search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் பழனிசாமி"

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் நடைபெறவுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அவர் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

    இரவு 7 மணிக்கு நடக்கும் பிரதமர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார்.

    அவருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸ், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர்.
    தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை  நடத்தினார். 

    இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 

    கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை  போக்குவதற்கான வழி முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய மந்திரி நிதின் கட்கரி டுவிட்டர் செய்தியில், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை என்று பதிவிட்டு இருந்தார். அவரது டுவிட்டர் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,  தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் இந்த திட்டம் மிகவும் முக்கியமானது. கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
    ஆசிய தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianAthleticChampionship #Gomti #EdappadiPalanisamy
    சென்னை:

    23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கம் பெற்றார். இவரது வெற்றியை கொண்டாடும் வகையில், கோமதியின் சொந்த ஊரில் கிராம மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



    இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கோமதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுபோன்று சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianAthleticChampionship #Gomti #EdappadiPalanisamy
    இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜீவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார். #RajivCase #Nalini #EdappadiPalaniswami
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன், நளினி ஆகியோர்  உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், இவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.



    இந்நிலையில், இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜிவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக, வேலூர் சிறையில் உள்ள நளினி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. விடுதலை தொடர்பான உத்தரவை ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கி காத்திருக்கும்போது ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

    இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார். #RajivCase #Nalini #EdappadiPalaniswami
    சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #UdumalaiRadhakrishnan
    சென்னை:

    சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்தார்.

    இதையடுத்து, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



    அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை முதல்வர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் உள்பட பலர் சந்தித்து நலம் விசாரித்தனர். #UdumalaiRadhakrishnan
    வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா ரூ.2000 செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami #TNAssembly
    சென்னை:

    கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தால் பாதிக்கப்பட்ட, வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் அவர்களது வங்கி கணக்குகளில் தலா ரூ.2000 செலுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #TNCM #EdappadiPalaniswami #TNAssembly
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsPalanisamy
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.



    இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsPalanisamy
    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #JactoGeo #TNGovt #EdappadiPalanisamy
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்புக்கு ஆதரவாக, தலைமைச் செயலக ஊழியர்களும் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு நாளை விடுப்பு கிடையாது. போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நம் உரிமைகளை சில நேரம் விட்டுக்கொடுத்து மக்கள் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும்.

    சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மக்கள் நலனுக்காகவும் பணியாற்றுவது நம்முடைய கடமையாகும். பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். பல மாநிலங்களில் ஊதிய உயர்வு முறையாக வழங்கப்படாத நிலையில், நிலுவையை  தமிழகம் வழங்கியது என குறிப்பிட்டுள்ளார்.  #JactoGeo #TNGovt #EdappadiPalanisamy
    தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    சென்னை:

    மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்து செல்லும்போது பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி 17 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும், கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது. #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்பவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. அதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.



    இளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் நிதி இருந்தால் தான் அதிக ஊதியமும், சலுகையும் வழங்க முடியும்.

    எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். ஆசிரியர்களை குறை சொல்வதாக நினைக்கக் கூடாது. நிலைமையை எண்ணிப்பார்த்து ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற இரு சக்கரமும் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

    சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மேசையின் மீது ஏறி தி.மு.க.வினர் நாட்டியம் ஆடுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் திமுகவினரை சபாநாயகர் மன்னித்தது தான் அதிமுகவின் பெருந்தன்மை என தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 24-ம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது. #TN #TNCabinetMeet
    சென்னை:

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் டிசம்பர் 24-ம் தேதி பகல் 12 மணிக்கு கூடுகிறது.



    இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட், மேகதாது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #TN #TNCabinetMeet
    ×