என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.
- டெலிகிராம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளது
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது.
நேபாள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 28 முதல் சமூக ஊடக நிறுவனங்கள் பதிவு செய்ய ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்தபோதும், மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்), ஆல்பாபெட் (யூடியூப்), எக்ஸ் (ட்விட்டர்), ரெடிட் மற்றும் லிங்க்ட்இன் உள்ளிட்ட முக்கிய தளங்கள் எதுவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே பதிவு செய்யப்படாத தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் பரவுவதை தடுக்க, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதாகக் கூறி இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் காத்மாண்டுவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக நேபாள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்ததால் தலைநகர் காத்மாண்டுவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற தங்கபூவே பாடலின் வீடியோவை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறது.
- ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
- ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டி.ஜி.பி. அலுவலக வாயிலில் வைத்து, வி.சி.க. கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.க. ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது தி.மு.க. அரசின் காவல்துறை.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 2006-2011 ஆட்சிக்காலத்தைவிட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காலையில் தங்கம் விலை சற்று குறைந்தது.
- தற்போது தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்று இரண்டாவது முறையாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. வார தொடக்கநாளான இன்று காலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து காலையில் விலை குறைந்த நிலையில் தற்போது விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.10, 060-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.80,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் வழக்கம்போல் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது நடுத்தர மக்கள் மற்றும் நகை பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஆதரித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
- உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்வதற்காக இந்தியா மீது அமெரிக்காவி 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது.
இந்நிலையில், இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பை ஆதரித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார்.
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது குறித்த கேள்விக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்," ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என நினைக்கும் நாடுகள் அவர்களுடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும்" என்றார்.
- அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்தது.
- ரஷியா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது.
எண்ணையை இந்தியா வாங்குதன் மூலம் அந்த நிதியை உன்ரைன் போரில் ரஷிய அதிபர் புதின் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை கூறி இந்த கூடுதல் வரியை விதித்துள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் முதலில் விதித்த 25 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் கடந்த மாத இறுதியில் கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பும் அமலுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கும் என தெரிவித்தது.
இந்தநிலையில் இந்தியா மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியதாவது:-
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகளுக்கு மேலும் வரிகளை விதித்தால் ரஷிய பொருளாதாரம் சரிந்துவிடும். அதிபர் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்சும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உச்சுலா வானுடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
உச்சுலா என்னையும் தொடர்பு கொண்டு ரஷியா மீது அழுத்தம் கொடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்தார். ரஷியா மீது அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும்.
உக்ரைன் ராணுவம் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? ரஷிய பொருளாதாரம் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? என்ற போட்டிதான் இப்போது இருக்கிறது. அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேலும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். குறிப்பாக ரஷிய கச்சா எண்ணை வாங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க வேண்டும். அப்படி வரிகள் விதிக்கும்போது ரஷிய பொருளாதாரம் முற்றிலும் சரிந்துவிடும். அதுதான் ரஷிய அதிபர் புதினை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அமைச்சர் ஸ்காட் பெசென்டின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் இந்தியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் ரஷியாவிடம் இருந்து தற்போது இந்தியாவும், சீனாவும் தான் அதிகளவில் கச்சா எண்ணை வாங்கி வருகிறது.
ஒரு வேளை அமெரிக்கா மேலும் கூடுதல் வரி விதித்தால் அது இந்தியாவுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனுடான போர் தொடர்பாக அமெரிக்கா சமரச பேச்சு வார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது நேற்று ரஷியா நடத்திய கடும் வான்வழி தாக்குதல் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தி உள்ளது. இதனால் ரஷியா மீது 2-ம் கட்டமாக பொருளாதார தடை தயாராக இருப்பதாக டிரம்ப் சூசகமாக தெரிவித்து இருக்கிறார். இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
- ஒப்போ F31 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட்டால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 7000 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் வருகிற 15ஆம் தேதி இந்தியாவில் F31 சிரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போன்கள் "Durable Champion" என்ற டேக்-லைன் கொண்டுள்ளன. மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் கோல்டு அல்லது ஷாம்பெயின் நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
மற்றொரு ஸ்மார்ட்போன் டீப் புளூ நிறத்தில் உள்ளது. மேலும் ரிஃப்ளெக்டிவ் அல்லது டெக்ஸ்ச்சர்டு பேக் பேனல் கொண்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் பின்புறம் மற்றும் வட்ட வடிவிலான கேமரா மாட்யூல் டிசைன் உள்ளது. இவை F31 Pro மற்றும் F31 Pro+ ஆக இருக்கலாம்.
முந்தைய தகவல்களின் அடிப்படையில் புதிய F31 சீரிசில் F31, F31 Pro மற்றும் F31 Pro+ ஆகியவை இருக்கும். இவற்றில் ஒப்போ F31 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட்டால் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 7000 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
புதிய F31 Pro மாடலில் டிமென்சிட்டி 7300 பிராசஸர், 7000 mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. ஒப்போ F31 Pro+ மாடில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், 12GB ரேம், 256GB மெமரி, 7,000mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- பலமுறை டி.டி.வி. தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
- தி.மு.க.வுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும்.
