்சியம். தேர்தல் அறிக்கையில் அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுப்போம். பொய்யான தேர்தல் அறிக்கைய கொடுக்கமாட்டோம். எது நடைமுறைக்கு சாத்தியமோ, அதை மட்டுமே சொல்வோம். எது உண்மையோ அதை மட்டுமே சொல்வோம். செய்வோம்.

    ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்கள் ஆட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி இதுதான் த.வெ.க.வின் மிஷன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    மேலும், நண்பா.., ஒரு டவுட்டு. எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம். ஓட்டு போடமாட்டாங்க என சொல்கிறார்கள். அப்படியா? என தொண்டர்கள் பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது தொண்டர்கள் அப்படி இல்லை என ஆர்ப்பரித்தனர். இது என்ன சும்மா கூட்டமா? தொண்டர்கள் TVK TVK என கரகோஷம் எழுப்ப கோடான கோடி நன்றிகள் எனத் தெரிவித்தார்.

    • உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்னு உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும்.
    • மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விஜய் பேசியதாவது:-

    இந்த மாவட்டத்தில் மந்திரி ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னத் தெரியுமா?. முதலமைச்சர் குடும்பத்திற்கு வேலை செய்வது. அதுதான் அவருடைய வேலை. மக்கள்தான் முக்கியம் என அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

    உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும். மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே. இதை நான் சொல்லல. வார பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. அதான் நான் திரும்ப சொல்கிறேன்.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    • நடிகர் மோகன் லால்-க்கு என்று மத்திய அசு அறிவித்துள்ளது.
    • 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

    மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உயரிய விருது வரும் 23ம் தேதி அன்று மோகன் லால்-க்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அசு அறிவித்துள்ளது.

    அதாவது, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

    • தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.
    • உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார்.

    திருவாரூில் பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் விவசாயிகளை ஆதரிக்கும் விதமாக தோளில் பச்சை துண்டு அணிந்து வந்தார்.

    அதன்பிறகு, தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய்," திருவாரூர் தியாகராஜன் கோவில், திருவாரூர் தேர் தான் நியாபகம் வரும், திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம் என்றார்.

    இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-

    நீண்ட நாள் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை இயக்கியது நான் தான் என பெருமை தட்டியவர் யார் என உங்களுக்கு தெரியும்.

    ரொம்ப நாளா ஓடாம இருந்த தேரை ஓடவைத்ததாக மார்தட்டிக் கொள்கிறார். அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறார்.

    அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விமாமல் செய்கிறது.

    திருவாரூர் மாவட்டம் தங்களின் சொந்த மாவட்டம் என சொல்லிக் கொள்பவர் கருவாடாக காய்வதை கண்டு கொள்ளவில்லை.

    எல்லா இடத்திற்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீர்கள், உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூரில் ஒரு அடிப்படை சாலை வசதி இல்லை.

    உங்கள் அப்பா வாழ்ந்த திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சாலை வசதி கூட இல்லையே சார். திருவாரூரில் உள்ள மெடிக்கல் கல்லூரி தான் வைத்தியம் பார்க்கும் நிலையைில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெத் மூனி 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 68 ரன்களும் அடித்தனர்.
    • இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி 8.5 ஓவரில் 86 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 3ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 412 ரன்கள் குவித்தது. பெத் மூனி 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 68 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி சார்பில் அருந்ததி ரெட்டி 8.5 ஓவரில் 86 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ரேனுகா சிங் 9 ஓவரில் 79 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 413 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரதிகா ராவல் 10 ரன்னில் வெளியேறினார்.

    • 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சராசரியாக 8.9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம்.
    • அதிமுக ஆட்சியை விட தற்போது இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம்.

    11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சிக்கு திராவிட மாடல் ஆட்சி தான் சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், கல்வி, மருத்துவத்தரம், உள்கட்டமைப்பு, சட்டம், ஒழுங்கு என அனைத்தையும் எடுத்துக்காட்டுவது தான் பொருளாதார வளர்ச்சி.

    பலதுறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனிபர் வருமானம், மக்களின் வாழ்க்கை தரம், வாங்கும் திறனை எடுத்துக்காட்டுவது ஜிடிபி.

    4 ஆண்டுகால திமுக ஆட்சியில் சராசரியாக 8.9 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம்.

    கொரோனா பாதிப்பு, மத்திய அரசு நிதி வழங்க மறுத்தும் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதா வளர்ச்சி.

    அதிமுக ஆட்சியை விட தற்போது இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளோம்" என்றார்.

    • ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான்.
    • அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாகபோவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

    ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

    எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர் தேவர்கள். மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ்என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வ அலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.

    அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள் அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவி மணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

    இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது.

    • நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளம்பினார்.
    • திருவாரூரில் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இன்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது.

    இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிராரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் போலவே நாகப்பட்டினத்திலும் ரசிகர்கள், தொண்டர்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு விஜய் திருவாரூர் கிளப்பிய விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    இந்நிலையில், திருவாரூரில் விஜய் பரப்புரை செய்யவுள்ள பகுதியில் கோவில் கோபுரத்தின் மீது தவெகவினர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தவெகவிரை கோயில் கோபுரத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    • வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.
    • குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால்.., என விஜய் பேச்சு.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது " CM சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா.. * குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு என்றால் சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

    வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்துள்ளாரா? என தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.ஆர்.பி. ராஜா "கண்டது கழியது பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ஆரோக்கியமான கேள்விகளை கேளுங்கள்" என பதில் அளித்தார்.

    ×