என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருப்போரூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த ஆலத்தூரை சேர்ந்த 13 வயது சிறுமி பையனூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    நேற்று மாலை மாணவியின் தாய் மற்றும் அக்காள், அண்ணன் ஆகியோர் வெளியில் சென்றுவிட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தாள்.

    இரவு அவர்கள் திரும்பி வந்தபோது மாணவி கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது ஆடை அலங்கோலமாக கிடந்தது. அவரை கற்பழித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இது குறித்து திரூப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஹதிமானி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி அதே பகுதியில் உள்ள அசோக்குமார் என்பவரது வீட்டில் நின்றது.

    இதையடுத்து அசோக் குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் மாணவியை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அசோக்குமார் போலீசில் அளித்துள்ள வாக்கமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    மாணவியின் குடும்பத்தில் உள்ளவர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. எனவே எப்போது வேண்டுமானாலும் அவர்களது வீட்டுக்கு சென்று வருவேன். மாணவியிடம் பழகியபோது அவர் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது.

    நேற்று மாலை மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து சென்றேன். மாணவியிடம் ஆசைக்கு இணங்குமாறு கூறியதால் அவள் என்னை கண்டித்தாள்.

    இதையடுத்து மாணவியின் வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக கற்பழித்தேன். பின்னர் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து தப்பிச் சென்றுவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கொலை நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய போது கறுப்பு கலர் டி-சர்ட் அணிந்த வாலிபர் சென்றுவந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

    இதனை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மோப்ப நாயும் அசோக்குமாரின் வீட்டில் நின்றதால் சந்தேகத்தின் பேரில் முதலில் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அப்போது கொலை செய்யவில்லை என அவர் கூறிவிட்டார்.

    இது தொடர்பாக அசோக் குமாரின் நண்பர்களிடம் விசாரித்த போது ஒருவரது வீட்டுக்கு அவர் சென்று வந்ததும் அங்கு டி-சர்ட்டை கழற்றி வீசி சென்றதும் தெரிந்தது.

    மேலும் மாணவியின் வீட்டு வாசலில் அசோக்குமாரின் செருப்பு கிடந்தது. கொலை செய்த பதட்டத்தில் அவர் செருப்பை விட்டுச்சென்றது தெரிந்தது. இதனை வைத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் மாணவியை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலையூர் அருகே, தண்ணீர் லாரிக்கு பின்னால் படுத்து தூங்கிய 2 தொழிலாளிகள், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். லாரியை பின்னோக்கி எடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    தேனியை சேர்ந்த மணிமாறன் (வயது 23), நாமக்கல்லை சேர்ந்த அஜித்குமார்(20). இருவரும் போர்வெல் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த சேலையூர் அருகே கோயிலம்சேரியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் போர்வெல் லாரியை நிறுத்தி இருந்தனர்.

    அதன் அருகே ஏராளமான தனியார் தண்ணீர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு தண்ணீர் லாரிக்கு பின்புறம் மணிமாறன், அஜித்குமார் இருவரும் தரையில் படுத்து தூங்கினர்.

    இவர்கள் இருவரும் லாரிக்கு பின்னால் படுத்து இருப்பதை கவனிக்காமல் நேற்று அதிகாலையில் அந்த தண்ணீர் லாரியை டிரைவர் மணிகண்டன் (30) பின்னோக்கி எடுத்தார். அப்போது கீழே படுத்து இருந்த மணிமாறன், அஜித் குமார் இருவர் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியது.

    இதில் மணிமாறன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இடுப்பு பகுதியில் நசுங்கியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அஜித்குமாரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மதியம் அஜித்குமாரும் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவரான மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    குடிபோதையில் கார் ஓட்டியதில் கட்டுப்பாட்டை இழந்த கார் கடைகள் மீது மோதியது. 2 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    போரூர்:

    பூந்தமல்லி மலையம் பாக்கம் நேரு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது நண்பர் வடபழனியை சேர்ந்த கவுதமன். சுரேஷ் நேற்று இரவு கவுதமன் வீட்டுக்கு சென்று இருந்தார். இன்று அதிகாலை கவுதமன் தனது காரில் சுரேசை பூந்தமல்லியில் உள்ள வீட்டுக்கு கொண்டு விட அழைத்து சென்றார். காரை சுரேசே ஓட்டினார்.

