என் மலர்
கிரிக்கெட் (Cricket)

VIDEO: பாகிஸ்தான் வீரர் வீசிய பந்து தலையில் பட்டு வலியால் துடித்த அம்பயர்
- குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
- செப்டம்பர் 21 அன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங் செய்துகொண்டிருக்கும் போது பாகிஸ்தான் வீரர் வீசிய பந்து மைதான நடுவர் ருசிரா பல்லியகுருகேவின் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது .
இதனை பார்த்து அதிர்ச்சியைடந்த பாகிஸ்தான் வீரர்கள் நடுவருக்கு உதவி தங்கள் அணியின் பிசியோவை அழைத்தனர். பின்னர் சிறுது நேர தாமதத்திற்கு பின்னர் அவருக்குப் பதிலாக ரிசர்வ் நடுவர் வந்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.