நெல்லை:
நெல்லையில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களை தனது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நிறைய கிரகணங்கள் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் வேண்டும், கிரகணம் விரைவில் நடைபெறும். அகில இந்திய தலைமை என்ன கூறுகிறதோ, அதைத்தான் நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.
அ.தி.மு.க. கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது. தி.மு.க.வுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அ.தி.மு.க. கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
டெல்லி தலைமையோடு பேசி அனைவரையும் ஒன்றிணைக்க ஒரு முடிவு எடுக்கப்படும். தோல்வியையே பிறருக்கு கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். போல. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு தோல்வியைத் வழங்குவோம்.
2001-ல் நடந்த தேர்தலில் என் போன்றவர்கள் மேலே வந்ததில் டி.டி.வி. தினகரனுக்கு முக்கிய பங்கு உண்டு. 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. ஒரு கூட்டணியாக இருந்தது. அப்பொழுது டி.டி.வி. தினகரன் கூட்டணியில் இல்லை. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார்.
2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணியோடு இருந்து போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றோம்.
பாட்டாளி மக்கள் கட்சியும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தது. தொடர்ந்து எங்களோடு இருப்பார்கள் என்று பலமுறை கூறியிருக்கிறேன்.
பலமுறை டி.டி.வி. தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார் தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால் தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம். நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு விளங்கவில்லை.
கொளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளோம். விரைவில் அதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் சுதந்திர போராட்டத்திற்காக போராடிய நபர். சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவரும் தற்போது ஜாதி தலைவராக மாற்றப்பட்டு விட்டார்கள். இப்போது அந்த சர்ச்சை வேண்டாம். ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது செங்கோட்டையனை பா.ஜ.க.வுக்கு அழைப்பது நாகரீகமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்ற தகவல் அண்மையில் வெளியானது.
சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் திரிஷா நடிகர் கமல்ஹாசனை பற்றி கூறீயது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கமலை பார்த்து " எப்படி சார் இத்தனை வருடங்களும் அதே ஹாட்டாக கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிங்க?" என கேட்டார். அதற்கு நன்றி தெரிவித்து கமல் கொடுத்த ரியாக்ஷன் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.
- முதலீடுகளின் அளவு மிகக்குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும்.
- தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
முதலீடுகளின் அளவு மிகக்குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும். இயல்பாக வரக்கூடிய சிறிதளவு முதலீடுகளையும், வருவதற்கு வழியில்லாத பெருமளவு முதலீடுகளையும் தாம் ஈர்த்து வந்ததாக முதலமைச்சர் நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது.
ஜெர்மனியில் திரட்டப்பட்ட ரூ.7020 கோடி முதலீடுகளில் குறைந்தது ரூ.5319 கோடி முதலீடு விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான். இங்கிலாந்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.8496 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் அனைத்துமே விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான்.
மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டு பயணத்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் 89 சதவீதம், அதாவது ரூ.13,815 கோடிக்கான முதலீடுகள் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை. இவற்றை தமிழ்நாட்டில் இருந்தே ஈர்த்திருக்க முடியும். இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டு இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கு முதலமைச்சர் சென்றிருக்கத் தேவையில்லை.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் இத்தகைய நாடகங்களை தி.மு.க. அரசு நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அ.தி.மு.க. விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் போகும் நிலையை மக்கள் ஏற்படுத்துவார்கள்.
- எடப்பாடி பழனிசாமியையும் காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர்தான் செய்வார்.
சென்னை:
சைதாப்பேட்டையில் நவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் 28.75 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், துணை மேயர் மு. மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கல்வியும், சுகாதாரமும் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என்று முதல்வர் கூறுவார்.
கலைஞர் ஆட்சியில் சுகாதாரத்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டங்கள்தான் இன்று சென்னையை இந்தியாவின் மெடிக்கல் கேப்பிட்டல் என்று சொல்லும் அளவிற்கு சொல்ல வைத்துள்ளது.
மக்களுக்கு மருத்துவ சேவைகள் வீடு தேடி செல்ல வேண்டும் என்பதற்காக மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
பல்வேறு திசைகளில் இருந்து நம்முடைய அரசுக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்து வருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஐ.நா. சபையின் விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது. சுகாதாரத்துறையில் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் உள்ளார் மக்களை சந்திக்கிறார். 10 நாள் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது அங்கு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல் என்னெல்லாம் தடங்கள் செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு இருந்தார்கள். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விரைவில் அ.தி.மு.க. ஆம்புலன்சில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் அ.தி.மு.க.வை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் நிலைமை ஏற்படும். எடப்பாடி பழனிசாமியையும் காப்பாற்றும் பொறுப்பை முதலமைச்சர்தான் செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் கால்வாயை ரூ. 30கோடி செலவில் மேம்படுத்தும் திட்டத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில், இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை
பயன்படுத்த பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில், தனது இசையில் ஏற்கனவே வேறு திரைப்படங்களில் வெளியான இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், இதற்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் வக்கீல் மூலமாக அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த பட தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை. தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி குட் பேட் அக்லி படத்தில், இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான திரைப்படத்தில் உள்ள மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.
மனு குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.