    ஆற்காடு சாலையில் வளசரவாக்கத்தில் உள்ள பள்ளி அருகே வந்தபோது கார் திடீரென்று கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கிருந்த கடைகள் மீது மோதி விட்டு ரோட்டோரம் இருந்த விளம்பர பலகைகள் மீது மோதி நின்றது.

    இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. கவுதமனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷ், கவுதமனிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், கவுதமனை கைது செய்தனர்.

    கார் தாறுமாறாக ஓடிய சமயத்தில் பிளாட்பாரத்தில் யாரும் படுத்திருக்கவோ, நின்று இருக்கவோ இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    குதிரை பேரம் மூலம் ஆட்சியை தக்கவைக்க அரசு தினமும் போராடுகிறது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    இன்று காலை காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் திமுகவினரால் தூர் வாரப்பட்ட தாமரைக்குளத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் நலனை கருத்தில் கொண்டு தி.மு.க. பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர் வாரி வருகிறோம்.

    ஆட்சி அதிகாரத்தினை கையில் வைத்துள்ள அ.தி.மு.க. இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை செய்ய வேண்டும். நேற்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. வினரால் தூர் வாரப்பட்ட 16 குளங்கள் மற்றும் 2 ஏரிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.

    இது போன்று தமிழகம் முழுவதும் ஏராளமான குளங்கள் மற்றும் ஏரிகளை தூர் வாரும் பணியினை தி.மு.க. வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நலன் குறித்த எந்த செயல்பாடும் இல்லை. நாளும் குதிரை பேரத்தின் மூலம் ஆட்சியை தக்க வைக்க அ.தி.மு.க. போராடுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் உத்திரமேரூரில் தி.மு.க.வினரால் தூர் வாரப்பட்ட மாதிரியம்மன் குளம் மற்றும் செய்யூர் ஏரி போன்றவற்றினை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் க.சுந்தர் எம்.எல்.ஏ., தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், ஆர்.டி. அரசு, புகழேந்தி, நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், நிர்வாகிகள் சிறுவேடல் செல்வம், வி.எஸ். ராமகிருஷ்ணன், பி.எம். குமார், சி.வி.எம்.அ.சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேற்று இரவு மு.க. ஸ்டாலின் சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்கு அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

    இதைத்தொடர்ந்து அண்ணா நினைவு இல்லத்தின் அருகே தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தளபதி படிப்பகத்தினையும், காஞ்சீபுரம், திருக்கச்சி நம்பித்தெருவில் கலைஞர் பவளவிழா மாளிகையில் அமைக்கப்பட்ட அண்ணா நினைவு நூலகத்தினையும் திறந்து வைத்தார்.

    காஞ்சீபுரத்தில் நாளை அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் நாளை அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் கழக வளர்ச்சி குறித்து செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோ சனை கூட்டம் மாவட்ட கழக பிரதிநிதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் ஏற்பாட்டின் பேரில் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    கூட்டத்தில் வா.மைத்ரேயன் எம்.பி., கழக அவைத் தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி. முனுசாமி, நத்தம் விசுவநாதன், செம்மலை, பாண்டியராஜன் முன்னாள் அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன், நிர்வாகிகள் ஜெ.சி.டி.பிரபாகர், ராஜ கண்ணப்பன், மனோஜ்பாண்டியன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளார்கள்.

    இந்த கூட்டத்திற்கான இடம் முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் 4 ஏக்கரில் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த கூட்டம் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணிக்கு ஒரு திருப்புமுனை கூட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகளை வரவேற்கும் வகையில் வாலாஜாபாத்திலிருந்து கட்சி கொடி, பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழக பிரதிநிதியும் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் செய்து வருகிறார்.

    நடிகர் கமல்ஹாசன் மற்றவர்கள் இயக்கி இயங்கக்கூடியவர் இல்லை. யாரையும் இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என்று தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறி உள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படாததால் மாணவர்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளான பின்னர், இப்போது பிரதமரை சென்று பார்த்து உள்ளனர். இவர்கள் ஓராண்டுக்கு விலக்கு கேட்டு உள்ளார்களா? அல்லது ‘நீட்’ தேர்வே தமிழகத்துக்கு தேவை இல்லை என்று கேட்டு உள்ளார்களா? என்ற தெளிவான விவரங்கள் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி மீது எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை.

