என் மலர்

  நீங்கள் தேடியது "Asian Cup"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய அணியில் பங்கேற்ற கோவில்பட்டி ஆக்கி வீரர்களுக்கு பாராட்டு விழா கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா சார்பில் நடைபெற்றது.
  • நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

  கோவில்பட்டி:

  இந்தோனேசியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இதில் கோவில்பட்டி வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் மற்றும் கார்த்தி செல்வம் ஆகிய இருவரும் இந்திய அணிக்காக விளையாடினர்.

  அவர்களை கவுரவிக்கும் வகையில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பில் பள்ளித் தாளாளர் நாகமுத்து தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மூத்த துணைத்தலைவர் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

  பள்ளி முதல்வர் மலர்க்கொடி வரவேற்று பேசினார். பள்ளி சார்பில் மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் செல்வம், ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

  இருவரையும் பாராட்டி பள்ளி தாளாளர் நாகமுத்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார். பள்ளி மாணவர்களுடன் சர்வதேச வீரர்கள் இருவரும் கலந்துரையாடி தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

  கலந்து கொண்டவர்கள்

  நிகழ்ச்சியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குருசித்ர சண்முகபாரதி, காளிமுத்து, பாண்டியராஜா,

  உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்திரன், ஜெய்கணேஷ், முருகன், சந்தனராஜ், வேல்முருகன், உதயராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனிடம் தோல்வி கண்டு வெளியேறியதை தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்துள்ளார். #StephenConstantine
  ஷார்ஜா:

  17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பக்ரைன் அணி வீரர் ஜமால் ரஷித் வெற்றிக்கான கோலை அடித்தார்.

  முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வென்று இருந்தது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வி அடைந்தது. 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

  இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்ததும், இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளரான 56 வயது ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  கடைசி லீக் ஆட்டம் முடிந்ததுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து நான் விலகி விட்டேன். நான் இந்திய அணியினருடன் கடந்த 4 வருடங்களாக இருந்து வருகிறேன். எனது நோக்கம் இந்திய அணியை ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற வைப்பது தான். அதனை நான் செய்து காட்டினேன். மேலும் சில சாதனைகளை நாங்கள் படைத்தோம். வீரர்கள் அனைவரும் எனக்கு அளித்த ஒத்துழைப்பை நினைத்து பெருமை அடைகிறேன். எனது சுழற்சி முடிந்து விட்டது. அணியில் இருந்து விடைபெறுவதற்கு இது சரியான தருணம் என்று நினைக்கிறேன். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது வருத்தம் அளிக்கிறது. இனிமேல் எனது குடும்பத்தினருடன் அதிகநேரத்தை செலவிட விரும்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  2-வது முறையாக 2015-ம் ஆண்டில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஸ்டீவன் கான்ஸ்டன்டைனின் பதவி காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிய இருந்தது. கான்ஸ்டன்டைன் பயிற்சியில் இந்திய அணி தரவரிசையில் 96-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

  இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியை கான்ஸ்டன்டைன் ராஜினாமா செய்து இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், அவரது பங்களிப்புக்கு நன்றி தெரிப்பதாகவும் அகில இந்திய கால்பந்து சங்க பொதுச்செயலாளர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார். #StephenConstantine  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அம்பயரின் மோசமான முடிவு குறித்து எம்எஸ் டோனி கருத்து தெரிவித்துள்ளார். #AsianCup2018 #INDvAFG #MSDhoni
  துபாய்:

  ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

  முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்தது. தொடக்க வீரர் முகமது ‌ஷசாத் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, தீபக் சாஹர், கேதர் ஜாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 253 ரன் இலக்குடன் இந்தியா விளையாடியது.

  தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். ராகுல் 60 ரன்னும், அம்பதி ராயுடு 57 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 3-வது வீரராக களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 44 ரன் எடுத்தார். விக்கெட்டுகள் சரிந்ததால் இந்தியா மோசமான நிலைக்கு சென்றது. 205 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. ஜடேஜா அணியை காப்பாற்ற போராடினார். 49-வது ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டை பறிகொடுத்தது.

  ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. ரஷீத்கான் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ரன் எடுக்காத ஜடேஜா 2-வது பந்தில் பவுண்டரி அடித்தார். 3-வது மற்றும் 4-வது பந்தில் தலா 1 ரன் கிடைத்தது.

  இதனால் ஸ்கோர் சமநிலை ஏற்பட்டது. வெற்றிக்கு 1 ரன் தேவை. 2 பந்து எஞ்சி இருந்தது. 5-வது பந்தில் ஜடேஜா ஆட்டம் இழந்தார். இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.  இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. ஜடேஜா 25 ரன் எடுத்தார். அப்தாப் ஆலம், ரஷீத்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டும், ஜாவித், அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  ஆப்கானிஸ்தானுடன் மோதிய ஆட்டம் ‘டை’யில் முடிந்தது குறித்து டோனி கூறியதாவது:-

  நாங்கள் தோல்வியின் நிலையில் இருந்ததால் ஆட்டம் ‘டை’ ஆனது மோசமில்லை. 5 முதல் 6 ஓவர்களில் எங்களது பேட்டிங் நுணுக்கம் சரியில்லாமல் போனது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு மெய்சிலிர்க்க வைத்தது. ரன்அவுட்டும் பாதிப்பை ஏற்படுத்தியது.

