என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலையாத்தி மரங்கள்"

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
    • அதற்கான ஆதாரங்களை பின்னூட்டங்களாக வழங்கியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

    இதன்போது அலையாத்திக் காடுகளைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடல்சார் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

    தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்!

    தவறான தகவல் 1 :

    "மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    உண்மை :

    தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

    அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90 சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன.

    தவறான தகவல் 2 :

    கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை.

    உண்மை:

    தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது.

    தவறான தகவல் 3 :

    மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?

    உண்மை :

    சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.

    தவறான தகவல்களைப் பரப்பாதீர்!" என்று தெரிவித்து அதற்கான பத்திரிகை ஆதாரங்களை பின்னூட்டங்களாக வழங்கியுள்ளது. 

    • சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.
    • தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    அலையாத்தி காடுகள் கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்புநிலங்களிலும், நதி முகத்துவாரங்களிலும், உவர் நீரிலும் வளரும் தாவரங்கள் ஆகும். இவை காடுகளை மட்டுமல்லாமல் மனிதர்கள் வாழும் நிலப்பரப்பையும் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

    சுனாமி மற்றும் இயற்கை சீற்றத்தின் போது தண்ணீர் மற்றும் அலையின் வேகத்தை குறைப்பதில் இதன் பங்கு அளப்பரியது.

    இதற்கு முன்பு மெரினா-பெசன்ட் நகர் இடையே அடையாறு ஆற்று கரையோரத்தில் அலையாத்தி காடுகள் இருந்து உள்ளன. தற்போது இல்லை. கொசஸ்தலை ஆற்றின் முகத்துவார பகுதிகளில் அலையாத்தி தாவரங்கள் சுமார் 9 அடி வரை உள்ளன. எண்ணெய் கசிவால் இந்த அலையாத்தி மரங்களில் சுமார் 3 அடி உயரத்திற்கு எண்ணெய் படர்ந்து இருந்தது.

    இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறும்போது, எண்ணெய் கசிவு காரணமாக கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் உள்ள அலையாத்தி காடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. சுமார் 3 அடி உயரத்திற்கு இந்த தாவரங்களில் எண்ணெய் படந்து உள்ளது. இந்த பாதிப்பில் இருந்து இந்த மரங்கள் எப்படி மீளும் என்று தெரியவில்லை. அங்குள்ள விலங்குகளும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிச்சாரவத்தில் உள்ள அலையாத்தி காடுகளை போல் இங்குள்ள அலையாத்தி காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

    இங்கு தனியார் துறைமுகம் வர உள்ளதா?அல்லது தொழிற்சாலைகள் தான் முக்கியமானதா? என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

    பிச்சாவரத்தை போல் அலையாத்தி காடுகளை பாதுகாக்க அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி பாதுகாத்தால் தான் அடுத்துவரும் பாதிப்பு களில் இருந்து தற்காத்து கொள்ளமுடியும். இதனை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றார்.

    ×