என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும்: திருவாரூரில் விஜய் பேச்சு
- உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்னு உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும்.
- மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, விஜய் பேசியதாவது:-
இந்த மாவட்டத்தில் மந்திரி ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னத் தெரியுமா?. முதலமைச்சர் குடும்பத்திற்கு வேலை செய்வது. அதுதான் அவருடைய வேலை. மக்கள்தான் முக்கியம் என அவருக்கு புரிய வைக்க வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களுடைய குடும்பத்திற்கு மட்டும்தான் சொல்லிக்கிடனும். மக்களிடம் அதை சொல்லவே முடியாது. ஏனென்றால், நீங்கள்தான் மக்களுடன் இல்லையே. இதை நான் சொல்லல. வார பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. அதான் நான் திரும்ப சொல்கிறேன்.
இவ்வாறு விஜய் பேசினார்.
Next Story