  ஆடுகளத்தில் நடந்த சில சம்பவங்களை நான் பேச விரும்பவில்லை. ஏனென்றால் நான் அபராதத்தை சந்திக்க விருப்பமில்லை.

  இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

  இந்த ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. டோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிவியூ தீர்ந்துவிட்டதால் டி.ஆர்.எஸ். முறையை நாட முடியாமல் போனது. #AsianCup2018 #INDvAFG #MSDhoni
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணியின் பகுதி நேர பந்து வீச்சாளரான கேதர் ஜாதவை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். #AsianCup2018 #SunilGavaskar #KedarJadhav
  ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அவரை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-

  கேதர் ஜாதவ் ஆல்-ரவுண்டராக திகழ்வதை செய்து காட்டினார்.

  அவரது பந்துவீச்சை எதிரணியினர் கணிக்க சிரமப்படுகின்றன. அவர் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார். முதன்மை பந்து வீச்சாளர்கள் சிரமப்படும் போது கேப்டனுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கேதர் ஜாதவ் உள்ளார். அவரை ஆல்-ரவுண்டராக பயன்படுத்த வேண்டும் என்றார். #AsianCup2018 #SunilGavaskar #KedarJadhav
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி, அனுபவமற்ற ஆங்காங் அணியை இன்று எதிர்கொள்கிறது. #PAKvHK #AsiaCup2018
  துபாய்:

  இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 137 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்திடம் படுதோல்வி அடைந்தது.

  ஆசிய கோப்பை போட்டியின் 2-வது ‘லீக்’ ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இதில் சர்ப்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் - அன்சூமான் ராத் தலைமையிலான ஆங்காங் அணிகள் மோதுகின்றன.

  வலுவான பாகிஸ்தானை சந்திப்பது அனுபவமற்ற ஆங்காங்குக்கு சவாலானதே. பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #PAKvHK #AsiaCup2018
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. #AsiaCup2018
  புதுடெல்லி:

  6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.

  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன. இப்போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் இந்தியா செப்டம்பர் 18-ந் தேதி தகுதி சுற்று அணியையும், மறுநாள் செப்டம்பர் 19-ந் தேதி பாகிஸ்தானையும் எதிர் கொள்கிறது.

  இந்தியாவுக்கு தொடர்ந்து 2 நாட்கள் விளையாட்டு போட்டி அட்டவணை உள்ளது. இதற்கு முன்னணி தொடக்க வீரர் ஷேவாக் கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறுகையில்,

  இந்திய அணி முதல் ஆட்டத்தில் விளையாடி விட்டு அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதும் படி அட்டவணை உள்ளது.

  ஓய்வு இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் விளையாடுவது கடினம். இதனால் அட்டவணையை மாற்ற வேண்டும். இல்லை யென்றால் இந்தியா ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தினார்.

  இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும் ஆசிய கோப்பை போட்டி அட்டவணைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

  ஆசிய கோப்பை போட்டி அட்டவணை முட்டாள் தனமாக இருக்கிறது. இதை பார்க்கும் போது மூளையை கூட பயன்படுத்தவில்லை என்பது போல் தெரிகிறது. பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் விளையாடி விட்டு 2 நாட்களுக்கு பிறகு இந்தியாவுடன் மோதுகிறது. ஆனால் இந்தியா அடுத்தடுத்து 2 நாட்கள் விளையாடுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும்? இந்த போட்டி அட்டவணை ஏற்று கொள்ள முடியாதபடி உள்ளது. மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

  போட்டியை நடத்துபவர்களுக்கு இது பணம் கிடைக்கும் போட்டியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு போட்டி அட்டவணையில் சமநிலை இருக்க வேண்டும் என்றார். #AsiaCup2018
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. #WomensCricket #AsiaCup #India
  கோலாலம்பூர்:

  ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது.

  இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

  இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொண்டது.

  முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுத்தது. மோனா மேஸ்ரம் 32 ரன்னும், கம்ரிதா மந்தனா 29 ரன்னும் கேப்டன் கவூர் 17 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர்.

  பின்னர் விளையாடிய தாய்லாந்து அணியால் இந்திய வீராங்கனைகளின் நேர்த்தியான பந்து வீச்சால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 66 ரன்னே எடுக்க முடிந்தது.

  இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா பெற்ற 2-வது வெற்றியாகும்.

  கவூர் 3 விக்கெட்டும், தீபதி சர்மா 2 விக்கெட்டும், பூஜா, பூமை யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இலங்கை- மலேசியா மோதும் ஆட்டம் பிற்பகலில் நடக்கிறது.

  இந்திய அணி 3-வது ஆட்டத்தில் வங்காள தேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. நாளை ஒய்வு நாளாகும்.#WomensCricket #AsiaCup #India
  ×