    தி.மு.க. மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் இருக்கிறார்கள், செயல் தலைவர் இருக்கிறார். எங்களுக்கு வேறு யாரும் தேவை இல்லை. நடிகர் கமல்ஹாசன் மற்றவர்கள் இயக்கி இயங்கக் கூடியவர் இல்லை. யாரையும் இயக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. இத்தனை ஆண்டுகாலமாக தி.மு.க. யாருடைய உதவியும் இல்லாமல் தான் செயல்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு தி.மு.க. உதவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மகனை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து குடும்ப சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்வதாக தாய்-சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை புதுகாலனியை சேர்ந்தவர் ஞானசேகரன்(வயது 37). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “போதை பழக்கம் இல்லாத தன்னை தனது தாய் விசாலாட்சி மற்றும் சகோதரி ஆர்த்தி ஆகியோர் முடிச்சூரில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து குடும்ப சொத்துகளை அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்”கூறி இருந்தார்.

    இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி குரோம்பேட்டை போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஞானசேகரன் கூறிய புகார் உண்மை என்பது தெரிந்தது. இதையடுத்து அவருடைய தாய் விசாலாட்சி(65), சகோதரி ஆர்த்தி(40) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் விசாரணையில் ஞானசேகரனின் தம்பி குணசேகரன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தது தெரிந்தது. கைதான தாய்-மகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 
    பல்லாவரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவர் பலியானார். மேலும் 2 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அண்ணா பிரதான சாலையைச் சேர்ந்தவர் ரோகித் (17). இவர் அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. எனவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    காய்ச்சலின் தீவிரம் அதிகமாகவே இவர் குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    அதை தொடர்ந்து அவரது உடலை பெற்றுக் கொண்டு பெற்றோர் தங்களது சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்தனர்.

    மாணவர் ரோகித் பலியான நிலையில் அனகா புத்தூர் அண்ணா பிரதான சாலை 3-வது தெருவைச் சேர்ந்த 2 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கலையன்பன் (4), காவியா (8) ஆகிய 2 பேர் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அனகாபுத்தூரில் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் உள்ளது. எனவே அவற்றை அகற்றியும், கால்வாய்களை தூர்வாரியும் பிளீச்சிங் பவுடர் தூவியும் துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும். இங்கு மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போலி நியமன ஆணை வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மகேந்திரன் பட்டதாரியான இவர் வேலைக்காக தனியார் இணையதளத்தில் தனது விபரங்களை பதிவு செய்து வைத்து இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், ‘‘உங்களுக்கு துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல நிறுவனத்தில்வேலை கிடைத்து உள்ளது. பணியில் சேருவதற்கு முன்பு ரூ. 24 ஆயிரம் தர வேண்டும்’ என்றார்.

    மேலும் துரைப்பாக்கத்தில் குறிப்பிட்ட பகுதியில் நிற்கும் வாலிபரிடம் பணத்தை கொடுத்து பணி நியமன அணையை பெற்றுக் கொள்ளும்படி கூறி இருந்தார்.

    இதனை நம்பிய மகேந்திரன் ரூ. 24 ஆயிரத்துடன் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர் பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணையை வழங்கினார்.

    அதனை மகேந்திரன் சரிபார்த்த போது போலி நியமன ஆணை என்பது தெரிந்தது. இதையடுத்து பணம் வாங்கிய வாலிபரை மடக்கி பிடித்து துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தார்.

    விசாரணையில் அவன் தி.நகரை சேர்ந்த சுபன் என்பது தெரிந்தது. அவனிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து கைதான சுபன் கூறும்போது, ‘எனக்கு பணம் வாங்க வேண்டியவரின் விபரம் மற்றும் செல்போனில் தெரிவிப்பார்கள். நான் பணத்தை பெற்று கோயம்பேட்டில் நிற்பேன். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கமி‌ஷன் கொடுப்பார்கள். அவர்களை பற்றிய விபரம் தெரியாது’ என்று கூறியுள்ளார்.

    எனவே இணையதளம் மூலம் வேலை தேடும் பட்டதாரிகளை குறிவைத்து பெரிய கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. அவர்கள் ஏராளமானோரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
    ஆலந்தூர்:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.

    விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதியை நேரில் சந்தித்து, நீட் தேர்வு பிரச்சினையால் மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள மனகுழப்பங்கள், கவலைகள் குறித்து விளக்கமாக பேசினேன். “தமிழகத்தில் 6 மாதத்திற்கு முன் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதா மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. உங்கள் பதவி காலம் முடிவதற்கு முன் மத்திய அரசிடம் பேசி சட்ட மசோதாவிற்கு முழுவடிவம் தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தேன்.

    மத்திய அரசு சட்ட மசோதாவை அனுப்பினால் நிச்சயமாக செய்வேன் என்று என்னிடம் தெரிவித்தார். தமிழகத்தில் நீட் பிரச்சினையால் மோசமான சூழல் உள்ளது.

    இந்த ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வுகளை எழுதி உள்ளார்கள். 16 ஆயிரம் மாணவர்கள்தான் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக் கிறார்கள். ஆனால் நீட் தேர்வில் கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அரசிடம் உள்ள 3,372 மருத்துவ இடங்களில் 3 ஆயிரம் இடங்கள் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் கிடைக்கும். மற்ற இடங்கள் தான் சமச்சீர் பாட திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களுக்கு கிடைக் கும்.

    இது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும், தமிழகத்துக்கும் செய்யப்பட்டு உள்ள அநீதி. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கும் அளிக்கும் மசோதாவை மத்திய அரசு ஜனாதிபதிக்கு அனுப்பி விரைவில் சட்டமாக கொண்டு வரவேண்டும்.

    தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் இருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியது உண்மை. அவர் தவறாக சொல்கிறார் என்பதை ஏற்கமுடியாது.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார். 
    முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கடைசி சட்டசபை கூட்டத் தொடர் இது என்று ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் மைத்ரேயன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் வருகிற 23-ந்தேதி எம்.ஜி. ஆர். பிறந்தநாள் விழா மற்றும் கழக வளர்ச்சி குறித்த செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கால்கோள் விழா நடந்தது. இதில் மைத்ரேயன் எம்.பி. கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    23-ந்தேதி ஆடி அமாவாசை அன்று நடைபெறும் இந்த கூட்டம் ஒரு திருப்பு முனை கூட்டமாக அமையும். குடியரசு தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்கள் வரும் என்று பரவலாக தமிழகத்தில் பேசப்படுகிறது.

    கூவத்தூர் கட்சியின் இந்த சட்டமன்ற கூட்டத் தொடர்தான் கடைசியாக அமையும். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும். ஓ.பன்னீர் செல்வம் மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

    நடிகர் கமலஹாசன் போன்ற பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் தங்களின் கருத்துக்களை கூறலாம். ஏனென்றால் இது ஜனநாயக நாடு.

    ஊழலுக்காக சிறை தண்டனை பெற்ற ஒருவர் அங்கு சொகுசாக வாழ்வதற்கு அங்கும் லஞ்சம் கொடுத்தது மிக பெரிய குற்றம். அதனை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபாவை பணியிடம் மாற்றம் செய்தது மிகவும் தவறு. இதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன், டாக்டர் ஜி.சம்பந்தம், புத்தளி ஞானசேகரன், வழக்கறிஞர் ஆர்.வி.உதயன், பிரேமா ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    திருப்போரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம் மற்றும் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த மடையத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் டில்லி பாபு, விவசாயி. நேற்று இரவு அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூங்கினார்.

    நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த ரூ. 3½ லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இன்று அதிகாலை டில்லிபாபு மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்த போது தான் வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    டில்லிபாபு சீட்டு கட்டிய பணம் ரூ. 1½ லட்சத்தை வாங்கி வீட்டில் வைத்து இருந்தார். இதனை அறிந்த அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    இதேபோல் அதே பகுதி பிள்ளையார்கோவில் தெருவில் வசிக்கும் டைல்ஸ் காண்டிராக்டர் தனுசின் வீட்டுக்குள்ளும் கொள்ளை கும்பல் புகுந்தனர்.

    பீரோவில் இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்கம், 20 பவுன் நகையை சுருட்டி தப்பிச் சென்றுவிட்டனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
    ×